மாணிக்கவாசகரின் திருவாசகம் - 4 , போற்றித்திரு அகவல் - பகுதி 2 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - 4 , POTRITH THIRU AKAVAL - PART - 2

 

மாணிக்கவாசரின் திருவாசகம்

4 , போற்றித் திரு அகவல்

பகுதி - 2


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி

ஆறு கோடி மாயா சத்திகள்

2

வேறுவேறு தம்மாயைகள் தொடங்கின;

ஆத்தம் ஆனார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி, நாத்தழும்பு ஏறினர்;

சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்

பற்றி அழைத்துப் பதறினர்; பெருகவும்

விரதமே பரம் ஆக, வேதியரும்,

சரதம் ஆகவே, சாத்திரம் காட்டினர்;

சமய வாதிகள் தம் தம் மதங்களே

அமைவது ஆக, அரற்றி, மலைந்தனர்,

மிண்டிய மாயா வாதம் என்னும்

சண்ட மாருதம் கழித்து அடித்து, ஆஅர்த்து

உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின்

கலா பேதத்த கடுவிடம் எய்தி,

அதில்பெரு மாயை எனைப் பலசூழவும்,

தப்பாமே, தாம்பிடித்தது சலியாத்,

தழல் அது கண்ட மெழுகு அதுபோலத்,

தொழுது, உளம் உருகி, அழுது, உடல் கம்பித்து,

ஆடியும், அலறியும், பாடியும், பரவியும்,

'கொடிறும் பேதையும் கொண்டது விடாது' எனும்

படியே ஆகி, நல்லிடை அறா அன்பின்,

பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்,

கசிவது பெருகிக், கடல் என மறுகி,

அகம் குழைந்து, அனுகுலம் ஆய், மெய்விதிர்த்துச்,

சகம் பேய், என்று தம்மைச் சிரிப்ப,

நாண் அது ஒழிந்து, நாடவர் பழித்துரை

பூண் அதுவாக, கோணுதல் இன்றிச்,

சதுர் இழந்து, அறி மால் கொண்டு, சாரும்

கதியது பரம அதிசயம் ஆகக்,

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்,

மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது,

அருபரத்து ஒருவன் அவனியில் வந்து,

குருபரன் ஆகி, அருளிய பெருமையைச்,

சிறுமை என்று இகழாமே, திருவடி இணையைப்,

பிறிவினை அறியா நிழல் அதுபோல,

முன் பின் ஆகி, முனியாது, அத்திசை

என்பு நைந்து உருகி, நெக்கு நெக்கு ஏங்கி,

அன்பு எனும் ஆறு கரை அது புரள,

நன்புலன் ஒன்றி 'நாத' என்று அரற்றி,

உரை தடுமாறி, உரோமம் சிலிர்ப்பக்

கர மலர் மொட்டித்து, இருதயம் மலரக்

கண்களி கூர நுண்துளி அரும்பச்,

சாயா அன்பினை, நாள்தொறும் தழைப்பவர்

தாயே ஆகி, வளர்த்தனை போற்றி!

Post a Comment

0 Comments