மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - 2 , கீர்த்தித் திருஅகவல் - பகுதி 3 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - KEERTHITH THIRUAKAVAL - PART - 3

 


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

தொடர்  - 6





கீர்த்தித் திருஅகவல்  - பகுதி - 3


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி

************   ****************   ************

100 மந்திர மாமலை மகேந்திர வெற்பன்

அந்தம்இல் பெருமை அருளுடை அண்ணல்

எம்தமை ஆண்ட பரிசுஅதுபகரின்

ஆற்றல் அதுஉடை அழகு அமர் திருஉரு,

நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;

105 ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்

ஆனந் தம்மே, ஆறா அருளியும்;

மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்

நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்,

அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்

110 கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும்;

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்,

தூய மேனிச், சுடர்விடு சோதி

காதலன் ஆகிக், கழுநீர் மாலை

ஏலுடைத் தாக, எழில்பெற, அணிந்தும்,

115 அரியொடு பிரமற்கு அளவு அறி யாதவன்

பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்;

மீண்டு வாராவழி அருள் புரிபவன்

பாண்டி நாடே பழம்பதி ஆகவும்,

பத்திசெய் அடியரைப் பரம்பத்து உய்ப்பவன்

120 உத்தர கோச மங்கை ஊர் ஆகவும்,

ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய

தேவ தேவன் திருப்பெயர் ஆகவும்,

இருள்கடிந்து அருளிய இன்ப ஊர்தி

அருளிய பெருமை அருள்மலை ஆகவும்,

125 எப்பெருந் தன்மையும், எவ்வெவர் திறமும்,

அப்பரிசு அதனால் ஆண்டு கொண்டருளி;

நாயி னேனை நலம்மலி தில்லையுள்,

கோலம் ஆர்தரு பொதுவினில், ‘வருக' என,

ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி;

130 அன்றுஉடன் சென்ற அருள்பெறும் அடியவர்;

ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்,

எய்த வந்திலாதார் எரியில் பாயவும்,

மாலது ஆகி, மயக்கம் எய்தியும்,

பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்

135 கால்விசைத்து ஓடிக், கடல்புக மண்டி,

'நாத!நாத!' என்று அழுது அரற்றி

பாதம் எய்தினர் பாதம் எய்தவும்;

‘பதஞ்சலிக்கு அருளிய பரமநாடக' என்று

இதஞ்சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும்;


140 எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில், நடம்நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு,
அருளிய திருமுகத்து, அழகு உறு சிறுநகை,
இறைவன், ஈண்டிய அடியவ ரோடும்,
145 பொலிதரு புலியூர்ப் புக்குஇனிது அருளினன்
'ஒளிதரு கைலை' உயர்கிழ வோனே.
திருச்சிற்றம்பலம்







Post a Comment

0 Comments