ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2012 - 2013
வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2012 - 2013
QUESTION & ANSWER
**************** ************* ***********
1 . Baby என்னும் ஆங்கிலப் பாடலைக் குழந்தை என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர்
A) அழ வள்ளியப்பா
B) மு. கதிரேசன்
C) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
D) புலவர் குழந்தை
2. பாரதியின் தனிமை இரக்கம் என்ற பாடல் அச்சேறிய இதழ்
A) விவேகபாநு
B) இந்தியா
C) சுதேசமித்திரன்
D) நவசக்தி
3 . பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய முதல் நாடகம்
A) மாக்பெத்
B) புஷ்பவல்லி
C) சதிலீலாவதி.
D) வள்ளி திருமணம்
4 . சம்பாமி யுகே யுகே என்ற நாடகத்தைப் படைத்தவர்
A) சோ. ராமசாமி
B) ஆர்.எஸ். மனோகர்
C) ஹெரான் ராமசாமி
D) வி.எஸ். ராகவன்
5 . வாயடியும் கையடியும் மறைவது எந்நாள்? என்று உள்ளம் குமுறிய கவிஞர்
A) பாரதியார்
B ) சுரதா
C) பாரதிதாசன்
D) நாமக்கல் கவிஞர்
6 . குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையைப் படைத்தவர்
A) புதுமைப்பித்தன்
B) கு.ப.ரா
C) ஜெயகாந்தன்
D) வ.வே.சு. ஐயர்
7 . சொர்க்கத்தில் அண்ணா என்னும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்
A) புதுமைப்பித்தன்
B) அப்துல் ரகுமான்
C) கண்ணதாசன்
D) நாவலர் நெடுஞ்செழியன்
8 . அஞ்சலகம் (Post Office) என்ற நாடகத்தைப் படைத்தவர்
A) சரோஜினி நாயுடு
B) கண்ணதாசன்
C) இரவீந்திரநாத் தாகூர்
D) ஆர்.கே. நாராயண்
9 . ஜுலியஸ் சீசர்' - நாடகத்தைத் தெலுங்கில் மொழி பெயர்த்தவர்
A) வாசுதேவ சாஸ்திரி
B) ஆனந்த கஜபதி
C) வீரேசலிங்கம்
D) இராமச்சந்திர கவி
10. பட்டுப்புடவை என்னும் கவிதையின் ஆசிரியர்
A) ஆர். சூடாமணி
B) அநுத்தமா
C) லக்ஷ்மி
D) சிவசங்கரி
11.இஸ்லாமியத் தாயுமானவர் இவர்களுள் யார்?
A) செய்குதம்பிப் பாவலர்
B) உமறுப்புலவர்
C) குணங்குடி மஸ்தான்
D) ஜவ்வாதுப் புலவர்
12. தஞ்சைவாணன் கோவை நூலின் ஆசிரியர்
A) பொய்யாமொழிப் புலவர்
B) ஒட்டக்கூத்தர்
C) மாணிக்கவாசகர்
D) மீனாட்சி சுந்தரம்பிள்ளை
13. 'குழவி மருங்கினும் கிளவதாகும்' எந்தச் சிற்றிலக்கியத்தின்
அடிப்படையாய் அமைந்தது?
A) பிள்ளைத்தமிழ்
B) குழந்தைப் பாடல்கள்
C) மாலை
D) கோவை
14. செய்யுளின் ஓரிடத்தில் நிற்கும் சொல், செய்யுளின் முதல், இடை, கடை எனப் பிற இடங்களிலும் சென்று பொருள் தரும் அணி
A) நிரனிறை
B) சமாகிதம்
C) தீவகம்
D) சங்கீரணம்
15. பட்டில்-1ஐ பட்டியல்-2உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் -1 பட்டியல் - 2
a) வெட்சி 1. முல்லை
b) வஞ்சி 2. குறிஞ்சி
c) உழிஞை 3. பாலை
d) வாகை 4. மருதம்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 1 4 3
B) 3 4 1 2
C) 4 2 1 3
D) 2 3 4 1
16. ஒத்த தலைவனும் தலைவியும் கூடும் களவு மணத்தைக் குறிப்பது
A) ஆரிடம்
B) தெய்வம்
C) காந்தர்வம்
D) பிரசாபத்தியம்
17 . காப்பியத்தின் பண்பினைச் சுருக்கமாக வெளிப்படுத்தும் அணி
A) ஒட்டணி
B) பாவிகம்
C) ஒப்புமைக்கூட்டம்
D) விபாவனை
18. அறுசீரும் அதற்கு மிக்கும் வரும் அடி
A) கழிநெடிலடி
B) நெடிலடி
C) சிந்தடி
D) நேரடி
19. அகநானூற்றில் 2, 8 என கொண்ட பாடல்கள் எத்திணைப் பாடல்கள்?
