மாணிக்கவாசரின் திருவாசகம் - திருஅணடப்பகுதி - பகுதி 5 / MNIKKAVASAKARIN THIRUVASAKAM - THIRUANDAPPAKUTHI - PART 5

 


மாணிக்கவாசகரின் திருவாசகம்

3 , திருஅண்டப்பகுதி - 5 ( நிறைவு )

ஆர்மின்! ஆர்மின்! நாள்மலர்ப் பிணையலில்

தாள்தளை இடுமின்!

சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!

145 பற்றுமின்!' என்றவர் பற்றுமுற்று ஒளித்தும்;

தன்னேர் இல்லோன் தானே ஆன தன்மை

என்னேர் அனையோர் கேட்கவந்து இயம்பி,

அறைகூவி ஆட்கொண்டு அருளி,

மறையோர் கோலம் காட்டி அருளலும்;

150 உளையா அன்புஎன்பு உருக ஓலம் இட்டு,

அலைகடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்,

தலைதடுமாறா வீழ்ந்து புரண்டு அலறிப்,

பித்தரின் மயங்கி; மத்தரின் மதித்து;

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்,

155 கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின்

ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு

கோல்தேன் கொண்டு செய்தனன்;

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்

வீழ்வித் தாங்கு, அன்று

160 அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில்

ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்,

தடக்கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்;

சொல்லுவது அறியேன்; வாழி முறையோ!

தரியேன் நாயேன்; தான்எனைச் செய்தது

165 தெரியேன்; ஆ!ஆ! செத்தேன்; அடியேற்கு

அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;

விழுங்கியும் ஒல்ல கில்லேன்;

செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து

உவாக்கடல் நள்ளும்நீர் உள்ளகம் ததும்ப,

170 வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால் தோறும்,

தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும், நாய்உடல் அகத்தே

குரம்பைகொண்டு, இன்தேன் பாய்த்தி நிரம்பிய

அற்புத மான அமுத தாரைகள்,

175 எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது

உள்ளம் கொண்டு ஓர் உருச்செய்தாங்கு எனக்கு

அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய

கன்னல் கனிதேர் களிறுஎனக், கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்
180 கருணை வான் தேன் கலக்க;
அருளோடு பராஅமுது ஆக்கினன்
பிரமன்மால், அறியாப் பெற்றி யோனே.
திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments