PG TRB - தமிழ்
உணவே மருந்து
"உண்டி முதற்றே உலகு', 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்பது உலகறிந்த உண்மை.
பசியின் கொடுமையைப் 'பசிப்பிணி என்னும் பாவி' என்றது மணிமேகலைக் காப்பியம். இப்பிணிக்கு மருந்து உணவே.
"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” எனப் புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன.
திருக்குறளில் மருந்து' என்ற அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையைத் திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டும்
என்பதைக் கீழ்க்கண்ட குறள் கூறுகிறது.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”
குறள் 942.
உடல் நலத்திற்குப் பொருந்திய உணவு எது? பொருந்தாத உணவு எது? என ஆராய்ந்து தெளிந்து பின்பற்றினால் நோய் நம்மை அணுகாது எனக் குறளில் கூறப்பட்டுள்ளது.
தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள்
உப்பு, கொழுப்பு, காரம், புளிப்பு கொண்ட உணவு வகைகள் மற்றும் சிறுதீனிகள்.
நோய்க்கு முதல் காரணம் உப்பு.
தண்ணரும் மருந்தே
உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கும், குருதி தூய்மையடைவதற்கும் உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறுவதற்கும் நீர் இன்றியமையாதது. எனவே நாளொன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இலக்கியங்களில் அறிவியல்
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி''
- புறநானூறு, பாடல் 27.
அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம் நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ''ஓர்
எந்திர வூர்தி இயற்றுமின்'' என்றான்
சீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் 50.
0 Comments