போட்டித் தேர்வில் வெற்றி - தமிழ் வளர்த்த அயல் நாட்டவர்

 

போட்டித் தேர்வில் வெற்றி

TNPSC , TRB , TET , UPSC  - தமிழ் 

தமிழ்த் தொண்டாற்றிய அயல் நாட்டவர்


 
வீரமாமுனிவர்

நாடு  : இத்தாலி 

இயற்பெயர் -  கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

நாடு :  காஸ்திகிளியோன் (இத்தாலி)

பெற்றோர் :  கொண்டல்பே பெஸ்கி - எலிசபெத்

காலம் :  08.11.1680 முதல் 04.02.1747 வரை

தமிழகம் வந்த ஆண்டு -  கி.பி.1710 (30-ஆவது அகவை)


அறிந்திருந்த மொழிகள்

: இத்தாலியம், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், வடமொழி, தமிழ், தெலுங்கு.

தமிழாசிரியர் - மதுரை சுப்ரதீபக் கவிராயர்

இயற்றிய நூல்கள்

தொன்னூல் விளக்கம்: எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய
ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் : முதன்முதலில் பேச்சுத் தமிழுக்கு   இலக்கணம் வகுத்தார்.

பிற படைப்புகள் : வேதவிளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக்கண்ணாடி,
செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை, பரமார்த்த குரு கதை (தமிழில்
முதன் முதலில் தோன்றிய நகைச்சுவை இலக்கியம்), ஞானோபதேசம்,
திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை.
காவியம் : தேம்பாவணி, மூன்று காண்டங்களில் 36 படலங்களைக்
கொண்டு 3615 விருத்தப்பாக்களால் ஆனது இக்காவியம். இதில்
பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களைக் கொடுத்துள்ளார். தமிழைத்
தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமையுடையது தேம்பாவணி.

         திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டனையும் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

அகராதிகள்
* சதுரகராதி, - தமிழ் - இலத்தீன், - இலத்தீன் - தமிழ், பிரெஞ்சு
- தமிழ், தமிழ் - பிரெஞ்சு, போர்த்துகீசிய - இலத்தீன் - தமிழ்.

*  இவருடைய வாழ்க்கை வரலாற்றை வித்துவான் முத்துசாமி பிள்ளை
அவர்கள் எழுதி 1822-இல் வெளியிட்டார்.

* தமிழகத்திற்கு வந்த பின் வீரமாமுனிவர் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, காவியுடை அணிந்து தமிழக சாமியாராகவே மாறி விட்டார்.

பெயர் மாற்றம்

கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காக தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்து தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார். தன் பெயரை 'தைரியநாதன்' என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர் அப்பெயர் வடமொழி என்பதாலும் நன்கு தமிழ் கற்றதாலும் தனது பெயரை தனித்தமிழில் 'வீரமாமுனிவர்' என மாற்றிக் கொண்டார்.

தமிழ் எழுத்துகளில் சீர்திருத்தம்

              முற்காலத்தில் எகர, ஒகர குற்றெழுத்துகள் வேறுபாடின்றி
காணப்பட்டன.

ள், ஓ - குற்றெழுத்துகள். அவற்றை எ, ஒ என்று வாசிக்க வேண்டும்.

எ, ஒ - நெடில் எழுத்துகள். புள்ளியில்லாத எழுத்துகளை ஏ, ஓ என்று வாசிக்க வேண்டும்:

க்ெ, ப்ெ - குற்றெழுத்துகள் அவற்றை. குறில் ஒலிகளாகவும் புள்ளியில்லாத கெ, பெ ஆகியவற்றை நெடில் ஒலிகளாகவும் வாசிக்கவேண்டும்.

வீரமாமுனிவர் அவற்றை

எ, ஒ - குறில் எழுத்துகள் எனவும் ஏ, ஓ - நெடில் எழுத்துகள் எனவும் மாற்றினார்.

கெ, பெ - குறில் எழுத்துகள் கே, பே நெடில் எழுத்துகள் எனவும் மாற்றினார்.

1747-இல் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்திருந்த  குருமடத்தில் இயற்கை எய்தினார்.



Post a Comment

0 Comments