9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 , முன்னுரிமைப்பாடம் - கவிதைப்பேழை - தமிழ்விடுதூது & தமிழோவியம் - வினா & விடை / 9th TAMIL - EYAL - 1 , ONLINE TEST - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் 1 - கவிதைப்பேழை 

தமிழோவியம் & தமிழ்விடு தூது

 நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு - 2

வினா உருவாக்கம்

புலவர்.ரெ. துவாரகன்,

தமிழாசிரியர் , அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி, திருச்சி.

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு ,

 தமிழாசிரியர்,  மதுரை - 97961 41410


தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும்
ஆன்லைன் தேர்வில் பங்கேற்று சான்றிதழ் பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் , வகுப்பு அல்லது பணி இவற்றை 97861 41410 என்ற
வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி , தேர்வு
இணைப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.

************   ***************   ;**************

1) தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடு

அ ) இலங்கை

ஆ ) அமெரிக்கா

இ ) நார்வே

ஈ ) எகிப்து

விடை : அ ) இலங்கை

2) " யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல்
இனிதாவது எங்கும் காணோம் " என்று
பாடியவர் ----

அ ) கவிமணி

ஆ ) கண்ணதாசன்

இ ) பாரதியார்

ஈ ) பாரதிதாசன்

விடை : இ ) பாரதியார்

3) காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!'-
என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்

அ ) தமிழோவியம்

ஆ ) பாண்டியன் பரிசு

இ )பாஞ்சாலி சபதம்

ஈ ) கண்ணன் பாட்டு

விடை : அ ) தமிழோவியம்

4) இனிமையும் நீர்மையும் தமிழெனல்
ஆகும் என்று கூறும் நூல் -----

அ ) திவாகர நிகண்டு

ஆ ) பிங்கல நிகண்டு

இ ) சதுரகராதி

ஈ ) செந்தமிழ் அகராதி

விடை : ஆ ) பிங்கல நிகண்டு


5) உலகத் தாய்மொழி நாள் -----

அ ) ஜனவரி 21

ஆ ) மார்ச் 8

இ ) செப்டம்பர் 5

ஈ ) பிப்ரவரி 21

விடை : ஈ ) பிப்ரவரி 21

6) ஒரு பூவின் மலர்ச்சியையும் , ஒரு
குழந்தையின் புன்னகையையும் புரிந்து
கொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை.
பாடலும் அப்படித்தான் என்று கூறியவர் ---

அ ) கவிஞர் வாலி

 ஆ ) கவிஞர்.மு.மேத்தா

இ ) ஈழவேந்தன்

ஈ ) ஈரோடு தமிழன்பன்

விடை : ஈ ) ஈரோடு தமிழன்பன்

7) தமிழ்விடு தூது ----- என்னும் இலக்கிய
வகையைச் சார்ந்தது.

அ ) புதுக்கவிதை

ஆ ) காப்பியம்

இ ) சிற்றிலக்கியம்

ஈ ) தனிப்பாடல்

விடை :  இ ) சிற்றிலக்கியம்

8) தமிழின் வண்ணங்கள்

அ ) 96

ஆ ) 108

இ ) 100

ஈ ) 48

விடை : இ ) 100

9) தமிழ்விடு தூது நூலை முதன் முதலில்
பதிப்பித்தவர்

அ ) உ.வே.சா

ஆ ) வ.உ.சி.

இ ) இளம்பூரணர்

ஈ ) இளங்குமரனார்

விடை : அ ) உ.வே.சா.


10 ) தூது இலக்கியத்தின் வேறு பெயர் -----

அ ) பக்தி இலக்கியம்

ஆ ) வாயில் இலக்கியம்

இ ) நீதி இலக்கியம்

ஈ ) காதல் இலக்கியம்

விடை : ஆ ) வாயில் இலக்கியம்

11) தாழிசை , துறை , விருத்தம் என்பவை ----

அ ) சிற்றினங்கள்

ஆ ) பாவினங்கள்

இ ) பேரினங்கள்

ஈ ) அளபெடைகள்

விடை : ஆ ) பாவினங்கள்

12) தமிழ்விடு தூது இலக்கியத்தின் தலைவர்

அ ) பாண்டியன்

ஆ ) மதுரை மீனாட்சி

இ ) மதுரை சொக்கநாதர்

ஈ ) மதுரை கூடலழகர்

விடை :  இ ) மதுரை சொக்கநாதர்

13 ) தமிழ்விடு தூது இலக்கியம்
பதிப்பித்த ஆண்டு ------

அ  ) 1906

ஆ ) 1920

இ ) 1930

ஈ ) 1940

விடை : இ) 1930

14) தூது ----- வெண்பாவால் பாடப்படும்

அ ) கலிவெண்பா

ஆ ) இன்னிசை வெண்பா

இ ) சிந்தியல் வெண்பா

ஈ ) நேரிசை வெண்பா

விடை : அ )  கலி வெண்பா

15 ) சிற்றிலக்கியம் ----- வகைப்படும்

அ ) 66

ஆ ) 36

இ ) 86

ஈ ) 96

விடை :  ஈ ) 96

16) வனப்பு என்ற சொல்லின் பொருள் -----

அ ) உலகு

ஆ ) சோம்பல்

இ ) அழகு

ஈ ) வானம்

 விடை : இ ) அழகு

17) தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை-------

அ ) வெண்பா

ஆ ) கண்ணி

இ ) விருத்தம்

ஈ ) அணி

விடை : ஆ ) கண்ணி 


18) உணவின் சுவைகள்

அ ) 10

ஆ ) 4

இ ) 6

ஈ ) 9

விடை : இ ) 6

19 ) செவிக்கு விருந்தளிக்கும் சுவைகள்

அ ) 9

ஆ ) 10

இ ) 8

ஈ ) 12

விடை : அ ) 9

20 ) தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் -

அ ) சத்திமுத்தப்புலவர்

ஆ ) காளமேகப்புலவர்

இ )  பலபட்டடைச்சொக்கநாதர்

ஈ ) ஆசிரியர் பெயர் இல்லை

விடை : ஈ ) ஆசிரியர் பெயர் இல்லை 


Post a Comment

1 Comments