போட்டித் தேர்வில் வெற்றி ! - TRB , TNPSC , TET - தமிழ் - முதன்மைச் செய்திகள் / TNPSC , TRB , TET , UPSC - TAMIL IMPORTANT NEWS


போட்டித் தேர்வில் வெற்றி 

TNPSC , TRB , TET , UPSC - தமிழ்

முதன்மைச் செய்திகள்

*   தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்கும் தலைமையாக உள்ள தகுதியும், அவற்றிலும் மிக்க மேன்மையுடையதுமான மொழியே உயர்தனிச் செம்மொழி. இவ்விலக்கண அடிப்படையை ஆராயுமிடத்துத் தமிழ்மொழியானது தெலுங்கு, கன்னடம்,  மலையாளம் முதலியவற்றுக்கெல்லாம் தலைமையும், அவற்றினும் மிக்க மேன்மையும் உடையதாகையால் உயர்மொழியாகத்   திகழ்கிறது. தான் வழங்கும் நாட்டில் பயிலும் மற்றைய மொழிகளின்   உதவியின்றித் தனித்து இயங்கவல்ல மொழியே தனிமொழி எனப்படும். திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூய்மொழி, புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம்

                                   பரிதிமாற் கலைஞர்

* தொன்மைமிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே தொன்மை,   முன்மை, எளிமை, ஒளிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறது.

                               தேவநேயப் பாவாணர்.

* இந்தியர்களைப் பற்றி குறைவாக மதிப்பிட்டுப் பேசிய ஹிட்லரை எதிர்த்து வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லர் மன்னிப்பு கேட்கச் செய்தவர் மாவீரன் செண்பகராமன் ஆவார்.

* "இளைஞர்கள் பிறரிடமிருந்து நல்லவற்றை ஏற்றுக் கொள்ளுதல்   வேண்டும். அப்போதுதான் வளரமுடியும். நீங்கள் கடவுளின் குழந்தைகள். சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்"

                                           விவேகானந்தர்:

* எழும்பூர் கென்னத் சாலையில் தனக்கு உரிமையாக இருந்த மாளிகை   ஒன்றனைப் பள்ளிக்கு ஆவணம் எழுதிப் பதிவு செய்து கொடுத்தவர் மருத்துவ மாமேதை குருசாமி அவர்களாவார். அப்பள்ளியின் ஆசிரியராக இருந்த வேமூர் நரசிம்மர் ஏழை மாணவர்க்கு நண்பகல் இலவச உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தியவர்.

* காவிரிப்பூம்பட்டினத்திற்கு அண்மையிலுள்ள கழார்ப் பெருந்துறைக்குச் சேரநாட்டுத் தலைவன் ஆட்டனத்தி புனல் ஆடி புகழ் சேர்த்தான்.  மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், நீரில் மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழைமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள்.   மற்போரில் வல்ல மல்லர்கள் மன்னரால் மதிக்கப்பெற்றனர்.

* தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமும் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர விளையாட்டைப் புறநானூறு வர்ணிக்கிறது.

* முல்லை நிலத்தில் 'ஏறு தழுவுதல்' என்னும் விளையாட்டு நடைபெற்றது. ' காளையின் வாலைப் பிடித்தல் தாழ்வு' என்பது தமிழர் கொள்கை

* அரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும்,
அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. மதுரையிலுள்ள
தமுக்கம் மைதானம் யானைப்போர் காண்பதற்கான திடலாகும்

* சோழநாட்டின் பழைய தலைநகரமான உறந்தையூரில் வீரக்கோழிகள்
சிறந்திருந்தமையால் ‘கோழியூர்' என்னும் பெயரும் அதற்கமைந்தது.

* 1901-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் மதுரையில் உள்ள சேதுபதி
உயர்நிலைப் பள்ளியில் நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
வள்ளல் பாண்டித்துரை ஆவார்.

* “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” - பாரதிதாசன்

* பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டி குடைவரையும்
மலையடிக் குறிச்சி குடைவரை கோயில்களே தமிழகத்தின் முதல்
குடைவரைக் கோயில் எனக் கூறப்படுகின்றன.

* பத்திரிகையை (செய்தித்தாள்) பாரதிதாசன் காரிருள் அகத்தில் நல்ல
கதிரெளி' என்று கூறுகிறார். 

* “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும்
சிறந்தனவே'' - பாரதியார்.

* “புகழெனின் உயிரும் கொடுப்பர் பழியெனின் உலகுடன் பெறினும்
கொள்ளலர்'
               புறநானூறு
-
-


Post a Comment

0 Comments