9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல்3 - கவிதைப்பேழை - மணிமேகலை - வினா / 9th TAMIL - ONLNE TEST - QUESTION &;ANSWET'

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 3 - கவிதைப்பேழை 

மணிமேகலை - இயங்கலைத்தேர்வு 

வினாக்களும் விடைகளும்

வினா உருவாக்கம் 

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் ,மதுரை.

****************   **************   ***********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்   ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

***************     ****************    ************

1) சிலப்பதிகாரமும் ,------- ம் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

அ) மணிமேகலை

ஆ) சீவக சிந்தாமணி

இ ) வளையாபதி

ஈ) குண்டலகேசி

விடை : அ ) மணிமேகலை

2) உழைக்கும் மக்களுக்கு உற்சாகம் தந்து ஓய்வு தருவது -----

அ) பயணம்

ஆ) கல்வி

இ) விழா

ஈ) வேலை

விடை : இ ) விழா

3 ) மணிமேகலைக் காப்பியத்தை
இயற்றியவர் ------ 

அ) இளங்கோவடிகள்

ஆ) திருத்தக்கத்தேவர்

இ) சீத்தலைச்சாத்தனார்

ஈ) கம்பர்

விடை : இ ) சீத்தலைச்சாத்தனார்

4) மணிமேகலைக் காப்பியம் ------ சமயச் சார்புடையது.

அ) சைவம்

ஆ) வைணவம்

இ ) சமணம்

ஈ) பௌத்தம்

விடை : ஈ ) பௌத்தம்

5) மணிமேகலையில் உள்ள
காதைகளின் எண்ணிக்கை ------

அ) 10

ஆ) 15

இ) 20

ஈ) 30

விடை : ஈ ) 30

6) தண்டமிழ் ஆசான் என சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் ------

அ) கம்பர்

ஆ) கபிலர்

இ ) இளங்கோவடிகள்

ஈ) ஔவையார்

விடை : இ ) இளங்கோவடிகள்

7) விழாவறை காதையில் குறிப்பிடப்படும் நகரம் ------

அ) மதுரை

ஆ) வஞ்சி

இ) புகார்

ஈ) தொண்டி

விடை : இ ) புகார்

8) இந்திர விழா  ------  நாட்கள்நடைபெறும்.

அ) 05

ஆ) 10

இ) 18

ஈ) 28

விடை : ஈ ) 28

9) தாமம் என்பதன் பொருள் ------

அ) பூ

ஆ) மரம்

இ) மாலை

ஈ) செடி

விடை : இ ) மாலை

10 ) ஒட்டிய சமயத்து உறுபொருள்
வாதிகள் ------ பாங்கறிந்து ஏறுமின்.

அ) விழா மண்டபம்

ஆ) அரண்மனை

இ) பட்டி மண்டபத்துப்.

ஈ) விவாத அரங்கம்

விடை : இ ) பட்டிமண்டபத்துப்

11 ) ஐம்பெருங்குழுவில்
அமைச்சர், சடங்குசெய்விப்போர் , -------, 
தூதர் , சாரணர் ஆகியோர்
இடம்பெற்றிருப்பர்.

அ) புலவர்

ஆ) படைத்தலைவர்

இ) குரு

ஈ) வெளிநாட்டுப்பயணி

விடை : ஆ ) படைத்தலைவர்

12) கூலம் என்பதன் பொருள் -------

அ) பணம்

ஆ) தானியம்

இ) மரம்

ஈ) மானியம்

விடை : ஆ ) தானியம்

13) தோரணவீதியும், தோமறு கோட்டியும் - இலக்கணக் குறிப்புத் தருக.

அ) எண்ணும்மைகள்

ஆ) உம்மைத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) வினைத்தொகை

விடை : அ )  எண்ணும்மைகள்

14 ) மாற்றுமின் , பரப்புமின் - இலக்கணக் குறிப்பு -----

அ) பெயரெச்சம்

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ) ஏவல் வினைமுற்றுகள்

 ஈ) பண்புத்தொகை

விடை : ஏவல் வினைமுற்றுகள்

15 ) நன்பொருள் , தண்மணல் -
இலக்கணக் குறிப்பு ------

அ) வினைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) உம்மைத்தொகை

விடை : ஆ ) பண்புத்தொகை
Post a Comment

0 Comments