ஞாயிறு கொண்டாட்டம் - பொது அறிவு - போட்டித்தேர்வு - வினா & விடை / SUNDAY - GK ONLINE CERTIFICATE TEST

 

ஞாயிறு கொண்டாட்டம் 

பொது அறிவுத் தேர்வு 

போட்டித்தேர்வில் வெற்றி

வினா உருவாக்கம் -

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர் , மதுரை

*****************   ***********   ************
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்
ஆன்லைன் தேர்வை எழுத விரும்புவோர்
தங்களது பெயர், வகுப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி ஆன்லைன் தேர்வு லிங்க் பெறலாம்.

*****************    *********    *************


1) தென்னாப்பிரிக்காவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதியவகை வைரஸ்

அ) ஒமிக்ரான்

ஆ) டெல்டா

இ) நியோகோவ்

ஈ) பீட்டா

விடை :  இ) நியோகோவ்

2) 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் மகாகவி பாரதியார் விருது பெறுபவர் -----

அ) பாரதி கிருஷ்ணகுமார்

ஆ) நாஞ்சிலெ சம்பத்

இ) கவிஞர்.மூரா

ஈ) வரலொட்டி ரெங்கசாமி

விடை : அ) பாரதி கிருஷ்ணகுமார்

3) கம்பர் விருது பெறும் பட்டிமன்றப் பேச்சாளர் -----

அ) பாரதி பாஸ்கர்

ஆ) கவிதா ஜவஹர்

இ) ரேவதி சுப்புலட்சுமி

ஈ) சுமதி

விடை : அ) பாரதி பாஸ்கர்

4) மறைமலை அடிகள் விருது பெறும் பட்டிமன்ற நடுவர் -----

அ) பேரா.சாலமன் பாப்பையா

ஆ) பேரா.கு.ஞானசம்பந்தன்

இ) சொல்வேந்தர்.சுகிசிவம்

ஈ) திண்டுக்கல்.ஐ.லியோனி

விடை : இ) சொல்வேந்தர்.சுகிசிவம்

5) வேடந்தாங்கல் பறவைகள்
சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் -----

அ) செங்கல்பட்டு

ஆ) காஞ்சிபுரம்

இ)விழுப்புரம்

ஈ) திருவள்ளூர்

விடை : ஆ) காஞ்சிபுரம்

6) புலிக்காட் ஏரி பறவைகள் சரணாலயம்   ------- மாவட்டத்தில் உள்ளது.

அ) திருநெல்வேலி

ஆ) திருச்சி

இ) திருவள்ளூர்

ஈ) திருவாரூர்

விடை : இ) திருவள்ளூர்

7) வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் -- ---- மாவட்டத்தில் உள்ளது.

அ) புதுக்கோட்டை

ஆ) சிவகங்கை

இ) மதுரை

ஈ) இராம்நாடு

விடை : ஆ) சிவகங்கை

8) முதுமலையில் ------சரணாலயம் உள்ளது.

அ) சிறுத்தை

ஆ) மான்கள்

இ) பறவைகள்

ஈ) யானைகள்

விடை : ஈ) யானைகள்

9 ) திருநெல்வேலி மாவட்டத்தில்
புலிகள் சரணாலயம் -----ல் உள்ளது.

அ) நாங்குனேரி

ஆ) வல்லநாடு

இ) முண்டந்துறை

ஈ) கருமந்துறை

விடை : இ) முண்டந்துறை

10) காஞ்சிராங்குளம் பறவைகள்
சரணாலயம் ------ மாவட்டத்தில் உள்ளது.

அ) விருதுநகர்

ஆ) இராமநாதபுரம்

இ) மதுரை

ஈ ) சிவகங்கை

விடை : ஆ) இராமநாதபுரம்

11) வல்லநாடு மான்கள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் -----

அ ) தூத்துக்குடி

ஆ) திருநெல்வேலி

இ) கன்னியாகுமரி

 ஈ) மதுரை.

விடை : அ ) தூத்துக்குடி

12 )பந்திப்பூர் சரணாலயம் -----மாநிலத்தில் உள்ளது.

அ ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) கர்நாடகா

ஈ) இராஜஸ்தான்

விடை : இ) கர்நாடகா

13) பெரியாறு சரணாலயம் -----மாநிலத்தில் உள்ளது.

அ )தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மகாராஷ்டிரா

ஈ) உத்திரப்பிரதேசம்

விடை : ஆ) கேரளா

14) ' காசிரங்கா ' சரணாலயம்
அமைந்துள்ள மாநிலம் -----

அ ) உத்திரப்பிரதேசம்

ஆ) பீகார்

இ ) அஸ்ஸாம்

ஈ) மத்தியப்பிரதேசம்

விடை : இ ) அஸ்ஸாம்

15 ) ' கிர் தேசியப்பூங்கா ------ மாநிலத்தில் உள்ளது.

அ) குஜராத்

ஆ) அஸ்ஸாம்

இ) கேரளா

ஈ) தமிழ்நாடு

விடை : அ) குஜராத்

16) ' பரத்பூர் சரணாலயம் ------ மாநிலத்தில் உள்ளது.

அ) தமிழ்நாடு

ஆ) கேரளா

இ) மத்தியப்பிரதேசம்

ஈ) இராஜஸ்தான்

விடை : ஈ) இராஜஸ்தான்

17) வடுவூர் பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம் -----

அ) நாகப்பட்டினம்

ஆ) தஞ்சாவூர்

இ) திருவாரூர்

ஈ) திருவள்ளூர்

விடை : இ) திருவாரூர்

18) வண்டலூர் உயிரியல் பூங்கா   மாவட்டத்தில் உள்ளது.

அ) சென்னை

ஆ) செங்கல்பட்டு

இ) காஞ்சிபுரம்

ஈ) விழுப்புரம்

விடை : இ) காஞ்சிபுரம்

19 ) நாகப்பட்டினத்தில் உள்ள   கோடியக்கரை ----- சரணாலயம் ஆகும்.

அ) பறவைகள்

ஆ) யானை

இ)புலி

ஈ) சாம்பல் நிற அணில்

விடை :  அ) பறவைகள்

20) முக்கூர்த்தி விலங்குகள் சரணாலயம்   -------  மாவட்டத்தில் உள்ளது.

அ) கோயம்புத்தூர்

ஆ) திருப்பத்தூர்

இ) சேலம்

ஈ) நீலகிரி

விடை :  ஈ) நீலகிரி

**************   ************   ************

Post a Comment

0 Comments