மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய
திருவாசகம்
3, திருஅண்டப்பகுதி - பகுதி - 4
உரை விளக்கம்
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்
**************** ********** **************
நச்சுஅரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சுஎமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி! நால் திசை
நடப்பன நடாஅய்க், கிடப்பன கிடாஅய்,
110 நிற்பன நிறீஇச்,
சொற் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண்முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;
115 பூவில் நாற்றம் போன்றுயர்ந்து, எங்கும்
ஒழிவுஅற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த, ஒண் பொருள்
இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி!
120 அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலைசெய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்;
மகரதக் குவாஅல், மாமணிப் பிறக்கம்,
125 மின்ஒளி கொண்ட பொன்ஒளி திகழத்,
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்
130 மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;
'இத்தந் திரத்தில் காண்டுமெ'ன்று இருந்தோர்க்கு ,
அத்தந் திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனிவரக் கௌவி,
ஆண்எனத் தோன்றி, அலிஎனப் பெயர்ந்து,
135 வாள்நுதல் பெண் என ஒளித்தும்; சேண்வயின்,
ஐம்புலன் செலவிடுத்து, அருவரை தொறும்போய்த்,
துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
0 Comments