போட்டித் தேர்வில் வெற்றி
( TNPSC , TRB , TET , UPSC )
தமிழ் - முதன்மைத் தகவல்கள் - பகுதி - 1
*************** ************** ************
* உ.வே.சா. தம் வாழ்க்கை வரலாற்றை 'என் சரிதம்' என்னும் பெயரில் ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார்.
* திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிற்றூரான கூந்தன் குளத்தில் பறவைகளின் நலன் கருதி மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை.' திருவிழாக் காலங்களிலும் திருமண வீடுகளிலும் மேளதாளம் இடம் பெறுவதில்லை.
* இந்தியாவிலுள்ள இராஜநாகம்தான் உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பாகும். 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு இது. மற்ற பாம்புகளையும் கூட உணவாக்கிக் கொள்ளும்.
* கூரம் நடராசர் செப்புத் திருமேனி, பழந்தமிழர் உலோகக் கலைக்குச் சான்றாக உள்ளது,
* அறிவு என்பது வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே புதியனவற்றை ஏற்றல் வேண்டும் - ஈ.வெ.ரா. பெரியார்
* அழகுக் கலைக்கு இன்கலை, கவின்கலை, நற்கலை என்றும் வேறுபெயர்கள் உண்டு. இவ்வழகுக் கலைகள் ஐந்து. அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை
- மயிலை. சீனி. வேங்கடசாமி; நூல் - தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்
* உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' கம்பர்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்.
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
- பாரதியார்.
* ' தமிழ் விருந்து' என்ற நூலின் ஆசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை
* பால்பகாப் பெயர்கள் - குழந்தை, சிற்பி, ஏழை, அமைச்சர், பேதை, அறிவாளி, மேதை, நோயாளி.
* தனிக்குறிலை அடுத்து ரகர ஒற்று (ர்) வந்தால் அது பிறமொழிச் சொல்லாகும். (எ.கா) அர்ச்சுனன், சர்ப்பம், அர்ச்சனை
* “நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்துவிடுவேன்”"தன் இனத்தையும் மொழியையும் பாடாத வேரில்லாதமரம் ; கூடில்லாத பறவை'
- ருஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதேவ்
* கோவூர்கிழார் - போரைத் தவிர்த்த புலவர் மலையமான் பிள்ளைகளைக் காத்தவர் இளந்தத்தனாரைச் சிறைமீட்டவர்
* நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு. திருவள்ளுவமாலை ஆகியவற்றில் இவரின் 18 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
* பண்டைக்காலத்தில் போருக்குப் புறப்படுவதற்குமுன் அரசன், தன் அரண்மனையில் வீரர்களுக்குப் பெருவிருந்து அளிப்பான். அதனைப் பெருஞ்சோறு அளித்தல்' என்பர். போருக்குச் செல்லும் வழியில் அரசனும் படைத்தலைவர்களும் தங்குவதற்குரிய இடம் பாடி வீடு' எனப்பட்டது.
0 Comments