10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - முதல் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2022 - வினா & விடை /10th SOCIAL SCIENCE - FIRST REVISION TEST - QUESTION & ANSWER

 

முதல் திருப்புதல் தேர்வு - 2022

10 - ஆம் வகுப்பு

சமூக அறிவியல் - வினா & விடை

காலம் : 3.00 மணி     மதிப்பெண்கள் : 100

விடைத்தயாரிப்பு 

திருமதி.ச.இராணி , ப.ஆ , 

இளமனூர் , மதுரை.

அறிவுரைகள் : (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.

குறிப்புகள் : (i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

(ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

குறிப்பு : 1) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 14 X 1 = 14

2) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1.பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ------- ஆவார்.

அ) உட்ரோ வில்சன்

ஆ) லாயிட் ஜார்ஜ்

இ) கிளமென்சோ

ஈ) ஹிட்லர்

விடை : இ) கிளமென்சோ

2. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

அ) ஆகாயப் போர் முறை

ஆ) பதுங்குக் குழிப்போர் முறை

இ) நீர்மூழ்கிக் கப்பல் போர் முறை

ஈ) கடற்படைப் போர் முறை

விடை : ஆ) பதுங்குக் குழிப்போர் முறை

3. ------ ஆம் ஆண்டு லொக்கர்னோ உடன்படிக்கை
கையெழுத்திடப்பட்டது.

அ) 1925

ஆ) 1924

 இ)  1927

 ஈ) 1928

விடை : அ) 1925


4. அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி ,
நாளில் ஏற்பட்டது.

அ) 1929 அக்டோபர் 30 - ஆம்

ஆ) 1930 அக்டோபர் 24 -ஆம்

இ) 1929 அக்டோபர் 24-ஆம்

ஈ) 1930 அக்டோபர் 30 -ஆம்

விடை : இ) 1929 அக்டோபர் 24-ஆம்

5. கூற்று : தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்திப் பொருளாதார தேசியம் எனும் அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.

காரணம் :

அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்கு பொருளாதார உதவி
செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை
உண்டானது.

அ) கூற்று. காரணம் இரண்டும் சரி

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு

ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை

விடை : 

ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

6. பொருத்துக.
 
1) வெள்ளை பயங்கரம் - i) சென்னை

2) இந்திய அரசுச் சட்டம் - ii) இந்தோ - சீனா

3) கண்ணாடி மாளிகை  - iii)1935

4) எம்டன்    - iv) வெர்செய்ல்ஸ்

அ) (1)-(iii), (2)-(iv), (3) - (ii), (4)-(i)

ஆ) (1) - (ii), (2) - (iv), (3) - (iii), (4) - (i)

இ)  (1)-(ii), (2)-(iii), (3) - (iv), (4)-(i)

ஈ)(1) - (iv), (2) - (ii), (3) - (iii), (4) - (i)

விடை : இ)  (1)-(ii), (2)-(iii), (3) - (iv), (4)-(i)

7. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி

அ) பாபர்

ஆ) தராய்

இ) பாங்கர்

ஈ) காதர்

விடை : இ) பாங்கர்

8. ------- உலகின் கூரை' என அழைக்கப்படுகிறது.

அ) பாமீர் முடிச்சு

ஆ) K2

இ) ஆனைமுடி

ஈ) எவரெஸ்ட்

விடை : அ) பாமீர் முடிச்சு

9. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) பஞ்சாப்

ஈ) மத்தியப் பிரதேசம்

விடை : இ) பஞ்சாப்

10. இந்தியாவின் காலநிலை -------  ஆக பெயரிடப்பட்டுள்ளது.

அ) அயன மண்டல ஈரக் காலநிலை

ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை

இ) அயன மண்டல பருவக்காற்று காலநிலை

ஈ) மித அயனமண்டலக் காலநிலை

விடை : இ) அயன மண்டல பருவக்காற்று காலநிலை

11. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?