A) முல்லை
B) நெய்தல்
C) குறிஞ்சி
D) பாலை
20. கூவிளந்தண்ணிழல் என்பதன் அசை
A) நேர் நிரை நேர் நிரை
B) நிரை நேர் நேர் நிரை
C) நேர் நேர் நிரை நிரை
D) நேர் நிரை நிரை நேர்
21. தமிழ் மூவாயிரம் என வழங்கும் நூல்
A) திவ்வியப் பிரபந்தம்
B) திருமந்திரம்
C) நளவெண்பா
D) திருப்புகழ்
22. தகுதி வழக்கு என்ற பிரிவின் கீழ் வருவது
A ) மரூஉ
B) குழூஉக்குறி
C) இலக்கணம் உடையது
D) அளபெடை
23. இவற்றுள் எது பெயரிடைச் சொல்?
A) செய்பவர்
B) வந்தவர்
C) இவற்றுள் எதுவுமில்லை
D) நடந்தனர்
24. இடைநா, இடையண்ணம் உறத் தோன்றும் எழுத்து இவற்றுள் எது?
A) ச்
B) ற்
C) த்
D)ப்
25. ஓரடியுள் சொற்களை மாற்றியமைத்துப் பொருள்
கொள்ளுதல்
A) மொழிமாற்று
B) கொண்டு கூட்டு
C) நிரனிறை
D) அடிமறிமாற்று
26. மகரக்குறுக்கம் பெறும் மாத்திரையளவு
A ) அரை
B) கால்
C ) ஒன்று
D) இரண்டு
27. பொன்னன் என்பது
A) தெரிநிலை வினை
B) குறிப்பு வினை
C) செயப்பாட்டு வினை
D) செய் வினை
28. ஐந்து என்பதனை அஞ்சு எனல்
A) முதற்போலி
B) முற்றுப்போலி
C) இடைப்போலி
D) கடைப்போலி
29. தொகைநிலைத் தொடர்களின் எண்ணிக்கை
A ) ஆறு
B) நான்கு
C) ஐந்து
D) ஒன்பது
30. கண்ணனது கை என்பது
A) தற்கிழமை
B) பிறிதின்கிழமை
C) வேற்றுக்கிழமை
D) மாற்றுக்கிழமை
31. இரத்தினம் என்பதன் பழைய வடிவம்
A) இரதம்
B) அரதனம்
C) இரத்தம்
D) இரதனம்
32 மொழி முதல் யகரமெய், யார் காலத்தில் அகரமாக மாறியதாகத் தொ.பொ.மீ. சுட்டுகிறார்?
A) பல்லவர்
B) பாண்டியர்
C) சேரர்
D) சோழர்
33. இருந்து நின்று இவை எவ்வேற்றுமையின் சொல்லுருபுகள்?
A) ஆறாம் வேற்றுமை
B) ஏழாம் வேற்றுமை
C) மூன்றாம் வேற்றுமை
D) ஐந்தாம் வேற்றுமை
34. பீங்கான் என்ற சொல் எம்மொழியிலிருந்து வந்தது என்கிறார் தொ.பொ.மீ?
A) பாரசீகம்
B) ஜப்பான்
C) சீனம்
D) பிரெஞ்சு
35. உடனிலை மெய்ம்மயக்கு ஆகாத மெய்கள்
A) ர்,க்
B) ழ்,க்
C) ர், ழ்
D) ற்,க்
36. படு பெறு இவை
A) செய்வினைகள்
B) செயப்பாட்டு வினைகள்
C) பிறவினைகள்
D) துணைவினைகள்
37. நட.- நடத்து : செல் - செலுத்து - இவை
A) தன்வினை - பிறவினை
B) பிறவினை - தன்வினை
C) செய்வினை - செயப்பாட்டுவினை
D) செய்வினை - பிறவினை
38. தொ.பொ.மி குறிப்பின்படி யூதர் என்னும் சொல் எம்மொழிச்
சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தது?
