மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகம் - 3 , திருஅண்டப் பகுதி - பகுதி - 2 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - 3 , THIRUANDAPPAKUTHI - PART - 2

 

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 

திருவாசகம் 

3 , திருஅண்டப்பகுதி - பகுதி - 2

உரை விளக்கம்

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்


முன்னோன் காண்க! முழுதோன் காண்க!

30 தன்னேர் இல்லோன் தானே காண்க!

ஏனத் தொல்லெயிறு அணிந்தோன் காண்க!

கானப் புலிஉரி அரையோன் காண்க!

நீற்றோன் காண்க! நினைதொறும் நினைதொறும்,

ஆற்றேன் காண்க! அந்தோ கெடுவேன்!

35 இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க!

அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!

பரமன் காண்க! பழையோன் காண்க!

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க!

அற்புதன் காண்க! அநேகன் காண்க!

40 சொற்பதம் கடந்த தொல்லோன் காண்க!

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!

பத்தி வலையில் படுவோன் காண்க!

ஒருவன் என்னும் ஒருவன் காண்க!

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!

45 அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க!

இணைப்பு அரும் பெருமையின் ஈசன் காண்க!

அரியதில் அரிய அரியோன் காண்க!

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க!

நூல்உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!

50 மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!

அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!

பந்தமும், வீடும், படைப்போன் காண்க!

நிற்பதும், செல்வதுவும், ஆனோன் காண்க!

கற்பமும், இறுதியும் கண்டோன் காண்க!

55 யாவரும் பெறஉறும் ஈசன் காண்க!

தேவரும் அறியாச் சிவனே காண்க!

பெண், ஆண், அலி எனும் பெற்றியன் காண்க!

கண்ணால் யானும் கண்டேன் காண்க!

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க!

60 கருணையின் பெருமை கண்டேன் காண்க!

புவனியில் சேவடி தீண்டினன் காண்க!

சிவன்என யானும் தேறினன் காண்க!

அவன்எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!

குவளைக் கண்ணி கூறன் காண்க!

அவளும் , தானும் , உடனே காண்க !

Post a Comment

0 Comments