மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் 3 , திருஅண்டப்பகுதி - பகுதி - 3 / MANIKKAVASAKARI THIRUVASAKAM - THIRUANDAP PAKUTHI - PART - 3

 

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 

திருவாசகம் 

3 , திருஅண்டப்பகுதி - பகுதி - 3

உரை விளக்கம்

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்

****************   **********  ***************

பரமா னந்தப் பழங்கடல் அதுவே

கருமா முகிலின் தோன்றித்,

திருவார் பெருந்துறை வரையில் ஏறித்

திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய,

70 ஐம்புலப் பந்தனை வாள் அரவு இரிய,

வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப,

நீடுஎழில் தோன்றி, வாள்ஒளி மிளிர

எந்தம் பிறவியில் கோபம் மிகுத்து

முரசுஎறிந்து, மாப்பெரும் கருணையின் முழங்கிப்,

75 பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட,

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்,

செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட, வரைஉறக்

கேதக் குட்டம் கையற ஓங்கி,

இருமுச் சமயத்து ஒருபேய்த் தேரினை,

80 நீர்நசை தரவரும், நெடுங்கண், மான்கணம்

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்,

அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன;

ஆயிடை, வானப்பேர் யாற்று அகவயின்

பாய்ந்தெழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்துச்,

85 சுழித்துஎம் பந்தம்மாக் கரைபொருது, அலைத்து இடித்து

ஊழ்ஊழ் ஓங்கிய நங்கள்

இருவினை மாமரம்வேர் பறித்து, எழுந்து

உருவ, அருள்நீர் ஒட்டா, அருவரைச்

சந்தின் வான்சிறை கட்டி, மட்டு அவிழ்

90 வெறிமலர்க் குளவாய் கோலி, நிறை அகில்

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி,

அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டு,

தொண்ட உழவர் ஆரத் தந்த

95 அண்டத்து அரும்பெறல் மேகன், வாழ்க!

கரும்பணக் கச்சைக் கடவுள், வாழ்க!

அருந்தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!!

அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!

நிச்சலும் ஈர்த்து ஆட் கொள்வோன், வாழ்க!

100 சூழ்இருந் துன்பம் துடைப்போன், வாழ்க!

எய்தினர்க்கு ஆரமுது அளிப்போன், வாழ்க!

கூரிருள் கூத்தொடு குனிப்போன் , வாழ்க!

பேரமைத்தோளி காதலன் , வாழ்க !

ஏதிலார்க்கு ஏதில்எம் இறைவன் , வாழ்க !

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க !

Post a Comment

0 Comments