A) ஹீப்ரு
B) சீனம்
C) ஜப்பான்
D) ஜெர்மனி
39. மராட்டிய ஆட்சியாளர் சரபோஜி உருவாக்கிய நூலகத்தின் பெயர்
A) தேவநேயப் பாவாணர் நூலம்
B) சரஸ்வதி மஹால் நூலகம்
C) கன்னிமரா நூலகம்
D) மறைமலை நூலகம்
40. இழு – இசு - ழகரம் சகரமாதல் எப்பகுதித் தமிழில் நிகழ்கிறது?
A) கடலூர் மற்றும் விழுப்புரம்
B) வேலூர் மற்றும் திருவண்ணாமலை
C) மதுரை மற்றும் திண்டுக்கல்
D) கோவை மற்றும் ஈரோடு
41 . கண்ணகியின் தோழி
A) வயந்தமாலை
B) காஞ்சனை
C) தேவந்தி
D) சித்திராபதி
42. திருந்து என்பதன் பிறவினை
A) திருத்து
B) திருப்பு
C) திரும்ப
D) இவற்றுள் எதுவுமில்லை
43. மாடை, காசு என்னும் இருவகை நாணயங்கள் வழக்கிலிருந்த காலம்
A) சேரர் காலம்
B) பாண்டியர் காலம்
C) சோழர் காலம்
D) பல்லவர் காலம்
44. சூடாமணி நிகண்டின் ஆசிரியர்
A) அதிவீரராம பாண்டியர்
B) தோலாமொழித் தேவர்
C) மண்டல புருடர்
D) இவர்களுள் எவருமில்லை
45. பட்டில் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் -1 பட்டியல் - 2
a) வேற்றுமைத்தொகை 1. கருங்குழல்
b) வினைத்தொகை 2. பாடம் படித்தான்
c) பண்புத்தொகை 3. கயல்விழி
d) உவமைத்தொகை 4. கொல்யானை
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 4 1 2 3
C) 2 3 1 4
D) 2 4 1 3
46. தொல்காப்பியரின் கருத்துப்படி தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் எந்தெந்த இடங்களுக்கு உரியன?
A) தன்மை, படர்க்கை
B) முன்னிலை, படர்க்கை
C ) ஊர் , நாடு
D) தன்மை, முன்னிலை
47. மணிமேகலையின் உற்ற தோழி
A ) ஐயை
B) காஞ்சனமாலை
C ) தேவந்தி
D) சுதமதி
48. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் எனப் பாடியவர்
A) சம்பந்தர்
B) நாவுக்கரசர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
49. கணிகண்ணன் யாருடைய சீடர்?
A) திருப்பாணாழ்வார்
B) திருமழிசையாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
50. பட்டில் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் - 1 பட்டியல் - 2
a) திரிகடுகம் 1. பெருவாயின் முள்ளியார்
b) ஆசாரக்கோவை 2. பொய்கையார்
c) களவழி நாற்பது 3. பூதஞ்சேந்தனார்
d) இனியவை நாற்பது 4. நல்லாதனார்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 3 4 1
B) 3 4 1 2
C) 4 1 2 3
D ) 4 2 1 3
51. தா என்பது
A) இழிந்தோன் இரப்புரை
B) ஒப்போன் இரப்புரை
C) மிக்கோன் இரப்புரை
D) இவற்றுள் எதுவுமில்லை
52. பத்துப்பாட்டிலுள்ள ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை
A) 7
B) 2
C) 3
D) 5
53. ஏ என்னும் உயிர்முன் - வருமொழியில் உயிர்வந்தால் புணர்வது
A) ய்
B) வ்
C) ய், வ்
D) இவற்றுள் எதுவுமில்லை
54. இடம்பொருள் வேற்றுமை -
A) ஐந்தாம் வேற்றுமை
B) ஏழாம் வேற்றுமை
C) நான்காம் வேற்றுமை
D) ஆறாம் வேற்றுமை
55. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் -1 பட்டியல் - 2
a) சூளாமணி 1. கொங்குவேளிர்
b) குண்டலகேசி 2. சீத்தலைச் சாத்தனார்
