9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல்
3 - பண்பாடு - திருக்குறள் -
இயங்கலைத் தேர்வு
வினா உருவாக்கம் :
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு தமிழாசிரியர், மதுரை.
1) உலகப் பொதுமறை என அழைக்கப்படும் நூல் -----
அ) திருக்குறள்
ஆ) புறநானூறு
இ ) அகநானூறு
ஈ ) திரிகடுகம்
விடை : அ ) திருக்குறள்
2) கீழ்க்காணும் சிறப்புப் பெயர்களில்
திருவள்ளுவரைக் குறிக்காதது எது?
அ) நாயனார்
ஆ) தெய்வப்புலவர்
இ ) பெருநாவலார்
ஈ) கவியோகி
விடை : ஈ ) கவியோகி
3) முற்காலத்தில் எழுதப்பட்ட திருக்குறள்
உரைகளுள் சிறந்த உரை -----
அ) மணக்குடவர் உரை
ஆ) பரிமேலழகர் உரை
இ) காளிங்கர் உரை
ஈ) தருமர் உரை
விடை : ஆ ) பரிமேலழகர் உரை
4) திருக்குறளைப் போற்றும் பாடல்களின்
தொகுப்பே------ நூல்.
அ) நான்மணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) பிள்ளைத்தமிழ்
ஈ) குறள் எழுச்சிப்பாமாலை
விடை : ஆ ) திருவள்ளுவமாலை
5) திருக்குறள் ------ நூல்களுள் ஒன்று.
அ ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேற்கணக்கு
இ) ஐம்பெருங்காப்பியம்
ஈ) ஐஞ்சிறுங்காப்பியம்
விடை : அ ) பதினெண்கீழ்க்கணக்கு
6) திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு -------
அ) 1802
ஆ) 1812
இ) 1822
ஈ) 1832
விடை : ஆ ) 1812
7) தீரா இடும்பை தருவது எது?
அ) ஆராயாமை , ஐயப்படுதல்
ஆ) குணம் , குற்றம்
இ)பெருமை , சிறுமை
ஈ) நாடாமை , பேணாமை
விடை : அ ) ஆராயாமை , ஐயப்படுதல்
8) திருக்குறள் அகரத்தில் தொடங்கி ------
ஒற்றில் முடிகிறது.
அ)யகர
ஆ) மகர
இ) னகர
ஈ) லகர
விடை : இ ) னகர
9 ) திருக்குறளில் இருமுறை வரும் ஒரே
அதிகாரம் எது?
அ) பொறையுடைமை
ஆ) கேள்வி
இ ) வினைத்தூய்மை
ஈ) குறிப்பறிதல்
விடை : ஈ ) குறிப்பறிதல்
10) செல்வத்துள் செல்வம் -----அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
அ) பொருட்செல்வம்
ஆ) கல்விச்செல்வம்
இ ) செவிச்செல்வம்
ஈ) பொற்செல்வம்
விடை : இ ) செவிச்செல்வம்
11) தாயின் பசியைக் கண்டபோதும் -----
பழிக்கும் செயல்களைச் செய்யாதே .
அ) சான்றோர்
ஆ) மூத்தோர்
இ) ஆசிரியர்
ஈ) நண்பர்
விடை : அ ) சான்றோர்
12) குறளோவியம் என்ற நூலை
எழுதியவர் யார் ?
அ) மகாகவி பாரதியார்
ஆ) பாவேந்தர் பாரதிதாசன்
இ) அறிஞர் அண்ணா
ஈ) கலைஞர் மு.கருணாநிதி
விடை : ஈ ) கலைஞர்.மு.கருணாநிதி
13 ) திருக்குறள் மூலத்தை முதன்முதலில்
அச்சிட்டவர் ------
அ) உ.வே.சா
ஆ) வ.உ.சி.
இ) தஞ்சை ஞானப்பிரகாசர்
ஈ) ஆபிரகாம் பண்டிதர்
விடை : இ ) தஞ்சை ஞானப்பிரகாசர்.
14) திருக்குறளுக்கு முதன்முதலில் உரை
எழுதியவர் ------
அ) டாக்டர்.மு.வரதராசனார்
ஆ) பரிமேலழகர்
இ) மணக்குடவர்
ஈ ) சாலமன் பாப்பையா
விடை : இ ) மணக்குடவர்
15 ) திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில்
முழுமையாக மொழி பெயர்த்தவர் -----
அ) டால்ஸ்டாய்
ஆ) ஜி.யு.போப்
இ) வீரமாமுனிவர்
ஈ) உ.வே.சா.
விடை : ஆ ) ஜி.யு.போப்
16) திருக்குறளில் கோடி என்ற சொல் -----
இடங்களில் இடம்பெற்றுள்ளது.
அ) ஐந்து
ஆ) ஆறு
இ) ஏழு
ஈ) எட்டு
விடை : இ ) ஏழு
17) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்
தத்தம்
------- கட்டளைக் கல்.
அ) செல்வமே
ஆ) கருமமே
இ ) செயலே
ஈ) பிறப்பே
விடை : ஆ ) கருமமே
18) சலத்தால் பொருள் செய்தே மார்த்தல்
பசுமண்
கலத்துநீர் பெய்திரீஇ யற்று -
இக்குறளில் பயின்று வந்துள்ள அணி ----
அ) உவமை அணி
ஆ) பிறிதுமொழிதலணி
இ) ஏகதேச உருவக அணி
ஈ) சொற்பொருள் பின்வருநிலையடயணி
விடை : அ ) உவமை அணி
19 ) குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் - இக்குறளில்
------- அணி வந்துள்ளது.
அ) உருவக அணி
ஆ) இல்பொருள் உவமையணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
ஈ) உயர்வு நவிற்சி அணி
விடை : இ ) சொற்பொருள் பின்வருநிலையணி
20) நுணங்கிய என்ற சொல்லின்
பொருள் ------
அ) அழகான
ஆ) இயல்பான
இ) சிறப்பான
ஈ) நுட்பமான
விடை :ஈ ) நுட்பமான
*************** ************* *************
1 Comments
பதில் நாங்கள் தேர்வுசெய்துபோல் வேண்டும்
ReplyDelete