அ) சட்டப் பிரிவு 352

ஆ) சட்டப் பிரிவு 356

இ) சட்டப் பிரிவு 360

ஈ) சட்டப் பிரிவு 368

விடை : இ) சட்டப் பிரிவு 360

12. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்

அ) குடியரசுத் தலைவர்

ஆ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

இ) ஆளுநர்

ஈ) பிரதம அமைச்சர்

விடை : அ) குடியரசுத் தலைவர்

13. முதன்மை துறை உள்ளடக்கியது ------

அ) வேளாண்மை

ஆ) தானியங்கிகள்

இ) வர்த்தகம்

ஈ) வங்கி

விடை : அ) வேளாண்மை

14. ------- மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு
கருவியாகும்.

அ) தலா வருமானம் (PCI)

ஆ) நிகர நாட்டு உற்பத்தி (NNP)

இ) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)

ஈ) மொத்த நாட்டு உற்பத்தி (GNP)

விடை : அ) தலா வருமானம் (PCI)

பகுதி - II

குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
வினா எண். 28 - க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 10X 2 = 20

15 ) ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள்
எவை?

இங்கிலாந்து - ஆரவாரமான நாட்டுப்பற்று

பிரான்ஸ் - அதிதீவிர நாட்டுப்பற்று

ஜெர்மனி - வெறிகொண்ட நாட்டுப்பற்று

16. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?

* 1894 ஆம் ஆண்டு ஜப்பான் சீனாவின் மீது போர் தொடுத்தது.

* சீனாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகை வியக்க வைத்தது.

* இதை ஐரோப்பிய சக்திகள் விரும்பவில்லை.

17. முஸ்தபா கமால் பாட்சாவகித்த பாத்திரமென்ன?

* துருக்கியை மீண்டும் சிறந்த நாடாக்கினார்.

* விடுதலை பெற்றுத்தந்தார்.

* நவீனமயமாக்கி எதிர்மறை எண்ணங்களைப் போக்கினார்.


18. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத்
தாக்கத்தை ஏற்படுத்தியது?

* உள்நாட்டு உற்பத்திக்கு மரண அடி கொடுத்தது.

* விவசாயிகள் அதிகவரி செலுத்தினர்.

* அரசுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பணம் இரண்டு மடங்காயிற்று.

* உயிர் பிழைக்கத் தங்களிடம் உள்ள தங்கம் , வெள்ளி விற்க வேண்டிய நிலை வந்தது.

19. “வெப்ப குறைவு விகிதம்” என்றால் என்ன?

புவிப்பரப்பில் இருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர்  உயரத்திற்கும் 6.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது.இதற்கு ' வெப்பக்குறைவு விகிதம் ' என்று பெயர்.

20. இந்தியாவின் முக்கிய இயற்கையமைப்பு பிரிவுகள் யாவை?

* வடக்கு மலைகள்

* வட பெரும் சமவெளிகள்

* தீபகற்ப பீடபூமிகள்

* கடற்கரைச்சமவெளிகள்

* தீவுகள்

21. இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி சுருக்கமாக விவரிக்கவும்.

* இந்தியாவின் மேற்குப் பகுதியில் அரபிக்கடலில் அமைந்துள்ள தீவு.

* முருகைப்பாறைகளால் ஆனது.

* இதன் தலைநகர் கவரத்தி.

* சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது.

22. அதிக மழை பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.

* மேற்குக்கடற்கரை

* அசாம்

* மேகாலயாவின் தென்பகுதி

* திரிபுரா

* நாகலாந்து 

* அருணாச்சலப்பிரதேசம்

23. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்
வேறுபடுத்துக.

மேற்குத்தொடர்ச்சி மலைகள்

* மேற்குக் கடற்கரைக்கு இணையாக உள்ளது.

* இது தொடர்ச்சியான மலைகள்

* கணவாய்கள் உண்டு

* உயரமான சிகரம் ஆனைமுடி ஆகும்.

கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

* கிழக்கு கடற்கரைக்கு இணையாக உள்ளது.

* இது தொடர்ச்சியற்றுக் காணப்படும்.

* கணவாய்கள் இல்லை

* உயரமான சிகரம் மகேந்திரகிரி ஆகும்.

24. நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?

* நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படுவது.

* நீதிமன்றம் சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடை செய்ய வெளியிடுகிறது.

25. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

* இந்தியக் குடிமகனாக இருக்கவேண்டும்.

* உயர்நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

* அல்லது 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்திருத்தல் வேண்டும்.


26. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்திக் காரணிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு , மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.

27. மதிப்பு கூட்டு முறையை எடுத்துக்காட்டுடன் வரையறுக்கவும்.

    உற்பத்தியில் பயன்படுதததப்பட்ட அனைத்து இடைநிலைப் பண்டங்களின் மதிப்பைச் சேர்க்கும் பொழுது , பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப்பண்டங்களின் மொத்த மதிப்புக் கிடைக்கிறது.

எ.கா . தேநீர் என்பது இறுதிப்பண்டமாகும்

டீத்தூள் + பால் + சர்க்கரை = தேநீர்

28. தங்க மதிப்பீட்டு அளவு என்பது யாது?

        இது ஒரு நாணயமுறை . ஒரு நாட்டின் நாணயம் அல்லது காகிதப்பணம் தங்கத்தோடு நேரடித் தோடர்புடைய ஒரு மதிப்பினைபு பெற்றிருக்கும்.

************    ***************   *************

                பகுதி - 1

குறிப்பு : எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்.
வினா எண். 42 - க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.      10X5= 50

29. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.

உடன்படிக்கையின் சரத்துக்கள்

1. போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போர் இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் மைய 
நாடுகள் அனைத்தும் போர்
இழப்பீட்டுத்தொகையை வழங்கவும்
வலியுறுத்தப்பட்டன.

2. ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய
கப்பற்படையொன்றை மட்டுமே
வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

3. ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பு தடைசெய்யப்பட்டது.

4. ஜெர்மனியின் அனைத்துக் காலனிகளும் பன்னாட்டுச் சங்கத்தின் பாதுகாப்பு நாடுகளாக ஆக்கப்பட்டன.

5. ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட
பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும்
பல்கேரியாவுடன் மேற்கொள்ளப்பட்ட
புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக்கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.

6. அல்சேஸ்-லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத் திருப்பித் தரப்பட்டன.


30. முதல் உலகப் போர் இந்தியாவின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி
விவரிக்கவும்.

இந்தியாவின் மீதான தாக்கம்

        முதல் உலகப்போர் இந்தியாவின்மீது
குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பா,
ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினர். போர் முடிந்த பின்னர் இவ்வீரர்கள்
புதிய சிந்தனைகளோடு தாயகம் திரும்பினர்.

அச்சிந்தனைகள் இந்திய சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.போர் செலவுக்காக இந்தியா 230 மில்லியன் பவுண்டுகளை ரொக்கமாகவும், 125
மில்லியன்பவுண்டுகளைக்கடனாகவும் வழங்கியது.

மேலும் 250 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள போர்முனைக்குத் தேவையான பொருள்களையும்
இந்தியா அனுப்பிவைத்தது. இதன் விளைவாகஇந்தியாவில் பெருமளவிலான பொருளாதார
இன்னல்கள் ஏற்பட்டன. உணவுதானியப்
பற்றாக்குறையால் கலவரங்கள் ஏற்பட்டு
ஏழைமக்கள் கடைகளைக் கொள்ளையடித்தனர்.

   போர் முடிவடையுந் தருவாயில் உலகம்
முழுதும் பரவிய விஷக்காய்ச்சலால் இந்தியாவும் பெருந்துயருக்குள்ளானது.
போர்நிலைமைகள் இந்திய அரசியலில்
தன்னாட்சி இயக்கம் உதயமாக வழிகோலியது.

பிளவுபட்டிருந்த காங்கிரஸ் இயக்கம் போரின்போது மீண்டும் இணைந்தது.
இங்கிலாந்து இந்தியாவின் விசுவாசத்தைப் பாராட்டிப் பரிசளிக்கும் என்ற நம்பிக்கையோடு இந்தியர்களும் இந்தியாவும் இப்போரில்
செயலூக்கத்துடன் பங்கேற்றனர்.
ஆனால் ஏமாற்றமே காத்திருந்தது. இவ்வாறு முதல் உலகப்போர் இந்தியச் சமூகம், பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றின்மேல் பல தாக்கங்களை
ஏற்படுத்தியது.