c) பெருங்கதை 3. தோலாமொழித்தேவர்
d) மணிமேகலை 4. நாதகுத்தனார்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 4 1 2
B) 1 3 4 2
C) 2 3 4 1
D) 3 4 2 1
56. திருக்குறளில் இரண்டுமுறை இடம் பெற்றிருக்கும் அதிகாரத் தலைப்பு
A) பொருள் செயல்வகை
B) தெரிந்து தெளிதல்
C) குறிப்பறிதல்
D) படைமாட்சி
57. களவழி நாற்பது போர் நிகழிடம்
A) சேந்தமங்கலம்
B) கழுமலம்
C) திருப்பத்தூர்
D) திருமங்கலம்
58. நூலின் இயல்கள் தந்திரம் என்ற பெயரால் வழங்கும் நூல்
A) திருவாசகம்
B) தேவாரம்
C) பெரிய புராணம்
D) திருமந்திரம்
59. காமத்துப்பால் அதிகாரங்களின் எண்ணிக்கை
A ) 38
B) 70
C) 35
D) 25
60. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான
விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் -1 பட்டியல் - 2
a) அகப்பொருள் விளக்கம் - 1 அமிர்த சாகரர்
b) யாப்பருங்கலம் - 2 ஐயன் ஆரிதனார்
c) புறப்பொருள் - 3. குணவீர பண்டிதர்
வெண்பாமாலை
d) நேமிநாதம் - 4. நாற்கவிராச நம்பி
குறியீடுகள் :
a) b) c) d)
A) 2 3 4 1
B) 4 1 2 3
C) 3 4 1 2
D) 3 1 4 2
61 "காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்குக்கையும் காலும்தானே மிச்சம்”- பாடலை எழுதியவர்
A) உடுமலை நாராயணகவி
B) கண்ணதாசன்
C) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
D) தஞ்சை ராமையாதாஸ்
62 'களத்து' என முடியும் பெரும்பாலான பாடல்களைக் கொண்ட நூல்
A) களவழி நாற்பது
B) கார் நாற்பது
C) இன்னா நாற்பது
D) இனியவை நாற்பது
63. 'ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்காள்' என்று கூறியவர்
A) திருஞான சம்பந்தர்
B) பட்டினத்தார்
C) குணங்குடி மஸ்தான்
D) திருமூலர்
64. 70 பாடல்கள் இருந்திருந்து தற்போது 22 பாடல்கள் மட்டுமே கிடைக்கப்பெறும் நூல்
A) பதிற்றுப்பத்து
B) முத்தொள்ளாயிரம்
C) பரிபாடல்
D) சிறுபஞ்சமூலம்
65. திருமாலை விடுத்து, நம்மாழ்வாரைக் கடவுளாகக் கொண்டு பாடல் பாடியவர்
A) திருமழிசையாழ்வார்
B) திருப்பாணாழ்வார்
C) மதுரகவியாழ்வார்
D) தொண்டரடிப் பொடியாழ்வார்
66. 'ஆர்கலி உலகத்து' என்னும் அடியைக் கூட்டிப் படித்துக் கொள்ள வேண்டிய நூல்
A) மதுரைக்காஞ்சி
B) முதுமொழிக் காஞ்சி
C) ஆசாரக்கோவை
D) ஏலாதி
67. அறிவெனப்படுவது
A) தன்கிளை செறாஅமை
B) பேதையார் சொல்நோன்றல்
C) கூறியது மறா அமை
D) மறை பிறர் அறியாமை
68. காய்முன் நிரை என்பது
A) வெண்சீர் வெண்டளை
B) நிரையொன்றாசிரியத்தளை
C) கலித்தளை
D) ஒன்றாத வஞ்சித்தளை
69. சகலகலாவல்லி மாலை - பாடியவர்
A) குமரகுருபரர்
B) சிவப்பிரகாசர்
C) படிக்காசுப் புலவர்
D) அருணகிரிநாதர்
70. 'எரொட தோற்றமும் உரித்தென மொழிப்' எந்தச் சிற்றிலக்கியத்தின் அடிப்படையாய் அமைந்தது?
A) தூது
B) பரணி
C) கோவை
D ) உலா
71 முகலாயர்களின் அவைக்கள மொழியாகத் திகழ்ந்த மொழி யாது?
A) ஹிந்தி
B) மராத்தி
C) உருது
D) வங்காளம்
72. யவகானம் எம்மொழியுடன் தொடர்புடைய இசை நாடகம்?
