நிமிர்ந்து நில் ! தன்னம்பிக்கைக் கவிதை - மு.மகேந்திர பாபு / MOTIVATIONAL KAVITHAI - NIMIRNTHU NIL - MAHENDRA BABU

 

நிமிர்ந்து நில்


குன்றென நிமிர்ந்து நில் - மனதில்

நன்றெனப் பட்டதை நயம்பட உரைத்திட

நாளும் நீ நிமிர்ந்து நில் .


சோர்வுகள் எல்லாம் சுக்கு நூறாகும் !

சுதந்திரக் காற்றும் உன் பேராகும் !

எழுச்சி கொண்டு நீ எழுந்திடும் போது

இமயமும் உன் கால் தூசாகும் !


எட்டுத் திசையும் கிட்ட வந்திடுமே !

எட்டு வைத்தால் வெற்றிக் கனியைத்

தினமும் உன் கையில் தந்திடுமே!

நிமிர்ந்து நின்றால் கையில் தந்திடுமே !


வானம் அதிர வாழ்த்தொலி கேட்டிடுமே !

தானம் பகிர வாழ்க்கையும் கூட்டிடுமே !

அன்பே அகிலத்தில் அனைத்தையும் மாற்றிடுமே !

நிமிர்ந்து நின்றால் புகழினில் ஏற்றிடுமே !


வீரம் ஒன்றால் வெற்றியைப் பெற்றிடலாம் !

ஈரம் கொண்டால் மனங்களைக் கற்றிடலாம் !

பொய்யும் புரட்டும் மனமதில் உடைத்துவிடு !

நிமிர்ந்து நின்றே புதுசரித்திரம் படைத்துவிடு  !


உழைக்கும் வர்க்கம் உயர்ந்திட வேண்டும் !

உண்மை எங்கும் நிறைந்திட வேண்டும் !

நேர்மை கொண்டு நிம்மதி கண்டு

உன்மதியாலே உலகினை வென்றிட வேண்டும் !


நிமிர்ந்து நில்  !நிமிர்ந்து நில் !

நிச்சயம் வெல்லும் உனது சொல் !

என்னால் முடியும் என்னால் முடியும் !

நிமிர்ந்து நின்றால் என்றும் விடியும் !


மு.மகேந்திர பாபு , 


Post a Comment

2 Comments