மாணிக்கவாசகரின் திருவாசகம் - 3 , திருஅண்டப் பகுதி - 1 / MANIKKAVASAKARIN THIRUVASAKAM - THIRUANDAP PAKUTHI - PART - 1

 


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

தொடர்  - 7

3 , திருஅண்டப் பகுதி   - பகுதி -  1


உரை விளக்கம்: 

பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி , 

தலைமையாசிரியர் , ( ப.நி )

கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி


3. திருஅண்டப் பகுதி

(தில்லையில் அருளியது)

சிவனது தூலசூக்குமத்தை வியந்தது

(சிவபெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை விளக்குவது)

இணைக்குறள் ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

5

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,

அளப்பு அரும் தன்மை, வளப்பெரும் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;

இல்நுழை கதிரின் நுண்ணணுப் புரைய;

சிறிய ஆகப் பெரியோன், தெரியின்,

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்,

தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊரூழியும், நீக்கமும், நிலையும்,

10 சூக்கமொடு, தூலத்துச், சூறை மாருதத்து

எறியது வளியின்

கொட்கப் பெயர்க்கும் குழகன்; முழுவதும்

படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை

காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை

15 கரப்போன்; கரப்பவை கருதாக்

கருத்துடைக் கடவுள்; திருத்தகும்

அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்

வீடுபேறாய், நின்ற விண்ணோர் பகுதி

கீடம்புரையும் கிழவோன்; நாள்தொறும்

20 அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு

மதியில் தண்மை வைத்தோன்; திண்திறல்

தீயில் வெம்மை செய்தோன்; பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன்; மேதகு

காலின் ஊக்கம் கண்டோன்; நிழல்திகழ்

25 நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட

மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று

எனைப்பல கோடி, எனைப்பல பிறவும்,


Post a Comment

0 Comments