A) தெலுங்கு
B ) துளு
C) கன்னடம்
D) மலையாளம்
73. பொம்மை வீடு (The Doll House) என்ற புகழ்பெற்ற நாடகத்தின் ஆசிரியர்
A) இப்சன்
B) பெர்னாட் ஷா
C) ஷேக்ஸ்பியர்
D) செஸ்டர்டன்
74. மற்றொரு பாரதி பிறந்துவிட்டான் என்று வ.ரா. யாரைப் புகழ்கிறார்?
A) கவிமணி
B) பாரதிதாசன்
D) நாமக்கல் கவிஞர்
C) சுரதா
75. தென் நாடகத்திலகம் என்ற சிறப்புப்பட்டம் பெற்ற நாடக நடிகை
A) எம்.எஸ். இராஜம்
B) கே.ஆர். காந்திமதி பாய்
C) டி.வி. இராஜசுந்தரி
D) எஸ்.ஆர். ஜானகி
76. ரத்னாவளி நாடகத்தை எழுதியவர்
A) பாபர்
B) ஹர்ஷர்
C) அக்பர்
D) கௌடில்யர்
77. சுகுண விலாச சபையைத் தோற்றுவித்தவர்
A) சங்கரதாச சுவாமிகள்
B) சகஸ்ரநாமம்
C) அவ்வை சண்முகம்
D) பம்மல் சம்பந்த முதலியார்
78. கே.பி. சுந்தராம்பாளுக்கு மேலவை உறுப்பினர் பதவி கொடுத்து சிறப்பித்த தமிழக முதலமைச்சர்
A) காமராசர்
B) ராஜாஜி
C) பக்தவத்சலம்
D) அண்ணா
79. மான விஜயம் நாடகத்தின் ஆசிரியர்
A) பம்மல் சம்பந்த முதலியார்
B) விஸ்வநாத முதலியார்
C) பரிதிமாற் கலைஞர்
D) சங்கரதாச சுவாமிகள்
80. காந்தியடிகள் தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்துள்ளது என்ற கூற்றைக் கூறியவர்
A) திரு.வி.க
B) ராஜாஜி
C) மறைமலையடிகள்
D) வ.வே.சு. ஐயர்
81. பாண்டிய நாட்டிலும் சோழநாட்டிலும் நிலவிய சில வழக்காறுகளையும் உச்சரிப்புகளையும் குறிக்கும்
மலையாள நூல்
A) தந்திர வார்த்திகா
B) லீலாதிலகம்
C) இராமசரிதம்
D) இவற்றுள் எதுவுமில்லை
82. மரம் + வேர் = மரவேர் இது எவ்வகை விகாரம்?
A) கெடுதல்
B) மெய்பிறிதாதல்
C) தோன்றல்
D) திரிதல்
83. கால்டுவெல் தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
என்ற நூலை வெளியிட்ட ஆண்டு
A) 1856
B) 1886
C) 1804
D) 1902
84. பார்ப்பும் பிள்ளையும் எவ்வகைப் பெயர்?
A) ஆண்பாற் பெயர்
B) பெண்பாற் பெயர்
C) விரவுப் பெயர்
D) இளமைப் பெயர்
85. 1853-இல் கூய் மொழிக்கு இலக்கணம் வெளியிட்டவர்
A) ராபர்ட்ஸ்
B) லெட்சுமாஜி
C) பட்டாச்சார்யா
D) இவர்களுள் எவருமில்லை
86. குணசாகரர் எந்தப் பாவினை அந்தணப்பா என்று குறிக்கிறார்?
A) வெண்பா
B) ஆசிரியப்பா
C) கலிப்பா
D) வஞ்சிப்பா
87. திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு என்னும் நூலை எழுதியவர்
A) எமனோ
B) பர்ரோ
C) யூல்ஸ் ப்ளாக்
D) கால்டுவெல்
88. இவற்றுள் வினையெச்ச வாய்பாடு எது?
A) வந்து
B) உண்டு
C) சென்று
D) செய்து
89. இலக்கம் என்பது இவற்றுள் எதனைக் குறிக்கிறது?
A) இலக்கியம்
B) இலட்சியம்
C) இலட்சம்
D) இலக்கணம்
90. தொ.பொ.மீ இவற்றுள் எவற்றைச் சந்தியக்கரம் என்று குறிக்கிறார்?
