PG TRB - தமிழ்
தமிழர் வேளாண்மை முறை
இயற்கை வேளாண்மைக் கூறுகள்
உழுதல் , விதைத்தல் , தொழு உரமிடுதல் , நீர் பாய்ச்சுதல் , களையெடுத்தல் , காத்தல் முதலியன நம் தமிழர் மேற்கொண்ட இயற்கை வேளாண்மைக் கூறுகள் ஆகும்.
உழுதல்
'தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்'
- குறள் எண் 1087
ஒரு பலம் எடையுள்ள மண்ணைக் கால்பலம் எடை அளவிற்கு உலரும் வரை உழுதனர்.
நில வகைகள் : நீர்வளம் மிக்க நன்செய் நிலத்தில் நெல், கரும்பு, வாழை முதலிய பயிர்களை விளைவித்தனர். நீர்வளம் குறைந்த புன்செய் நிலத்தில் (வானம் பார்த்த பூமி) கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, துவரை, கொள்ளு, காராமணி முதலிய பயிர்களை விளைவித்தனர்.
நடுதல் : “நெல்லுக்கு நண்டோட; கரும்புக்கு ஏரோட; வாழைக்கு வண்டியோட; தென்னைக்குத் தேரோட” என்ற முறையில் இடைவெளி விட்டு பயிர்களை நட்டனர்.
தொழு உரங்கள் : இலை தழைகள், ஆட்டு எரு, மாட்டு எரு, கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, இலுப்பம் பிண்ணாக்கு போன்ற இயற்கை (தொழு உரங்கள்) இட்டனர்.
பஞ்சகவ்வியம் : பசுவிடமிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களான கோமியம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்த பஞ்சகவ்வியத்தை பூச்சிகொல்லி மருந்தாகப் பயன்படுத்தினர்.
தமிழர் வேளாண்முறை
இயற்கை வேளாண்முறையை வலியுறுத்தியவர் நம்மாழ்வார். ஏழைகளின் கற்பகவிருட்சம் பனைமரம். பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மதிப்புக்கூட்டுப் பொருள்களாகும்.
1978 -இல் 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்னும் நூலை எழுதியவர் மசானபு ஃபுகோகா. இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அறிஞராவார். இயற்கை வேளாண்மைக்கு இவர் கூறிய ஐந்து விவசாய மந்திரங்கள்
1. உழப்படாத நிலம்,
2. இரசாயன உரம் இல்லாத உற்பத்தி,
3. பூச்சிக்கொல்லி தெளிக்கப்படாத பயிர்பாதுகாப்பு,
4. தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி,
5. ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்.
0 Comments