TRB tamil
நாடும் நகரமும்
+ நாடு என்ற சொல்லின் பொருள் மக்கள் வாழும் நிலம் என்பதாகும்.
* சிறந்த ஊர்கள் நகரமாகும். நாட்டின் தலைமை சான்ற நகரம் தலைநகரமாகும்,
* மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு எனப்பட்டன.
* சிறுபான்மையாக தனி ஊர்களும் 'நாடு' எனப்பட்டன. (எ.கா)
பொருநரையாற்றின் கரையிலுள்ள முரப்புநாடு அதன் மறுகரையிலுள்ள வல்லநாடு மாயவரத்தின் அருகிலுள்ள கொரநாடு (கூறைநாடு பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள காணாடு மற்றும் மதுராந்தக வட்டத்திலுள்ள தொன்னாடு,
* முன்னாளில் 'ஊர்' என்றும் பட்டி.' என்றும் வழங்கப்பட்ட சில இடங்கள் பிற்காலத்தில் சிறப்புப் பெற்று நகரங்களாயின.
* நம்மாழ்வார் பிறந்த குருகூர் பின்னாளில் ஆழ்வார்திருநகர் ஆயிற்று.
* விருதுபட்டி, விருதுநகர் ஆயிற்று.
* சென்னையின் முக்கிய அங்கங்களாக விளங்கும் மயிலாப்பூரும் திருவல்லிக்கேணியும் அன்று கடற்கரைச் சிற்றூர்களாக விளங்கின.
* மயிலாப்பூரிலுள்ள பழைமையான கபாலீச்சுரம் என்ற சிவாலயத்தை திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
* 'திருவல்லிக்கேணி' முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அல்லி மலர்கள் நிறைந்த குளம் என்ற பொருளில் திருஅல்லிக்கேணி எனப்பட்டு திருவல்லிக்கேணி ஆயிற்று.
* 'புரம்' என்ற சொல், சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். (எ.கா)
காஞ்சிபுரம், பல்லவபுரம் (பல்லாவரம்) கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம்,
* சேர, சோழ, பாண்டியரில் சேரர்களே பழைமையானவர்கள்என்பதை தொல்காப்பியம்
“போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்" - என்று குறிப்பிடுகிறது.
* கடற்கரையில் உருவாகும் நகரங்கள் 'பட்டினம்' எனப் பெயர் பெறும். (எ.கா) காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம்.
* கடற்கரைச் சிற்றூர்கள் 'பாக்கம்' எனப் பெயர் பெறும் (எ.கா.)
பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம்.
'புலம்' என்பது நிலத்தைக் குறிக்கும். (எ.கா.) மாம்புலம், தாமரைப்புலம். குரவைப்புலம்.
* நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் 'குப்பம்' ஆகும். நொச்சிக் குப்பம், மஞ்சக் குப்பம், மந்தாரக் குப்பம்,
* பண்டைய சேரநாடு என்பது இன்றைய கேரளப்பகுதிகளும் (தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும் இணைந்ததாகும். சேலம், கோவைப் பகுதிகள் 'கொங்கு நாடு'என்ற நூலில் அதன் ஆசிரியர் கார்மேகக் கவிஞர் குறிப்பிடுவன,
வடக்கு - பெரும்பாலை ;
தெற்கு - பழனிமலை
கிழக்கு - மதிற்கரை
கொங்குநாட்டில் பாயும் ஆறுகள் காவிரி, பவானி, நொய்யல், மேற்கு - வெள்ளிமலை, கிழக்கு -
'ஆன்பொருநை எனப்படும் அமராவதி ஆகியனவாகும்.
0 Comments