A) ஐ.இ
D) அ.இ
91. சுகுண சுந்தரி என்னும் நாவலை எழுதியவர்
A) ராஜம் ஐயர்
B) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
C) மாதவையா
D) வடுவூர் துரைசாமி ஐயங்கார்
92. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் என்று போற்றப்பெறும் நாவலாசிரியர்
A) கல்கி
B) சாண்டில்யன்
C) மு.வ
D) சுஜாதா
93. மு.வ.வின் நாவல்களுள் சாகித்ய அகாடெமி விருது பெற்றது எது?
A) கரித்துண்டு
B) கயமை
C) நெஞ்சில் ஒரு முள்
D) அகல்விளக்கு
94. அகிலனின் வேங்கையின் மைந்தன் நாவல் எந்த விருதினைப் பெற்றுள்ளது?
A) சாகித்ய அகாடெமி
B) ஞானபீட விருது
C) தமிழக அரசு விருது
D) இவற்றுள் எதுவுமில்லை
95. இவர்களுள் பன்மொழிப் புலவர் என்று போற்றப்பெறுபவர்
A) தொ.பொ.மீ
B) வ.சுப. மாணிக்கம்
C) தேவநேயப் பாவாணர்
D) கி.வா. ஜகந்நாதன்
96. 'முல்லைப்பாட்டு ஆராய்ச்சி - எழுதியவர்
A) உ.வே.சா
B) மறைமலையடிகள்
C) பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார்
D) திரு.வி.க.
97. செலவு என்ற சொல்லைப் பயணம் என்ற பொருளில் முதன் முதலில் கையாண்டவர்
A) கு.ப.ரா.
B) திரு.வி.க.
C) ந. பிச்சமூர்த்தி
D) ரா.பி. சேதுப்பிள்ளை
98. கல்விக்கடல் ராய. சொக்கலிங்கம் வெளியிட்ட இதழ்
A) ஊழியன்
B) ஆனந்த போதிநி
C) கலைமகள்
D) குமரிமலர்
99. சமரச சன்மார்க்க நெறியினைப் பரப்பியவர்
A) தாயுமானவர்
B) பட்டினத்தார்
C) வள்ளலார்
D) குமரகுருபரர்
100. 'ஏ! தாழ்ந்த தமிழகமே! - யாருடைய படைப்பு?
A) பேரறிஞர் அண்ணா
B) பெரியார் ஈ.வெ.ரா.
C) கவிஞர் சுரதா
D) பாரதிதாசன்
101. தன்னைச் சுட்டும்போது ஐ என்னும் எழுத்துக்கு எத்தனை மாத்திரை?
A) ஒன்றரை
B) ஒன்று
C) இரண்டு
D ) அரை
102. இது என்பது
A) முற்றியலுகரம்
B) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
C) வன்றொடர்க் குற்றியலுகரம்
D) இவற்றுள் எதுவுமில்லை
103. அப்பரும் சம்பந்தரும் படிக்காசு பெற்ற தலம்
A) திருவீழிமிழலை
B) திருவாரூர்
C) திருநின்றவூர்
D) தஞ்சாவூர்
104. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்
A) தொ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B) அ. விநாயகமூர்த்தி
C) தேவநேயப் பாவாணர்
D) மு. வரதராசனார்
105. அதிரப் பொருவது
A) வாகைத்திணை
B) தும்பைத்திணை
C) உழிஞைத்திணை
D) பாடாண்திணை
106. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் -1 பட்டியல் - 2
a) சம்பந்தர் 1. வாகீசர்
b) நாவுக்கரசர் 2. வாதவூரர்
c) சுந்தரர் 3. ஆளுடைய பிள்ளை
d) மாணிக்கவாசகர் 4. ஆரூரர்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 1 4 2
B) 4 1 3 2
C) 2 3 4 1
D) 4 1 2 3
107. இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை எனப் பாராட்டப் பெறும் நூல்
A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) திருக்குறள்
D) தேவாரம்
108. சோழர் காலத் தேர்தல் முறை
A) பேழை முறை
B) பட்டய முறை
C) குடவோலை முறை
D) மக்களாட்சித் தேர்தல்
109. அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை ஆக்கியவர்
A) தோலாமொழித்தேவர்
B) திருத்தக்க தேவர்
C) வீராசாமி செட்டியார்
D) ஆ. சிங்காரவேலு முதலியார்
110. பதினெண் கீழ்க்கணக்கிலுள்ள நீதி நூல்களின் எண்ணிக்கை?
