9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , ஓ என் சமகாலத் தோழர்களே ! & உயிர்வகை - இயங்கலைத்தேர்வு / 9th TAMIL - EYAL 4 - ONLINE TEST - QUESTION & ANSWER

 


தினம் ஒரு தேர்வு 

9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 

கவிதைப்பேழை - ஓ , என்

சமகாலத்தோழ்களே ! & உயிர்வகை

வினா உருவாக்கம் - 

' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை.

1) ஓ , என் சமகாலத் தோழர்களே! - என்ற
கவிதையின் ஆசிரியர் -----

அ) கண்ணதாசன்
ஆ) வாலி
இ ) வைரமுத்து
ஈ) மு.மேத்தா

விடை : இ ) வைரமுத்து

2) கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும்
புதினத்திற்கு சாகித்திய அகாதமி விருது
கிடைத்த ஆண்டு ------

அ) 2000
ஆ) 2003
இ ) 2005
ஈ) 2007

விடை : ஆ ) 2003

3) இந்தியாவின் சிறந்த
பாடலாசிரியருக்கான விருதினை
வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார் ?

அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஏழு
ஈ) ஒன்பது

விடை : இ ) ஏழு

4) கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் ----- வானம் தூரமில்லை.

அ) கிழக்கு
ஆ) மேற்கு வானம்
இ ) செவ்வானம்
ஈ) அந்தி வானம்

விடை : அ  ) கிழக்கு

5) -------  என்னும் வாகனம் மீதில் ஆளும்
தமிழை நிறுத்துங்கள் எனக் கவிஞர்
கூறுகிறார்.

அ) விமானம்
ஆ) செயற்கைக்கோள்
இ) அறிவியல்
ஈ) கணிப்பொறி

விடை : இ ) அறிவியல்

6) யாருடைய பெருமையைக்
கணிப்பொறியினுள் பொருத்தக் கவிஞர்
கூறுகிறார்?

அ ) இராசராசன்
ஆ) கரிகாலன்
இ) பொற்கைப்பாண்டியன்
ஈ ) இளஞ்சேரன்

விடை : ஆ ) கரிகாலன்

7) பின்வரும் தொடர்களைப் படித்து நான்
யார் என்று கண்டுபிடிக்க. 

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன். 

எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்.

இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்.

அ) இணையம்
ஆ) தமிழ்
இ )  கணினி
ஈ) ஏவுகணை

விடை : ஆ ) தமிழ்

8) வலவன் ஏவா வான ஊர்தி - என்ற பாடலடி இடம்பெற்ற நூல் ------

அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ ) பரிபாடல்
ஈ ) மதுரைக்காஞ்சி

விடை : ஆ ) புறநானூறு

9) இலக்கணக்குறிப்புத் தருக - பண்பும்
அன்பும்

அ) உம்மைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ ) எண்ணும்மை
ஈ ) பண்புத்தொகை

விடை : இ ) எண்ணும்மை

10) சொன்னோர் - இலக்கணக்குறிப்பு

அ) பெயரெச்சம்
ஆ) வினையாலணையும் பெயர்
இ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
ஈ ) அன்மொழித்தொகை

விடை : ஆ ) வினையாலணையும் பெயர்

11) தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது ?

அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) அமிர்தசாகரம்

விடை : அ ) தொல்காப்பியம்

12) தொல்காப்பியம் எழுத்து , சொல்,
பொருள் என மூன்று அதிகாரங்களையும் ------- இயல்களையும் கொண்டுள்ளது.

அ) 07
ஆ) 13
இ )  17
ஈ ) 27

விடை : ஈ ) 27

13 ) பிறப்பியலில் எழுத்துகள் பிறக்கும்
இடங்கள் --------   அடிப்படையில்
விளக்கப்பட்டுள்ளது.

அ) உளவியல்
ஆ) உடற்கூற்றியல்
இ) தத்துவவியல்
ஈ ) வானியல்

விடை : ஆ ) உடற்கூற்றியல்

14 ) ஒன்றறி வதுவே உற்றறிவதுவே - இதில் உற்றறிதல் என்பதன் பொருள் -----

அ) தொடுதல் உணர்வு
ஆ) சுவைத்தல்
இ) நுகர்தல்
ஈ) பார்த்தல்

விடை : அ ) தொடுதல் உணர்வு

15 ) ஓரறிவு உயிரித்திற்கு எடுத்துக்காட்டு

அ) புல் , மரம்
ஆ) சிப்பி , நத்தை
இ) நண்டு , தும்பி
ஈ) பறவை , விலங்கு

விடை : அ ) புல் , மரம் 

16 ) தட்டான் தாழப்பறந்தால் தப்பாமல் ----
வரும்

அ) புயல்
ஆ) புகை
இ) மழை
ஈ ) வெயில்

விடை : இ ) மழை 

17) ஆறாவது அறிவு ------- ஆல் 
அறியப்படுவது.

அ) கேட்டல்
ஆ) காணல்
இ) மனம்
ஈ) சுவைத்தல்

விடை : இ ) மனம்

18) நான்கறிவு உயிரினத்திற்குச் சான்று

அ) எறும்பு
ஆ) கரும்பு
இ) நண்டு
ஈ) பறவை

விடை : இ ) நண்டு

19 ) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து
உற்றறியும் ஐம்புல உணர்வுகளின் மூலமாக நாம் பெறுவது ------

அ) அறிவு
ஆ) பணம்
இ  )  தானியம்
ஈ) மழை

விடை : அ ) அறிவு 

20 ) உணர்ந்தோர் - இலக்கணக்குறிப்புத் தருக.

அ) வியங்கோள் வினைமுற்று
ஆ) தொழிற்பெயர்
இ  )  பண்டுத்தொகை
ஈ) வினையாலணையும் பெயர்

விடை : ஈ ) வினையாலணையும் பெயர்

***************   **************   ***********


Post a Comment

0 Comments