9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 , கவிதைப்பேழை - பெரியபுராணம் - வினா & விடை / 9th TAMIL - EYAL 2 - PERIYA PURANAM - ONLINE TEST - QUESTION & ANSWER

 


9 ஆம் வகுப்பு - தமிழ் 

இயல் 2 -

கவிதைப்பேழை - பெரியபுராணம் 

வினா உருவாக்கம் : 

பைந்தமிழ். மு.மகேந்திர பாபு

தமிழாசிரியர் , மதுரை.

****************   *************   ***********

தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்  ஆன்லைன் தேர்வை எழுத விருப்பமுள்ளோர், தங்கள் பெயர், படிப்பு, மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பவும்.

*************   ****************   ***********

1) பெரிய புராணம் ---- நாட்டின்
சிறப்பைப் பாடுகிறது.

அ) சேர

ஆ) சோழ

இ )  பாண்டிய

ஈ) தொண்டை

விடை : ஆ) சோழ

2) சேக்கிழார் பெருமான் பாடியது ------

அ) சிவபுராணம்

ஆ) சீறாப்புராணம்

இ ) கருடபுராணம்

ஈ) திருத்தொண்டர் புராணம்

விடை :  ஈ) திருத்தொண்டர் புராணம்
 
3) திருத்தொண்டத்தொகையை எழுதியவர் ------

அ) கபிலர்

ஆ) ஞானசம்பந்தர்

இ) மாணிக்கவாசகர்

ஈ) சுந்தரர்

விடை :  ஈ) சுந்தரர்

4) திருத்தொண்டர் திருவந்தாதி நூலை
இயற்றியவர் ------

அ) நம்பியாண்டார் நம்பி

ஆ) சுந்தரர்

இ) கபிலர்

ஈ) மாணிக்கவாசகர்

விடை : அ) நம்பியாண்டார் நம்பி

5) சேக்கிழார் வாழ்ந்த காலம் ------ 
நூற்றண்டு

அ) 8 ஆம்

ஆ) 10 ஆம்

இ ) 12 ஆம்

ஈ) 18 ஆம்

விடை : இ ) 12 ஆம்

6) சோழ அரசன் அவையில் -------    இருந்தார் சேக்கிழார்.


அ) படைவீரராக

ஆ) குருவாக

இ) புலவராக

ஈ) முதலமைச்சராக

விடை :  ஈ) முதலமைச்சராக

7)' பக்திச்சுவை நனி சொட்டச்
சொட்டப்பாடிய கவிவலவ' என்று
சேக்கிழாரைப் பாராட்டியவர் ------

அ) உ.வே.சா.

ஆ) மகாவித்துவான மீனாட்சிசுந்தரம்

இ) தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

ஈ) மனோன்மணியம் பெ.சுந்தரனார்.

விடை : ஆ) மகாவித்துவான மீனாட்சிசுந்தரம்

8) சேக்கிழார் பிறந்த ஊர் ------

அ) திருவிடைமருதூர்

ஆ) திருவேற்காடு

இ) குன்றத்தூர்

ஈ) பூம்புகார்

விடை :  இ) குன்றத்தூர்

9) நாயன்மார்கள் மொத்தம் ------ ஆவர்.

அ) 23

ஆ) 33

இ ) 43

ஈ) 63

விடை :  ஈ) 63

10 ) மாவிரைந்தெழுந் தார்ப்ப - இவ்வடியில் மா என்பதன் பொருள் -----

அ) மரம்

ஆ) மான்

இ) வண்டு

ஈ) மாடு

விடை : இ) வண்டு

11) பணிலம் என்பதன் பொருள் -----

அ) சங்கு

ஆ) முத்து

இ) நெல்

ஈ) கிளிஞ்சல்

விடை :  அ) சங்கு

12) நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு -----

அ) பாண்டியநாடு

ஆ) குடநாடு

இ) கொங்கு நாடு

ஈ) சோழநாடு

விடை :  ஈ) சோழநாடு

13 ) துன்னும் மேதி படியத்  துதைந்துதெழும் - இவ்வடியில் மேதி என்பதன் பொருள்

அ) சிங்கம்

ஆ) புலி

இ ) எருமை

ஈ) கரடி

விடை : இ ) எருமை

14 ) நாளிகேரம் என்பதன் பொருள் ------

அ) பனை

ஆ) தென்னை

இ) பாக்கு

ஈ ) மா

விடை : ஆ) தென்னை

15) அகலமான பொய்கையில்  விளையாடிய பறவை ------

அ) அன்னம்

ஆ) கோழி

இ) நாரை

ஈ) புறா

விடை : அ) அன்னம்

16) திருநாட்டில் குவிந்து கிடந்தவை -----

அ) செந்நெல்

ஆ) மீன்கள்

இ) முத்துகள்

ஈ) மேலே உள்ள மூன்றும்

விடை : ஈ) மேலே உள்ள மூன்றும்

17) நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின்
முதலிலை சுருள் விரிவதை ----- பருவம்
என்பர் உழவர்.

அ) உரமிடும்

ஆ) களைபறிக்கும்

இ ) மருந்து தெளிக்கும்

ஈ) அறிவடை

விடை : ஆ) களைபறிக்கும்

18 ) கருங்குவளை , செந்நெல் -
இலக்கணக்குறிப்பு -----

அ) வினைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ )  உம்மைத்தொகை

ஈ) உவமைத்தொகை

விடை :  ஆ) பண்புத்தொகை

19 ) விரிமலர் - இலக்கணக்குறிப்பு -----

அ ) வினைத்தொகை

ஆ) உவமைத்தொகை

இ) அடுக்குத்தொடர்

ஈ) பெயரெச்சம்

விடை : அ ) வினைத்தொகை

20) தடவரை - இலக்கணக் குறிப்பு -----

அ) வினைமுற்றுத்தொடர்

ஆ) பெயரெச்சத்தொடர்

இ) உரிச்சொற்றொடர்

ஈ) அடுக்குத்தொடர்

விடை : இ) உரிச்சொற்றொடர்

***************   **************   ************

Post a Comment

2 Comments