A) 11
B) 13
C) 14
D) 6
111 ரூஸோவின் கல்வித் தத்துவம் என்பது
A) எதிர்மறைக் கல்வி
B) அடிப்படைக் கல்வி
C) தொழிற் கல்வி
D) இடைநிலைக் கல்வி
112. சுயக் கல்வி முறையுடன் தொடர்புடையவர்
A) ரஸ்ஸல்
B) அரவிந்தர்
C) தாகூர்
D) ரூஸோ
113. மகிளா சமக்யா - என்ற திட்டம் யாருடைய கல்வி முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்டது?
A) நலிவடைந்த மக்கள்
B) SC/ST பிரிவினர்
C) பெண்கள்
D) கிராமப்புற மக்கள்
114. விஸ்வபாரதி அமைந்துள்ள இடம்
A) மேற்கு வங்காளம்
B) மகாராஷ்டிரா
C) பீகார்
D) தில்லி
115. கற்றல் நிலையில் சுதந்திரம் என்பதுடன் தொடர்புடையவர்
யார்?
A) கிருஷ்ணமூர்த்தி
B) அரவிந்தர்
C) ராதாகிருஷ்ணன்
D ) தாகூர்
116. தொலைதூரக் கல்விக்கான பொருத்தமான ஊடகம் எது?
A) அஞ்சல்
B) வானொலி
C) தொலைக்காட்சி
D) பத்திரிகை
117. Education of Man' என்ற நூலை எழுதியவர்
A) ஜான்டூயி
B) மாண்டிச்சோரி
C) புரோபல்
D) காந்தி
118. திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் ஆரம்பித்த ஆண்டு எது?
A) 1979
C) 1981
B) 1969
D) 1982
119. நடமாடும் பள்ளியை முதலில் பரிந்துரை செய்தவர்
A) மெக்டொனால்டு
B) இவான்
C) நீல்
D) பார்க்கர்
120. கல்வி என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்றவர் யார்?
A) காந்தி
B) நேரு
C) தாகூர்
D) ரஸ்ஸல்
121. பார்வை கவனவீச்சை அளவிடும் கருவி
A) மெமொரிட்ரம்
B) டாசிஸ்டோஸ்கோப்
C) மேசன் டிக்
D) மீட்ரோனோம்
122. எந்த நுண்ணறிவு கோட்பாடு ஆல்பிரட் பினோவால் ஆதரிக்கப்பட்டது?
A) ஒற்றை காரணி
B) இரட்டை காரணி
C) குழுக்காரணி
D) பல்காரணி
123. ஆளுமை பற்றிய உளப்பகுப்பாய்வினை முதலில்
தொடங்கியவர்
A) அட்லர்
B ) ஷங்
C) பிராய்ட்
D) இவர்களுள் எவருமில்லை
124. காக்னேவின் படி நிலைக் கற்றல் எத்தனை பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளது?
A) 8
B) 9
C) 7
D) 10
125. ஒரு சிறந்த குழந்தை சாதாரண குழந்தையை விட எத்தனை ஆண்டுகள் முன்னோக்கி இருக்கும்?
A) 1 வருடம்
B) 112 வருடங்கள்
C) 2 வருடங்கள்
D) 2% வருடங்கள்
126. மனித உடலில் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?
A) 26
B) 36
C) 46
D) 39
127. கற்றவற்றை எத்தகைய மாற்றமின்றி மீண்டும் அப்படியே வெளிப்படுத்துவது
A) முழு நினைவு
B ) குருட்டு மனப்பாடம்
C) சரியான நினைவு
D ) உடனடி நினைவு
128. நுண்ணறிவு சொற்சாரா சோதனை யாருக்கு ஏற்றது?
A) காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதவர்கள்
B) படிப்பறிவில்லாதவர்கள்
C) சிறு குழந்தைகள்
D) இவர்கள் அனைவருக்கும்
என அழைக்கப்படும்.
129. Theory of Motivation' என்ற நூலை எழுதியவர்
A) மேட்சன்
B) மாஸ்லோ
C) முர்ரே
D) ஹல்
130. வெஸ்லர் குழந்தைகளுக்கான நுண்ணறிவு சோதனை நடத்திய ஆண்டு
A) 1939
B) 1949
C) 1955
D) 1956
131 யூனெஸ்கோ ஆதரித்த கல்வி எது?
