மாணிக்கவாசகரின் திருவாசகம் - 4 , போற்றித் திரு அகவல் - பகுதி 3 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - 4 , POTRITH THIRU AKAVAL - PART - 3

 


மாணிக்கவாசரின் திருவாசகம்

4 , போற்றித் திரு அகவல்

பகுதி - 3


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி



மெய்தரு வேதியன் ஆகி, வினைகெடக்,

கைதரவல்ல கடவுள் போற்றி!

ஆடக மதுரை அரசே, போற்றி!

கூடல் இலங்கு குருமணி போற்றி!

தென் தில்லை மன்றினுள் ஆடி, போற்றி!

இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!

மூவா நான்மறை முதல்வா போற்றி!

சே ஆர் வெல்கொடிச் சிவனே, போற்றி!

மின்ஆர் உருவ விகிர்தா, போற்றி!

கல் நார் உரித்த கனியே, போற்றி!

காவாய், கனகக் குன்றே, போற்றி!

ஆ! ஆ! என் தனக்கு அருளாய் போற்றி!

படைப்பாய், காப்பாய், துடைப்பாய், போற்றி!

இடரைக் களையும் எந்தாய், போற்றி!

ஈச, போற்றி! இறைவ, போற்றி!

தேசப் பளிங்கின் திரளே, போற்றி!

அரைசே, போற்றி! அமுதே போற்றி!

விரை சேர் சரண விகிர்தா, போற்றி!

வேதி, போற்றி!, விமலா, போற்றி!

ஆதி, போற்றி! அறிவே, போற்றி!

கதியே, போற்றி! கனியே, போற்றி!

நதிசேர் செஞ்சடை நம்பா, போற்றி!

உடையாய், போற்றி! உணர்வே, போற்றி!

கடையேன் அடிமை கண்டாய், போற்றி!

ஐயா, போற்றி! அணுவே, போற்றி!

சைவா, போற்றி! தலைவா, போற்றி!

குறியே, போற்றி! குணமே, போற்றி!

நெறியே, போற்றி! நினைவே, போற்றி!

வானோர்க்கு அரிய மருந்தே, போற்றி!

ஏனோர்க்கு எளிய இறைவா, போற்றி!

மூவேழ் சுற்றம் முரண்உறு நரகிடை

ஆழாமே அருள் அரசே, போற்றி!

தோழா, போற்றி! துணைவா போற்றி!

வாழ்வே, போற்றி! என்வைப்பே, போற்றி!

முத்தா, போற்றி! முதல்வா, போற்றி!

அத்தா, போற்றி! அரனே, போற்றி!

உரை, உணர்வு, இறந்த ஒருவ, போற்றி!

விரிகடல் உலகின் விளைவே, போற்றி!

அருமையில் எளிய அழகே, போற்றி!

கருமுகில் ஆகிய கண்ணே, போற்றி!

மன்னிய திரு அருள் மலையே, போற்றி!

என்னையும் ஒருவன் ஆக்கி, இருங் கழல்

சென்னியில் வைத்த சேவக, போற்றி!

தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி!

அழிவுஇலா ஆனந்த வாரி, போற்றி!

அழிவதும், ஆவதும் கடந்தாய், போற்றி!

முழுவதும் இறந்த முதல்வா, போற்றி!

மான் நேர் நோக்கி மணாளா, போற்றி!

வானகத்து அமரர் தாயே, போற்றி!

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி!

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி!

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி!

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி!

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!

அளிபவர் உள்ளத்து அமுதே, போற்றி!

கனவிலும் தேவர்க்கு அரியாய், போற்றி!

நனவிலும் நாயேற்கு அருளினை, போற்றி!

இடை மருது உறையும், எந்தாய் போற்றி!

சடையிடைக் கங்கை தரித்தாய், போற்றி!

Post a Comment

0 Comments