31. பன்னாட்டு சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?


பன்னாட்டுச் சங்கத்தின் குறிக்கோள்கள்

* பன்னாட்டுச் சங்கத்தின்
இரண்டு குறிக்கோள்களில் ஒன்று போர்களைத்தவிர்த்து உலகில் அமைதியை நிலைநாட்டுவது.

*மற்றொன்று சமூகப் பொருளாதார விசயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது.

32. பன்னாட்டுச் செலாவணி முறையில் ஏற்பட்ட சீர்குலைவு பற்றி விவரிக்கவும்.

பன்னாட்டுச் செலாவணி முறையில் ஏற்பட்ட சீர்குலைவு

* இங்கிலாந்தில் செலவுகளைச் சுருக்குதல், வரிகளை உயர்த்துதல் போன்ற அவசரகால நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டபோதும்
நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

* எனவே இங்கிலாந்து தங்கநாணய ஏற்பளவு (Gold Standard) முறையைக் கைவிட முடிவுசெய்தது. உடனடியாக ஏனைய பல நாடுகளும் தங்கநாணய
ஏற்புமுறையை விட்டு விலகின.

*  பெருங்கேட்டினை ஏற்படுத்தவல்ல இச்சூழலுக்கு எதிர்நடவடிக்கை
மேற்கொள்ளவும், உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நாடும் ஒரு பாதுகாப்புக் கொள்கையை மேற்கொண்டதோடு,
பணத்தின் மதிப்பையும் குறைத்தன.

*  பணமதிப்புக் குறைப்பால் கடன்கொடுப்போர், கடன்கொடுப்பதை
நிறுத்தினர். இதனால் உலகஅளவில்
கடன்வழங்குதல், வாங்குதல் நடவடிக்கையில் பெருஞ்சுணக்கம் ஏற்பட்டது.

 இவ்வாறு தங்களின்
பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு நாடுகள் மேற்கொண்ட தற்காப்பு
நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத
அளவில் உலகப்பொருளாதாரச் செயல்பாடுகளை சரிவுக்கு இட்டுச்சென்றது.

*  இதனுடைய விளைவு 
ஆழமானதாகவும் நீண்டகாலம்
நீடித்திருப்பதாகவும் அமைந்ததால் வரலாற்று அறிஞர்களும் பொருளாதார மேதைகளும் இதனைப் பெருமந்தம் என அழைக்கலாயினர்.


33. உலகப் பொருளாதாரப் பெருமந்தம் பற்றி விவரிக்கவும்.

பொருளாதாரப் பெருமந்தம்

 * முதல் உலகப்போரானது போர்க்காலப் 
பெரும்வளர்ச்சி முடிவற்றுத் தொடரும்
நம்பிக்கையின் அடிப்படையில்
சில குறிப்பிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு வழிகோலியது.

* போர் ஒரு முடிவுக்கு வந்தபோது,
போர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாகி வளர்ந்த சில தொழில்கள் கைவிடப்பட
வேண்டியவைகளாக அல்லது மாற்றி அமைக்கப்பட வேண்டியவைகளாயின.

* வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள்,
நிலைமையை மேலும் மோசமாக்கியது.

*  முதல் பெரும்வீழ்ச்சி 1929 அக்டோபர் 24 ல் அரங்கேறியது.அன்றைய தினம் நியூயார்க் நகரப் பங்குச் சந்தையில் பங்குகளின் விலைகள் செங்குத்தாய்ச் சரிந்தன.

* அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் செய்திருந்த தங்கள் முதலீடுகளைத் திரும்பப்பெறும் கட்டாயத்திற்கு உள்ளாயினர்.



34. இமயமலையின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கவும்.

இமயமலையின் முக்கியத்துவம்

• தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.

• இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. 

(எ.கா) சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.

• இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.

• பல கோடை வாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத்
தொடரில் அமைந்துள்ளன.

• வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.

* மத்திய ஆசியாவிலிருந்து வீசும்
கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து
பாதுகாக்கிறது.

* இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.


35. பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள
வேறுபாடுகள் எவையேனும் ஐந்தினைக் கூறுக.





36. தென்மேற்கு பருவக் காற்று குறித்து எழுதுக.

* இந்தியக்  காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்குப்  பருவக்காற்று விளங்குகிறது.

* பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல்
வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில்
தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல் அனைத்து
இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.

* உலகளாவிய காலநிலை நிகழ்வான 
"எல்நினோ" தென்மேற்குப் பருவக் காற்றுக்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

* தென்மேற்குப்  பருவக்காற்று தொடங்குவதற்கு முன் இந்தியாவின் வெப்பநிலையானது 46°C வரை உயருகிறது. 

* இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) பருவமழை வெடிப்பு' எனப்படுகிறது.

* இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது. 

* ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும் மற்றொரு கிளை வங்காள விரிகுடா
வழியாகவும் வீசுகிறது.

* தென்மேற்குப்  பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.

 * இக்கிளையானது வடக்கு நோக்கி
நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.

* ஆரவல்லிமலைத் தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான்
மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத்  தருவதில்லை.

* வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு
இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.

* இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில்
(mawsynram) மிக கனமழையைத் தருகிறது.

* இந்தியாவின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப்பொழிவானது தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் கிடைக்கிறது.

37. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக் கூறுகள்

* உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து
அரசியலமைப்புகளை விடவும்மிகவும் நீளமானது.

* இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின்
அரசியலமைப்புகளிலிருந்து
பெறப்பட்டவை.

* இது நெகிழாத்தன்மை  கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

* கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.

* இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.

* சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.

* உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.)


38. இந்திய குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை
விவரிக்கவும்.

சட்டமன்ற அதிகாரங்கள்

* பொதுத் தேர்தலுக்குப் பின்னர்
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை இவர் உரையாற்றித் 
துவக்கி வைக்கிறார். 

* ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இவருடைய உரையுடன் துவங்குகிறது.

* குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு இரண்டுமுறை நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்.

* குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அனைத்து மசோதாக்களும் சட்டமாகின்றன. 

* நிதி மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகம்
செய்யமுடியாது.

* நாடாளுமன்றத்தின் இரு
அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தையோ குடியரசுத்தலைவர் முடிவுக்குக்
கொண்டுவரலாம். 

* மக்களவையின் ஐந்து
ஆண்டுகாலம் முடியும் முன்னரே அதனைக் கலைக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு.

* கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மற்றும் சமூகப் பணி ஆகிய துறைகளில் சிறந்து
விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். 

* ஆங்கிலோ--இந்தியர் சமூகத்தைச்
சேர்ந்த நபர்களை மக்களவையில்
போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதும்பட்சத்தில்
குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

நீதி அதிகாரங்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 72-வது சட்டப்பிரிவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையைக் குறைக்கவும்,
ஒத்திவைக்கவும், தண்டனையிலிருந்து
விடுவிக்கவும், மன்னிப்பு வழங்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.


39. GDP - ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரிக்கவும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டு முறைகள்

1 ) செலவின முறை

         இந்த முறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்த அனைத்து இறுதிப் பண்ட
பணிகளுக்கு மேற்கொள்ளும் செலவுகளின் கூட்டுத் தொகையேயாகும்.

Y=C+I+G + (X - M) )

2. வருமான முறை

பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி
செய்வதில் ஈடுபட்டுள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் வருமானத்தை கணக்கிட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்த முறை கூறுகிறது.
வருமான முறையில் GDPஐ கணக்கிடும் போது , 

வருமானம் = கூலி + வாரம் + வட்டி + லாபம்.

