PG TRB TAMIL - நோய் தீர்க்கும் மூலிகைகள்

 

PG TRB TAMIL

நோய் தீர்க்கும் மூலிகைகள்

துள

: துளசிச் செடியின் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்கச் செய்து ஆவி பிடித்தால் மார்புச் சளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும். அதன் இலைகளை எலுமிச்சம்பழச் சாற்றுடன் அரைத்துப் போட்டால், படை நோய் நீங்கும். விதைகளைப் பொடிசெய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் உண்டால் உடற்சூடு, நீரெரிச்சல் ஆகியன நீங்கும்.

கீழ்க்காய் நெல்லி : இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் அழைப்பர். காய்களுடன் கூடிய கீழாநெல்லியை அரைத்து, அந்த விழுதில் 50 கிராம் எடுத்து எருமைத் தயிருடன் கலந்து காலை வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அவ்வாறு மூன்று நாட்கள் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் நீங்கி விடும். கீழாநெல்லி - இலைகளை கற்கண்டுடன் அரைத்து மூன்று கிராம் அளவிற்கு காலை மாலை இருவேளையும் 4 நாட்கள் உட்கொண்டால் சிறுநீர்த் தொடர் நோய்கள் நீங்கிவிடும்.

தூதுவளை : இதன் இலைகளை நல்லெண்ணையில் சமைத்து உணவோடு சேர்த்து 21 நாட்கள் உண்டு வந்தால் 'சுவாச காசம்' என்னும் நோய் நீங்கும், இளைப்பு இருமல் நீங்கும், குரல் வளம் மேம்படும். இதன் வேறுபெயர்களாவன, தூதுளை, சிங்கவல்லி இதனை வள்ளலார் ' ஞானப்பச்சிலை' எனப் போற்றுகிறார்.

குப்பைமேனி : இது நச்சுக்கடிக்கு நல்ல மருந்தாகும். இதன் இலைகளைக்  காயவைத்துப் பொடியாக்கி உடலில் பூசினால் படுக்கைப் புண் குணமாகும்.  வயதுக்கேற்ற வகையில் உண்ணக் கொடுத்தால் மலப்புழுக்கள் வெளியேறி வயிறு தூய்மையாகும். இதன் இலைகளுடன் மஞ்சள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துப் பூசினால் சொறி, சிரங்கு நீங்கும்.

சோற்றுக் கற்றாழை : இதன் தோலை நீக்கி, சோற்றுப் பகுதியை மட்டும் எடுத்து நல்லெண்ணையுடன் இட்டு காய்ச்சித் தேய்த்துவர முடி வளரும். மஞ்சள் சேர்த்து காயம்பட்ட இடத்தில் பூசினால் காயம் குணமாகும். பசும்பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் மூலச்சூடு குறையும். பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை இது நீக்குவதால், இதைக் 'குமரி' என்று அழைப்பர். இதனை விளக்கும் பழமொழி “குமரி கண்ட நோய்க்குக் குமரி கொடு” என்பதாகும்.



Post a Comment

0 Comments