மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் - பிறந்த நாள் 07 - 02 - 22 சிறப்புத்தேர்வு / PAVANAR BIRTH DAY - ONLINE TEST

 

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்

பிறந்த நாள் ( 07 - 02 -2021 )

சிறப்பு வினாடி வினா

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்'  மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை97861 41410

***************   *************   **********

1) மொழி ஞாயிறு என்று அழைக்கப் படுபவர் ------

அ) பாவாணர்

ஆ) பரிதிமாற் கலைஞர்

இ) பாரதியார்

விடை : அ ) பாவாணர்

2) பாவாணர் பிறந்த ஆண்டு -----

அ) 1802

ஆ) 1902

இ) 1912

விடை : ஆ ) 1902

3)சங்கரன் கோவில் அருகே உள்ள -------என்னும் ஊரில் பாவாணர் பிறந்தார்.

அ) பாரதிபுரம்

ஆ) கோமதிபுரம்

இ) கரிவலம்வந்த நல்லூர்

விடை : ஆ ) கோமதிபுரம்

4) பாவாணரின் தந்தை பெயர் ------

அ) வேதமுத்து

ஆ) மாரிமுத்து

இ) ஞானமுத்து

விடை :  இ) ஞானமுத்து

5) பாவாணரின் தாத்தா முத்துச்சாமி அவர்கள் தழுவிய சமயம் -----

அ) இந்து

ஆ) கிறித்தவம்

இ) பௌத்தம்

விடை : ஆ ) கிறித்தவம்

6) பாவாணர் தன் ஆசிரியப்
பணியை முதன்முதலில் ------  என்னும் ஊரில் தொடங்கினார்.

அ) முறம்பு

ஆ) முசிறி

இ) திருநெல்வேலி

விடை : அ ) முறம்பு 

7) 1921 ல் பாவாணர் தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஊர் ------

அ) ஆம்பூர்

ஆ) சென்னை

இ) சங்கரன்கோவில்

விடை : அ ) ஆம்பூர்

8) பாவாணர் ------  என்பவரிடம்
முறையாக இசை பயின்றார்.

அ) கிருஷ்ணமூர்த்தி

ஆ) கோபால கிருஷ்ணன்

இ) இராஜகோபாலன்

விடை : இ ) இராஜகோபாலன்

9) பாவாணரின் மொழி ஆராய்ச்சிக் கட்டுரை 1931 ல் ------ இதழில் வெளிவந்தது.

அ) இந்தியா

ஆ) செந்தமிழ் செல்வி

இ ) சுதேசமித்திரன்

விடை : ஆ ) செந்தமிழ் செல்வி

10) திராவிட மரபு தோன்றிய இடம் -----நாடே என்று பாவாணர் ஆய்வுசெய்து வெளியிட்டார்.


அ) குமரி நாடு

ஆ) பாண்டியநாடு

இ ) தொண்டை நாடு

விடை : அ ) குமரி நாடு

11) 1940 ல் பாவாணர் வெளியிட்ட  நூல் -----

அ ) தமிழ்ச்சொல்வளம்

ஆ) ஒப்பியல் மொழி நூல்

இ) இலக்கண நூல்

விடை : ஆ ) ஒப்பியல் மொழி நூல்

12) பாவாணருக்கு'
தமிழ்ப்பெருங்காவலர்' என்ற
விருதினை அளித்த கழகம்


அ ) சென்னைப்பல்கலைக்கழகம்

ஆ) புதுவைப்பல்கலைக்கழகம்

இ )  மதுரை தமிழ்காப்புக்கழகம்

விடை : இ ) மதுரை தமிழ்காப்புக்கழகம்

13) உலகத் தமிழ்க்கழகத்தின்   முதலாமாண்டு விழா நடைபெற்ற ஊர் --

அ) பரமக்குடி

ஆ) தூத்துக்குடி

இ) திருநெல்வேலி

விடை : அ ) பரமக்குடி 

14 ) அகரமுதலித் திட்டத்தை பாவாணர் தொடங்கிய இதழ் -------

அ) தென்மொழி

ஆ) தேன்சிட்டு

இ) செம்மொழி

விடை : அ ) தென்மொழி 

15) தென்மொழி இதழின் ஆசிரியர் -----

அ)பாவாணர்

ஆ) இளங்குமரனார்

இ) பெருஞ்சித்திரனார்

விடை : இ ) பெருஞ்சித்திரனார்

16) குன்றக்குடி அடிகளார் பாவாணருக்கு -----எனும் விருதை வழங்கினார்.

அ) மொழி ஞாயிறு

ஆ) செந்தமிழ் ஞாயிறு

இ) தனித்தமிழ்ஞாயிறு

விடை : ஆ ) செந்தமிழ் ஞாயிறு

17) தமிழக அரசு பாவாணருக்கு
--- எனும் விருதை வழங்கியது.

அ) செந்தமிழ்ச்செல்வர்

ஆ) குறட்பணிச்செம்மல்

இ) அருட்பணி அரசர்

விடை : அ ) செந்தமிழ்ச்செல்வர்

18) மாந்தன் தோற்றமும் தமிழர்
மரபும் என்ற சொற்பொழிவினை ------
உலகத் தமிழ் மாநாட்டில் நிகழ்த்தினார் பாவாணர்

அ) தஞ்சை

ஆ) மலேசியா

இ) மதுரை

விடை : இ ) மதுரை

19) பாவாணர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்-----

அ ) இளங்குமரனார்

ஆ) இலக்குவனார்

இ) பெருஞ்சித்திரனார்

விடை : அ ) இளங்குமரனார்

20) பாவாணரின் நூல்கள் ------ என்னும் பெயரில் பல தொகுதிகளாக   வெளிவந்துள்ளன.

அ) மொழிவரலாறு

ஆ) அகரமுதலி

இ )  பாவாணம்

விடை : இ ) பாவாணம்

**************  ****************  ************


Post a Comment

0 Comments