3. மதிப்பு கூட்டு முறை

"இறுதிப்பண்டம்" என்பது ஹோட்டலில்
ஒரு கோப்பை தேனீர் (Tea) உங்களுக்கு
வழங்கப்படுவதாகும். அதை தயாரிக்க
பயன்படுத்தப்படும் டீதூள், பால் மற்றும் சர்க்கரை "இடைநிலை பண்டங்கள்" ஆகும். ஒரு கோப்பை தேனீர் இறுதிப் பண்டமாக மாறுவதற்கு இவைகள்
ஒரு பகுதியாக அமைகிறது. ஒரு கோப்பை தேனீர் தயாரிக்க பயன்படுத்திய ஒவ்வொரு இடைநிலை
பண்டத்தின் மதிப்பைக் கூட்டினால், தேனீரின் சந்தை மதிப்பை அளவிடலாம். உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலைப் பண்டடங்களின் மதிப்பைச் சேர்க்கும் பொழுது , பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது.

மதிப்புக்கூட்டு முறை

டீத்தூள் + பால் + சர்க்கரை = தேனீர்

இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு

             

40. இந்தியத்  தீவுகள் பற்றிக் குறிப்பிட்டு விவரிக்கவும்.

இந்தியத் தீவுகள்

அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும்
இலட்சத்தீவுகள் என இரண்டு பெரும் தீவுக் கூட்டங்கள் இந்தியாவில் அமைந்துள்ளன. 

அ. அந்தமான் நிக்கோபர் தீவுகள்

* இத்தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன. 

* பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் ' இங்கு காணப்படுகின்றன.

ஆ. இலட்சத்தீவுகள்

* இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.

* இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இதன் நிர்வாகத் தலைநகரம்
கவரட்டி ஆகும். 

* இலட்சத்தீவுக்கூட்டங்களை 8 டிகிரி கால்வாய் மாலத்தீவிலிருந்து பிரிக்கிறது.

***************    ***************   *******

குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள் காலக்கோடு மற்றும் வரைபடத்தில்
முறையே நிகழ்வுகளையும், இடங்களையும் குறிப்பிட்டு காட்டுவதற்கு
பதிலாக அவற்றை பற்றிய குறிப்புகள் மட்டும் எழுத வேண்டும்.

41. கீழ்காண்பனவற்றிற்கு காலக்கோடு வரைக.

1910 முதல் 1945 வரையிலான இரண்டு உலகப்போர்களில் இருந்து ஏதோம்
ஐந்து முக்கிய நிகழ்வுகளை எழுதுக.






42. கீழ்க்காணும் இடங்களை உலக வரைபடத்தில் குறிக்கவும்.

1) ரஷ்யா
2) பிரான்ஸ்
3) கிரீஸ்
4) ஆஸ்திரியா - ஹங்கேரி
5) இந்தியா




பகுதி - IV                     2X8 -- 16

குறிப்பு : பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

43. அ) குறிப்பு வரைக.

1) கூட்டு நிறுவனம்
2) மார்ன் போர்
3) வெர்டன் போர்
4) பாரிஸ் அமைதி மாநாடு

1 ) கூட்டு நிறுவனம்

       * பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு
தொழில்சார் நிறுவனமாகும். 

* தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம்,
விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்.

2 ) மார்ன்போர்

* ரஷ்யப் படைகள் கிழக்கு பிரஷ்யாவின் மீது படையெடுத்தன.

* மார்ன்போரில் பிரெஞ்சுப் படைகள் ஜெர்மானியரை வெற்றி பெற்றன.

* பாரீஸ் காப்பாற்றப்பட்டது.

* மார்ன் போரானது பதுங்கு குழிப்போரின் தொடக்கமாகும்.

3 ) வெர்டன் போர்

* 1916 ஆம் ஆண்டு ஜெர்மானியர் பிரான்சின் முக்கியக் கோட்டையான வெர்டனைத் தாக்கினர்.

* ஐந்து மாதம் நடைபெற்ற போரில் இரண்டு மில்லியன் வீரர்கள் பங்கேற்றனர்.

* இப்போர் உலகப்போரில் நேசநாடுகள் வெற்றி பெறும் எனத்தீர்மானித்தது.

4 ) பாரீஸ் அமைதி மாநாடு 

   
பாரீஸ் அமைதி மாநாடு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான  இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1919 ஜனவரி திங்களில் தொடங்கியது.

