9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , முன்னுரமைப்பாடம் - கவிதைபபேழை - புறநானூறு - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

9 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 2 - முன்னுரிமைப் பாடம் 

கவிதைப்பேழை - புறநானாறு -

இயங்கலைத்தேர்வு

வினா உருவாக்கம் 

 ' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,

தமிழாசிரியர் , மதுரை.
|
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்
ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயர் , வகுப்பு அல்லது பணி , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி தேர்வு இணைப்பைப்
பெறலாம்.

***************   ***************   **********

1) புறநானூறு ----- நூல்களுள் ஒன்று.

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) பதினெண்கீழ்க்கணக்கு 

ஈ) பதினெண்மேற்கணக்கு

விடை : அ ) எட்டுத்தொகை

2) புறநானூற்றுப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் -----

அ) வீரமாமுனிவர்

ஆ) ஜி.யு.போப்

இ ) உ.வே.சா.

ஈ) பாரதியார்

விடை : ஆ ) ஜி.யு.போப்

3) பாடப் பகுதியில் அமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் உள்ள திணை ----

அ ) தும்பைத்திணை

ஆ) வாகை

இ)பொதுவியல்

ஈ) பாடாண்

விடை :  இ ) பொதுவியல்

4) பாடப்பகுதியாக அமைந்துள்ள புறநானூற்றுப் பாடலில் உள்ள துறை ----

அ) செவியறிவுறுஉ

ஆ) முதுமொழிக்காஞ்சி

இ ) பொருண்மொழிக்காஞ்சித்துறை

ஈ ) மனைமருட்சி

விடை : ஆ ) முதுமொழிக்காஞ்சி

5) புறநானூறு பண்டைய ----- வீரம் , வெற்றி கொடை குறித்த பெருமையைப்பாடுகிறது.

அ) வேந்தர்களின்

ஆ) புலவர்களின்

இ ) பெண்களின்

ஈ) அமைச்சர்களின்

விடை : அ ) வேந்தர்களின்

6) பண்டைத்தமிழர்களின் பண்பாட்டுக்
கருவூலமாகத் திகழும் நூல் -----

அ) திருக்குறள்

ஆ) சிலப்பதிகாரம்

இ) பெரிய புராணம்

ஈ) புறநானூறு

விடை : ஈ ) புறநானூறு

7 ) நீர்நிலைகளை உருவாக்குபவர்களை ----- உருவாக்குபவர்கள் என்று போற்றினர்

அ) உயிரை

ஆ) பயிரை

இ ) நாட்டை

ஈ) பாதுகாப்பை

விடை : அ ) உயிரை

8) மல்லல் மூதூர் வயவேந்தே! - இவ்வடியில் மல்லல் என்ற சொல்லின் பொருள் -----

அ) பலம்

ஆ) நலம்

இ) வளம்

ஈ) பெருமை

விடை : இ ) வளம்

9 ) புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்படும் மன்னன் -----

அ) குலோத்துங்க சோழன்

ஆ) சேரன் செங்குட்டுவன்

இ) பாரி வேந்தன்

ஈ) பாண்டிய நெடுஞ்செழியன்

விடை : ஈ ) பாண்டிய நெடுஞ்செழியன்

10) வான் உட்கும் வடிநீண்மதில்   எனத்தொடங்கும் புறநானூற்றுப் பாடலைப் பாடலைப் பாடியவர் -----

அ) கபிலர்

ஆ) நக்கீரர்

இ) குடபுலவியனார்

ஈ) ஔவையார்

விடை : இ ) குடபுலவியனார்

11 ) உணவு எனப்படுவது நிலத்துடன் ------ஆகும்.

அ ) நீரும்

ஆ) மரமும்

இ) காற்றும்

ஈ) நெருப்பும்

விடை : அ ) நீரும்

12) யாக்கை என்ற சொல்லின் பொருள் ----

அ) உயிர்

ஆ) உடம்பு

இ) காற்று

ஈ) ஆகாயம்

விடை : ஆ ) உடம்பு 

13) புணரியோர் - இச்சொல்லின் பொருள் -----

அ) வந்தவர்

ஆ) உறவினர்

இ) தந்தவர்

ஈ) தராதவர்

விடை : இ ) தந்தவர்

14) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம் -

இப்பாடலில் உள்ள அடி எதுகை

அ) உ

ஆ) ண்

இ ) டி

ஈ) எதுவுமில்லை

விடை : ஆ ) ண்

15 ) மூதூர் , நல்லிசை இலக்கணக்குறிப்பு -----

அ) உவமைத்தொகை

ஆ) உம்மைத்தொகை

இ) பண்புத்தொகை

ஈ) வினைத்தொகை

விடை : இ ) பண்புத்தொகை

16) நிறுத்தல் - இலக்கணக் குறிப்பு -----

அ) தொழிற்பெயர்

ஆ) வினையாலணையும் பெயர்

இ ) ஆகுபெயர்

ஈ) பண்புப்பெயர்

விடை : அ ) தொழிற்பெயர்

17 ) அமையா - இலக்கணக் குறிப்புத் தருக.

ஆ) பெயரெச்சம்

ஆ) வினையெச்சம்

இ) எண்ணும்மை

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை : ஈ ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

18) அடுபோர் - இலக்கணக் குறிப்பு -----

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) வினையெச்சம்

ஈ) உம்மைத்தொகை

விடை : இ ) வினைத்தொகை

19) புறநானூறு - பிரித்து எழுதக் கிடைப்பது ----- ஆகும்.

அ) புற + நானூறு

ஆ ) பு + நானூறு

இ) புறம் + நானூறு

ஈ) புறப் + நானூறு

விடை : இ ) புறம் + நானூறு

20) கொடுத்தோர் - இலக்கணக் குறிப்பு -----

அ) வினையாலணையும் பெயர்

ஆ) உரிச்சொற்றொடர்

இ) அடுக்குத்தொடர்

ஈ) பெயரெச்சம்

விடை : அ ) வினையாலணையும் பெயர்


Post a Comment

0 Comments