2023 - புத்தாண்டு சிறப்பு தின வினாடி வினா - இயங்கலைத்தேர்வு - வினா & விடை / 2022 - NEW YEAR ONLINE TEST - QUESTION & ANSWER

 


ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்

2023 - புத்தாண்டு தின சிறப்பு வினாடி வினா 

இயங்கலைத்தேர்வு - வினா & விடை 

1) ஜனவரி முதல் தேதி புத்தாண்டாக ------ ஆண்டுகள் பின்பற்றப்படுகிறது.

அ) 500

ஆ) 600

இ) 100

விடை : அ ) 500

2) மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாகக் கருதியவர்கள் -

அ) ஆங்கிலேயர்கள்

ஆ) மெசபடோமியர்கள்

இ) ஆஸ்திரேலியர்கள்

விடை : ஆ ) மெசபடோமியர்கள்

3) ரோமானியர்கள் ----- நாளை   புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.

அ) மார்ச் 1

ஆ) மார்ச் 25

இ) மார்ச் 11

விடை : அ ) மார்ச் 1

4) மெசபடோமியர்கள் காலத்தில்
ஒரு   ஆண்டிற்கு  ------- மாதங்கள்
இருந்தன.

அ) 12 மாதங்கள்

ஆ) 10 மாதங்கள்

இ) 15 மாதங்கள்

விடை : ஆ) 10 மாதங்கள்

5) இயேசு பிறப்பதற்கு முன்பே --------காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

அ) ஜூலியன்

ஆ) கிரிகோரியன்

இ) ஜப்பானியன்

விடை : அ) ஜூலியன்

6) பத்து மாதங்களாக இருந்த ஆண்டில் , கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்த ரோமானிய மன்னன் யார்?

அ) நுமா போம்பிலியஸ்

ஆ) கிரிகோரியன்

இ) ஜூலியன்

விடை : அ) நுமா போம்பிலியஸ்

7) ரோமானியர்களின் கடவுள் ------

அ) ஜனஸ்

ஆ) மார்ஷல்

இ) இயேசு

விடை :அ) ஜனஸ்

8) ரோமானியர்கள் -----  நகர்வின் அடிப்படையிலானகாலண்டர் முறையைக்
கண்டுபிடித்தனர்.

அ) சூரியன்

ஆ) பூமி

இ) சந்திரன்

விடை : அ) சூரியன்

9 ) ரோமானியர்கள் பயன்படுத்திய 10
மாதக்காலண்டரில் கூடுதலாகச்
சேர்க்கப்பட்ட இரண்டு மாங்கள் ----- , ------
ஆகும்.

அ) ஜனவரி , பிப்ரவரி

ஆ) ஜனவரி , மார்ச்

இ) பிப்ரவரி, மார்ச்

விடை : அ) ஜனவரி , பிப்ரவரி

10 ) ஜனவரி என்ற பெயர்
ரோமானியர்களின் கடவுளான ------நினைவாக வழங்கப்பட்டது.

அ) ஜீசஸ்

ஆ) ஜனஸ்

இ) மானஸ்

விடை : ஆ) ஜனஸ்

11) ஜனவரி 1 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரபூர்வமாக அறிவித்த ரோமானிய மன்னர் ------

அ) ஜூலியஸ் சீசர்

ஆ) நுமா போம்பிலியஸ்

இ) ஜூலியன்

விடை :  அ) ஜூலியஸ் சீசர்

12) இங்கிலாந்து மன்னர்கள் ------
பிறந்த நாளை புத்தாண்டாகக்
கொண்டாடப் போராடினார்கள்.

அ) இயேசு

ஆ) காப்ரியேல்

இ) ஜூஸ்

விடை : அ) இயேசு

13 ) லீப் ஆண்டை அறிமுகப்படுத்தியவர் -

அ) போப் 13 ஆம் கிரிகோரி

ஆ) 14 ஆம் போப்பாண்டவர்

இ) 15 ஆம் ஜான் சாலமன்

விடை :  அ) போப் 13 ஆம் கிரிகோரி

14) லீப் ஆண்டில் பிப்ரவரிமாதத்திற்கு ----- நாட்கள்

அ) 29 நாட்கள்

ஆ) 28 நாட்கள்

இ) 30 நாட்கள்

விடை : அ) 29 நாட்கள்

15 ) உலகம் முழுவதிலும் உள்ள
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
காலண்டர் முறை -----

அ ) கிரிகோரியன் காலண்டர்

ஆ) ஜூலியன் காலண்டர்

இ) ஆங்கிலேயக்காலண்டர்

விடை : அ ) கிரிகோரியன் காலண்டர்

16) ஜூலியஸ் சீசர் ஜனவரி 1 ஆம்
தேதியை ஆண்டின் முதல்நாளாக அதிகாரப்பூர்வமாகஅறிவித்த ஆண்டு ---

அ) கி.மு.46

ஆ) கி.மு.47

இ) கி.மு.56

விடை :  அ) கி.மு.46

17) ஜூலியன் காலண்டரை இரத்து செய்தவர் -----

அ) கிரிகோரி

ஆ) ஜூலியஸ் சீசர்

இ) போம்பிலியஸ்

விடை :  அ) கிரிகோரி

18) உலகிலேயே முதன்முதலில்
நியூசிலாந்து நாட்டின் ------- பகுதியில் ஆங்கிலப்புத்தாண்டு பிறக்கிறது.

அ) சமோவா

ஆ) சிட்னி

இ) மணிலா

விடை : அ) சமோவா

19 ) நியூசிலாந்தில் டிசம்பர் 31
ஆம் நாள் ----- மணிக்கு   ஆங்கிலப்  புத்தாண்டு  பிறக்கிறது.

அ ) மாலை 4:30 மணி

ஆ) இரவு 12 மணி

இ) மாலை 6 மணி

விடை :  அ ) மாலை 4:30 மணி

20) டிசம்பர் 31 ஆம் நாள் மாலை
6:30 மணிக்கு ஆங்கிலப்புத்தாண்டு ----- ல்
பிறக்கிறது.

அ) ஜப்பான்

ஆ) நார்வே

இ) ஆஸ்திரேலியா


விடை : இ) ஆஸ்திரேலியா

2023 புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே !

Post a Comment

0 Comments