9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 , அகழாய்வு & மதிப்பீடு - வினா & விடை / 9th TAMIL - EYAL 3 -MATHIPPEEDU ONLINE TEST - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 3 - அகழாய்வு & மதிப்பீடு 

 இயங்கலைத்தேர்வு 

வினாக்களும் விடைகளும்

வினா உருவாக்கம் 

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் ,மதுரை.

****************   **************   ***********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்   ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.

***************     ****************    ************

1) தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளத் தமிழகத்தின் தொன்மையான பகுதிகளை ----- செய்தல் இன்றியமையாதது.

அ) கட்டமைப்பு

ஆ) அகழாய்வு

இ) சீராய்வு

 ஈ) புதுப்பித்தல்

விடை  : ஆ ) அகழாய்வு 

2) மதுரை நகருக்கு அருகே ------ என்னும் ஊரில் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அ) சிலைமான்

ஆ) திருமங்கலம்

இ) கீழடி

ஈ) மேலூர்

விடை : இ ) கீழடி 

3) ----- அகழாய்வில் ரோமானிய
மட்பாண்டங்கள் கிடைத்தன.

அ ) அரிக்கமேடு

ஆ) ஆதிச்சநல்லூர்

இ) கொந்தகை

ஈ) கீழடி

விடை : அ ) அரிக்கமேடு

4) ஆதிச்சநல்லூரில் அகழாய்வு
செய்து முதுமக்கள்தாழி
கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

அ ) 1904

ஆ) 1914

இ) 1924

ஈ) 1934

விடை  :  ஆ) 1914

5) ------  கோழி பறந்துக்கிட்டே
முட்டை போட்டுச்சாம் என்பது
கிராமத்துச் சொலவடை.

அ ) பகுமானக்

ஆ) நாட்டுக்கோழி

இ) வெள்ளைக்கோழி

ஈ) வெடக்கோழி

விடை : அ ) பகுமானக்

6) பழையன கழிதலும் புதியன ------ 
வழுவல கால வகையினானே.

அ ) மறத்தலும்

அ ) விரும்பலும்

இ) புகுதலும்

ஈ) சிறத்தலும்

விடை : இ) புகுதலும்

7) அறிவியலில் இரண்டு வகை
ஒன்று வணிக அறிவியல்
மற்றொன்று ------  அறிவியல்.

அ) மக்கள்

ஆ) பழைய

இ ) இணையதள

ஈ) இரசாயான அறிவியல்

விடை : அ ) மக்கள்

8) விகாரப் புணர்ச்சி ----- வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) எட்டு

விடை : ஆ) மூன்று

9) பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் - எருதுகட்டி

ஆ) திருவாரூர் - கரிக்கையூர்

இ ) ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு

 ஈ) பட்டிமன்றம் - பட்டி மண்டபம்

விடை  : ஆ) திருவாரூர் - கரிக்கையூர்

10) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

அ) தமிழர்களின் வீரவிளையாட்டு
தொன்மையான ஏறுதழுவுதல்

ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு
ஏறுதழுவுதல் தொன்மையான

இ) தொன்மையான வீரவிளையாட்டு
தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழர்களின் தொன்மையான
வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

விடை : ஈ) தமிழர்களின் தொன்மையான
வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

11) பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்

அ) அரிக்கமேடு அகழாய்வில்
ரோமானிய நாணயங்கள் கிடைத்தன

ஆ) புறப்பொருள் வெண்பாமாலை
என்னும் இலக்கண நூலிலும்
ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

இ) எட்டு பத்து ஆகிய எண்ணுப்
பெயர்களின் பின் வல்லினம் மிகாது

ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு
மணிமேகலையில் காணப்படுகிறது

விடை : இ) எட்டு பத்து ஆகிய எண்ணுப்
பெயர்களின் பின் வல்லினம் மிகாது

12) ஐம்பெருங்குழு , எண்பேராயம் -
சொற்றொடர்கள் உணர்த்தும்
இலக்கணம் ------

அ) திசைச்சொற்கள்

ஆ) வடசொற்கள்

இ) உரிச்சொற்கள்

ஈ) தொகைச்சொற்கள்

விடை : ஈ) தொகைச்சொற்கள்

13) சொற்றொடர்களை முறைப்படுத்துக. 

அ) ஏறுதழுவுதல் என்பதை   ஆ)
தமிழ் அகராதி    இ) தழுவிப்
பிடித்தல் என்கிறது

1) ஆ - அ - இ

2) ஆ - இ - அ

3) இ - ஆ - அ

4) இ - அ - ஆ

விடை : 1) ஆ - அ - இ

14 ) இருபெயரொட்டுப்
பண்புத்தொகையில் வல்லினம்
மிகும். கீழ்க்காணும் சொற்களில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை

அ) மல்லிகைப்பூ

ஆ) புலித்தோல்

இ) அதற்குச் சொன்னேன்

 ஈ) வாழ்க்கைப்படகு

விடை : அ) மல்லிகைப்பூ

15 ) வல்லினம் மிகுந்து வருதல் ------  விகாரப் புணர்ச்சி ஆகும்.

அ) தோன்றல் விகாரம்

ஆ) திரிதல் விகாரம்

இ) கெடுதல் விகாரம்

ஈ) இயல்புப் புணர்ச்சி

விடை : அ) தோன்றல் விகாரம்


Post a Comment

0 Comments