11 ஆம் வகுப்பு - தமிழ் - அலகுத்தேர்வு - 2 , பிப்ரவரி - 2022 / 11th TAMIL - UNIT TEST 2 - ANSWER KEY

 


அலகுத்தேர்வு - 2 , பிப்ரவரி - 24 - 2022

பொதுத் தமிழ் 11 - ஆம் வகுப்பு

காலம் : 1.30 மணி

மதிப்பெண்கள் : 50

பலவுள் தெரிக.                     8 × 1 = 8

1 ) காவல்மிகு காப்பரண் கொண்ட மதில் சூழ்ந்த கட்டமைப்பு ------ என வழங்கப்பட்டது

அ) தோணிமலை 

ஆ) மலையரண் 

இ) கோட்டை

ஈ) காட்டரண்

விடை : இ ) கோட்டை 

2. மதீனா நகர மக்கள், தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறுவது ------

அ) ஆரணிய காண்டம்

ஆ) விலர்தத்துக் காண்டம்

இ) நுபுவ்வத்துக் காண்டம்

ஈ) ஹிஜிரத்துக் காண்டம்

விடை : ஈ) ஹிஜிரத்துக் காண்டம்

3 ) 'மாநகர்' - இலக்கணக் குறிப்பு தருக.

அ) ஈற்றுப்போலி

ஆ) பண்புத்தொகை

இ) உரிச்சொற்றொடர்

ஈ) வினைத்தொகை

விடை : இ ) உரிச்சொல் தொடர்

4. "உண்டாலம்ம இவ்வுலகம்” என்னும் புறப்பாடல் -------  வகையைச் சார்ந்தது.

அ) இன்னிசை ஆசிரியப்பா

ஆ) நேரிசை ஆசிரியப்பா

இ) நிலைமண்டில் ஆசிரியப்பா

ஈ) அடிமறி மண்டில ஆசிரியப்பா

விடை : ஆ ) நேரிசை ஆசிரியப்பா

5. ஒப்புரவு என்பதன் பொருள் ------

அ) அடக்கமுடையது

ஆ) பண்புடையது

இ) ஊருக்கு உதவுவது

ஈ) செல்வமுடையது

விடை : இ ) ஊருக்கு உதவுவது

6. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ------ நினை

அ) முகக்குறிப்பை அறிந்தவரை

ஆ) எண்ணியதை எண்ணியவரை

இ) மறதியால் கெட்டவர்களை

ஈ) கொல்லேர் உழவரை

விடை : இ ) மறதியால் கெட்டவர்களை

7. சி.சு. செல்லப்பாவின் சாகித்திய அகாதமி விருது பெற்ற படைப்பு எது

அ) வாடிவாசல்

ஆ) சுதந்திர தாகம் 

இ) ஜீவனாம்சம்

ஈ) அகல்விளக்கு

விடை : ஆ ) சுதந்திர தாகம்

8. தமிழ் இதழியல் துறையில் முதன்முதலாக கருத்து படங்களை அறிமுகப்படுத்தியவர்

அ) பாரதிதாசன் 

ஆ) கண்ணதாசன் 

இ) பாரதியார்

ஈ) சுரதா

விடை : இ ) பாரதியார்

II அ) கீழ்வரும் குறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.        1 × 2 = 2

9 ) தமிழர்கள் புகழையும் பழியையும் எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

10. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.


II . ஆ) கீழ்வரும் குறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.      1 × 2 = 2 

11 ) ' கோட்டை' என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

12 ) திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் எவற்றை உணர்த்துகின்றன?

13. இ) கீழ்வரும் குறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.

துஞ்சல் - உறுப்பிலக்கணம் தருக.

14 ) வைகை - சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.

III அ) கீழ்வரும் குறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.           1X4=4

15. "மறுவிலா அரசென இருந்த மாநகர்" - உவமையைப் பொருளுடன் விளக்குக.

16 ) மருந்து. மருத்துவர், மருத்துவம் ஆகியன பற்றித் திருக்குறள் கூறுவன யாவை?

ஆ) கீழ்வரும் சிறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.         1X4 = 4

17. 'மலை. மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது' என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

18. கொற்கை. வஞ்சி..தொண்டி வளாகம் - குறிப்பு எழுதுக.

இ) கீழ்வரும் சிறுவினா ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி.         1X4 = 4

19. தமிழாக்கம் தருக.

1. Just living is not enough. One must have Sunshine; freedom and a little flower - Hans
Anderson,
2. In nature, light creats the colour. In the picture, colour createst the light - Hans Hofmann.
3. Look deep into nature and then su' will - understand everything better - Albert Einstein
Answer:
4. Simplicity is nature's firsy step, and the last of art - Philip James Bailey
Answer:
5. Road were male for journeys not destination - Confucius.

20. பிறிதுமொழிதல் அணியைச் சான்றுடன் விளக்குக.

IV அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                      3X6= 18

21. “மதீனா நகரம் ஒரு வளமான நகரம்" என உமறுப்புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

22. பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?

23. "இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன" - கூற்றினை மெய்பிக்க.

V மனப்பாடப் பகுதி                    4 + 2 = 6
24. 'உண்டால் அம்ம'.......... எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

25. 'தோன்றின்'. எனத்தொடங்கும் குறளை அடிபிறழாமல் எழுதுக.Post a Comment

0 Comments