உட்ரோ வில்சன் ( அமெரிக்க அதிபர் ) , லாயிட் ஜார்ஜ் ( இங்கிலாந்து பிரதமர் ) , கிளமென்சோ ( பிரான்சின் பிரதமர் ) ஆகிய மூவரும்  இதில் முக்கியப் பங்கு வகித்தனர்.

(அல்லது)

ஆ) முதல் உலகப்போரின் விளைவுகள் யாவை?

முதல் உலகப்போரின் விளைவுகள்

    *   முதல் உலகப்போர், ஐரோப்பிய சமூக மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

* கட்டாய இராணுவசேவை மூலமாகவும்,
வான்வழித்தாக்குதல்கள் மூலமாகவும் கடந்தகாலங்களைக் காட்டிலும்
அதிகமான மக்களைப் போரில் பங்கேற்கச் செய்து அதிகமான பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. 

* நான்கு ஆண்டுகளில் 8 மில்லியன் மக்கள் மாண்டனர். அதைப் போன்று இரண்டு மடங்கு மக்கள்
காயமடைந்தனர். பலர் வாழ்நாள் முழுவதும் செயல்பட இயலாதவர்கள் ஆயினர். 

* 1918இல் இன்ஃப்ளூயன்ஸா (influenza)
நோயில் பல மில்லியன் மக்கள் மாண்டனர். இதன்விளைவாக அனைத்து நாடுகளிலும் ஆண் பெண் எண்ணிக்கையில் சமநிலை குலைந்து
ஆண்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது.

* போர்வீரர்கள் பொதுமக்களைக் காட்டிலும் உயரிய நிலையில் வைக்கப்பட்டனர்.

* முதல் உலகப் போரும் அதன்
பின்விளைவுகளும் வரலாற்றில் அனைத்தையும் புரட்டிப்போட்ட
அமைந்தது.

* அவையனைத்திலும் கருத்தைக் கவர்வதாக அமைந்தது U.S.S.R அல்லது ஐக்கிய சோசலிஸ்ட் சோவியத் குடியரசுகள் என்றழைக்கப்பட்ட
சோவியத் ரஷ்யாவின் எழுச்சியும் அதன்
ஒருங்கிணைப்புமாகும். 

* கடன்பட்ட ஒரு நாடாகப் போரில் நுழைந்த அமெரிக்கா போருக்குப்
பின்னர் உலகத்திற்கே கடன் கொடுக்கும் நாடாக மேலெழுந்தது.

* காலனிநாடுகளின் முழுமையான
விழிப்புணர்வும், விடுதலை பெறுவதற்காக அவை மேற்கொண்ட தீவிர முயற்சிகளுமாகும்.

* துருக்கி மீண்டும் ஒரு நாடாக மறுபிறவி
எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார். கமால் பாட்சா அந்நாட்டிற்கு விடுதலையை
மட்டும் பெற்றுத்தரவில்லை. அவர் துருக்கியை நவீனமயமாக்கி
அதை எதிர்மறையான
அங்கீகாரத்திலிருந்தும் மாற்றியமைத்தார்,


வரைபட தொடர்புடைய குறிப்பு : பார்வையற்ற மாணவர்கள்
வினாக்களுக்கு குறிப்புகள் மட்டும் எழுதவும்.


44 அ) கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக்
குறிக்கவும்.

1) கங்கைச் சமவெளி
2) காரகோரம்
3) கிழக்குத் தொடர்ச்சி மலை
4) சோட்டா நாகபுரி பீடபூமி
5) கட்ச் வளைகுடா
6) இலட்சத் தீவுகள்
7) வங்காள விரிகுடா
8) வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை




(அல்லது)

1) மலபார் கடற்கரை
2) அசாம்
3) தக்காணப் பீடபூமி
4) ஆரவல்லி மலைத்தொடர்
5) அரபிக் கடல்
6) மன்னார் வளைகுடா
7) வட சர்க்கார்
8) பாமீர் முடிச்சு

*******************    ******************

தினம் ஒரு ஆன்லைன் தேர்வு எழுதி பாராட்டுச் சான்றிதழ் பெற விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர் , வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி , தேர்வு இணைப்பைப் பெறலாம்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

************** ***************   ********

Post a Comment

0 Comments