A) பெண் கல்வி
B) முதியோர் கல்வி
C) அனைவருக்கும் கல்வி
D) இவற்றுள் எதுவுமில்லை
132. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மக்கள்தொகை அடர்த்திகுறைவாக உள்ளது?
A) நீலகிரி
B) பெரம்பலூர்
C) சிவகங்கை
D) தர்மபுரி
133. 1973-ஆம் ஆண்டு எந்த நாடு தொலைதூரக் கல்வியில் சோதனைகளை செய்தது?
A) UK
B) USA
C) USSR
D) ஜப்பான்
134. குழந்தை தொழிலாளி ஒழிப்பு நாள்
A) ஜுன் 12
B) ஜுலை 12
C) ஆகஸ்டு 12
D) நவம்பர் 12
135. முறையான கல்வி முகமை என்றழைக்கப்படுவது எது?
A) பள்ளி
B) வீடு
C) சமூகம்
D) இவற்றுள் எதுவுமில்லை
136. முன்னோடிப் பள்ளியின் மறுபெயர்
A) தொடக்கப்பள்ளி
B) முன் தொடக்கப்பள்ளி
C) நர்சரி பள்ளி
D) நவொதயா பள்ளி
137. தமிழ்நாட்டில் எத்தனை திறந்தநிலைப் பள்ளிகள் உள்ளன?
A) 25
B) 26
C) 27
D) 28
138. செயலறிவுக்கல்வித் திட்டம் தொடங்கியது யாருக்காக?
A) தொழிலாளர்கள்
B) உழவர்கள்
C) மலைவாழ் மக்கள்
D) இவர்கள் அனைவருக்கும்
139. தேசியக் கல்விக் கொள்கை கடைபிடிக்கப்பட்ட ஆண்டு
A) 1981
B) 1983
C) 1986
D) 1989
140. முதியோர் கல்விக்காக மகிளா மண்டல் எந்த நிலைக்காக
அமைக்கப்பட்டது?
A) வட்டார நிலை
B) கிராமப்புற நிலை
C) மாவட்ட நிலை
D) மாநில நிலை
141. இந்தியா ஹாக்கிப் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற ஆண்டு
A) 1971
B) 1973
C) 1978
D) 1975
142. விரிவாக்கம் தருக : NABARD
A) National Bank for Agriculture and Rural
Development
B) National Books and Research Department
C) National Bharath Rador Defence
D) Nuclear and Bharath Rador Defense
143. பாண்டியர்களின் துறைமுகம்
A) தொண்டி
B) முசிறி
C) கொற்கை
D) பூம்புகார்
144. கோரா (Gora) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A) டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்
B) இரவீந்திரநாத் தாகூர்
C) முல்க்ராஜ் ஆனந்த்
D) எல்.கே. அத்வானி
145. அசோகரது கல்வெட்டுகளில் அவருடைய பெயர் பொதுவாக எப்படிக் குறிக்கப்பட்டுள்ளது?
A) சக்கரவர்த்தி
B) தர்மதேவர்
C) பிரியதர்சி
D) தர்மகீர்த்தி
146. டில்லி சுல்தான் அரசுக்கு வருவாய் கீழ்க்கண்டவைகளில் எதன் மூலம் அளிக்கப்பட்டது?
A) கராஜ்
B) காம்ஸ்
C) ஜிஸியா
D) ஜாகத்
147. வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டியில் குளிர்ச்சியூட்ட பயன்படுத்தப்படும் வாயு
A) நியான்
B) ஆக்ஸிஜன்
C) நைட்ரஜன்
D) ஃபிரியான் - 12
148. ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய பொதுச் செயலாளர்
A) பான்கி-மூன்
B) சசிதரூர்
C) கோஃபி அன்னான்
D) அஷ்ரஃப் கனி
149. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
A) 26 நவம்பர் 1949
B) 26 ஜனவரி 1950
C) 26 ஜனவரி 1949
D) 15 ஆகஸ்ட் 1949
150. இந்திய குடியரசுத்தலைவரால் எத்தனை ராஜ்யசபா உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்?
A) 2
B) 4
C) 6
D) 12
0 Comments