நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - பிறந்த தினம் - 23 - 01 - 2022 / NETHAJI SUBASH CHANDRA BOSE - BIRTH DAY - JANUARY - 23 - 01 - 2022

 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்.

                   23 • 01 • 2022


தாய் நாட்டைக் காப்பாற்ற தணலென எழுந்த தன்மான வீரன் சுபாஷ் சந்திர போஸ். நாட்டுச் சூழல் பற்றிய விவாதங்களைக் கேட்டதன் விளைவாக, தன்னையே நாட்டிற்கு அர்ப்பணித்த   அற்புதமான தலைவன் நேதாஜி அவர்கள்.அந்நிய அதிகாரத்திலிருந்து , அன்னை நாட்டை மீட்டெடுக்க அகிம்சையும், ஆயுதமேந்தியும், என இரு வழிகளைக் கண்டன இந்திய சுதந்திரப் போர். போர்முனையே வெற்றியின் வழி என அறிந்து , அறிவித்து இளைஞர்களை ஒன்றிணைத்து ஆயுதமேந்தி புரட்சி   முழக்கமிட்டவர்  வங்கச் சிங்கம் நேதாஜி. தலைவன் எனப்பொருள் படும் " நேதாஜி " என்றச் சரித்திரச் சொல்லுக்குச்சா   ன்றாக விளங்குபவர். தலைவன் என்ற சொல்லிற்கே பெருமை சேர்த்தவர் நேதாஜிசுபாஷ் சந்திர போஸ் .இவர் 1897 - ஆம் ஆண்டு ஜனவரி - 23 - ம் நாள் ஒரிசா மாநிலத்தில் கட்டாக் என்னுமிடத்தில் பிறந்தார். வளமிக்க வங்கக் குடும்பத்தில் பிறந்த நேதாஜி ஆரம்பக் கல்வியை பாப்டிஸ்ட் மிஷன் பள்ளியிலும் , பின்பு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரி மற்றும் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியிலும் படித்தார். படிப்புடன் மாணவர் படைப் பயிற்சியிலும் கலந்துக் கொண்டு சிறந்த மாணவரா கவே விளங்கினார். படிப்பு முடித்து ஐசிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைக்கும் வேலை ஆங்கிலேயர்களுக்கு   அடிபணியும் வேலையாததால், அவ்வேலையை ஏற்க மறுத்தார். 

       இவரது வீரத்தையும் , விவேகத்தையும் , தன்மான உணர்வையும் கண்ணுற்ற சி.ஆர் . தாஸ் அவர்கள் தனது கல்லூரியின் முதல்வராக முடிசூட்டி பொறுப்பளித்தார்.25 - வயதே நிரம்பிய நேதாஜியின் பேச்சு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைக் கண்டது. அனலென தெறித்து பெருங்கனலாக எழுச்சியூட்டியது. இவரது வீராவேச பேச்சுதனை உள்வாங்கிய மாணவர் கூட்டம் உத்வேகம்  கொண்டெழுந்தது.  எனவே இவரது சமூகச் சீர்திருத்தங்கள் கொல்கத்தாவிலிருந்தே தொடங்கின. ஆகையால் மக்களிடத்தில் அன்பும் , ஆதரவும் பெருகியது. இவர் இளைஞர்களின் எழுச்சிமிக்க தலைவராகக் கொண்டாடப்பட்டார். இவரது வளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு   அச்சத்தையும், ஆபத்துணர்வையும் ஏற்படுத்தின. இதன் காரணமாகவே சில பொய் காரணங்களைக் கூறி அவரைச் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. 

     ஆனாலும் சிறையிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் நேதாஜி . இது இவர் வழியைத் தொடர்ந்த  இளைஞர்களும், இந்திய மக்களும் கொண்ட நம்பிக்கையின் காரணமாக விளங்கின. எனினும் ஆங்கிலேய அரசு பல பொய் புகார்களைக் கூறி சிறையில் அடைப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்தன. இரண்டாம் உலகப்போரில் இத்தாலிக்கு உதவுவதாக எண்ணம் கொண்டிருந்தார்.எனவே ஜெர்மனி செல்லவேண்டிய சூழலில் மாறுவேடத்தில் ஜெர்மன் சென்றார்.நேதாஜிக்கு ஜெர்மனியில் சிறப்பானதொரு வரவேற்பு அளிக்கப்பட்டது. இச்செய்தியை ஜெர்மனிய பத்திரிக்கைகள் வெளியிட்டன.

       இரண்டாம் உலகப்போர் நடைபெற்றப் போது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான  இந்திய வீரர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தினார். 1941 - ஆம் ஆண்டு நேதாஜி " இந்திய சுதந்திர மையம் " என்ற   அமைப்பைத் தொடங்கினார்.மேலும் " ஆசாத்ஷிந்த் " என்ற  ரேடியோவையும் உருவாக்கினார். இவற்றின் வழியாகவே சுதந்திர தாகத்தையும் , எழுச்சியையும் இந்திய மக்களிடையே விதைத்தார்.

     இளைஞர்களை ஒன்றிணைத்து படை ஒன்றை அமைத்து வழிநடத்தினார். முதல் இந்திய இராணுவத்தைக் கட்டமைத்தவர்.இந்தியர்களின் வீரத்தையும் , ஆளுமை த்திறனையும் உலகறியச் செய்தவர். இந்திய தேசிய இராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவைத் தொடங்கினார்.பின்பு அதற்கு " ஜான்சி ராணி " படைப் பிரிவு எனப் பெயரிட்டு வழிநடத்தினார். தன் நாட்டுக் கெனத் தனிக் கொடியை உருவாக்கினார். ஜன கன மன - பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக அறிவித்தார்.மேலும் "ஜெய்ஹிந்த் " என்ற வார்த்தையை முதன் முதலில் உச்சரித்து , இந்திய இளைஞர்களை .வெற்றி முழக்கமிடச் செய்தவரும் இவரே ஆவார்.இவரால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு இந்தியாவின் முன்னேற்றப்படியும் , ஆங்கிலேய அரசை அச்சமூட்டி , அலைகழிக்கச் செய்தன. எனவே ஆங்கிலேய அரசு சிறைப்பிடிக்க காத்திருந்த நேரத்தில் , அவர்களுக்குக் கிட்டாமல் , கட்டுக்கடங்காத சூறாவளியாக, கடல் கடந்து ஜெர்மனியில் தஞ்சம் அடைந்த மாவீரன் வங்கத்துச் சிங்கம்.தாய் நாட்டையும், தன்மானத்தையும் காப்பதே கடமையென எண்ணிய தலைவனின் புகழ் பாரதம் முழுதும் பரந்த பண்பாட்டு வரலாறாக மிளிர்கிறது.மேடையில் முழங்கிய மேன்மைமிகு குரல் இந்திய இளைஞர்களின் பாதையாக பரிமளிக்கிறது. உலகையே அடக்கியாண்ட மாபெரும் சாம்ராஜ்யத்தின் அச்சாணியை அசைத்து , அச்சுறுத்திய வீரமும் , துணிவும் , முயற்சியும் தோல்வியுற்றாலும் , பின்பு கிடைத்த வெற்றியின் வீரச் சுவடு அல்லவா.! வலியோரை எதிர்த்துப் போராடிய சிறுப் பொறி , பெரும்சுடர்க் கொண்ட தீபமாக மாறி இந்திய கனவை நனவாக்கியவை என்றால் மிகையல்ல. எனவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவைப் போற்றி பெருமிதம் கொள்வோம்.!

Post a Comment

0 Comments