போட்டித் தேர்வில் வெற்றி
திருவள்ளுவர் தினம் - தை - 2
பகுதி - 2 , திருக்குறள் அறிவோம்! -
வினா உருவாக்கம்
திருமதி.தமிழ் தென்றல் ,
தமிழாசிரியை , அரசு மாதிரி மே..நி.பள்ளி
சின்னம் பள்ளி , தர்மபுரி.
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர்
,இளமனூர், மதுரை - 97861 41410
************** ************* *************
1) ' வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு' எனப்பாடியவர் ------
அ ) மகாகவி பாரதி
ஆ) பாவேந்தர் பாரதிதாசன்
இ) கவிமணி தேசிகவிநாயகம்
விடை அ ) மகாகவி பாரதி
2) வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே! - எனப்பாடியவர் -----
அ) கண்ணதாசன்
ஆ) நாமக்கல் கவிஞர்
இ) பாரதிதாசன்
விடை : இ) பாரதிதாசன்
3 ) திருக்குறளின் பெருமையினைக் கூறும் நூல் -----
அ) சகலகலாவல்லிமாலை
ஆ) திருவள்ளவமாலை
இ) சங்க இலக்கியமாலை
விடை : ஆ) திருவள்ளவமாலை
4) திருவள்ளுவர் ஆண்டு என்பது ------
தலைமையில் செய்த ஆராய்ச்சியின்
பயனாகக் கிடைத்தது.
அ) மறைமலை அடிகள்
ஆ) உ.வே.சா.
இ) பரிமேலழகர்
விடை : அ) மறைமலை அடிகள்
5 ) திருக்குறள் ------ பா வகையைச் சேர்ந்தது.
அ) ஆசிரியப்பா
ஆ) கலிப்பா
இ) குறள் வெண்பா
விடை : இ) குறள் வெண்பா
6) எல்லா நாட்டினருக்கும் , எல்லா
மொழியினருக்கும் எக்காலத்திற்கும்
பொதுவான அறங்களைச் சொல்வதால்
திருக்குறள் ----- என அழைக்கப்படுகிறது.
அ) பொய்யாமொழி
ஆ) நீதிநூல்
இ) உலகப் பொதுமறை
விடை : இ) உலகப் பொதுமறை
7) திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ------
அ) களவியல்
ஆ) ஊழியல்
இ) நட்பியல்
விடை : ஆ) ஊழியல்
8) இன்பத்துப்பால் ------- ------- என இரண்டு
வகைப்படும்.
அ) களவியல் , கற்பியல்
ஆ) அரசியல் , பொருளியல்
இ) பொருளியல் , களவியல்
விடை : அ) களவியல் , கற்பியல்
9) திருக்குறளில் உள்ள அதிகாரம்,
பாடல்களின் எண்ணிக்கை -----
அ) 110 , 1100
ஆ) 133 - 1330
இ ) 140 - 1440
விடை : ஆ) 133 - 1330
10 ) திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்களின் எண்ணிக்கை
அ ) 14000
ஆ) 17000
இ) 25000
விடை : அ ) 14000
11) ஐரோப்பிய மக்களுக்கு இலத்தீன்
மொழியில் திருக்குறளை
அறிமுகப்படுத்தியவர் -------
அ) வீரமாமுனிவர்
ஆ) பரஞ்சோதி முனிவர்
இ) ஜி.யு.போப்
விடை : அ) வீரமாமுனிவர்
12) திருக்குறள் இதுவரை ------- மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
அ) 107
ஆ) 97
இ) 207
விடை : அ) 107
13 ) உலகிலேயே அதிக மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களுள்
திருக்குறள் ------ இடத்தைப் பெற்றுள்ளது.
அ ) முதலிடம்
ஆ) இரண்டாமிடம்
இ) மூன்றாமிடம்
விடை : ஆ) இரண்டாமிடம்
14 ) திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ------
அ) 1840
ஆ) 1812
இ ) 1913
விடை : ஆ) 1812
15 ) திருக்குறளில் இடம்பெறும் இரண்டு
மலர்கள் ------ -------
அ) அனிச்சம் .குவளை
ஆ) தும்பை, நூலோற்பவம்
இ) வாகை , வெட்சி
விடை : அ) அனிச்சம் .குவளை
16) திருக்குறளில் இருமுறை வரும் ஒரே
அதிகாரம் ------
அ) இறைமாட்சி
ஆ) குறிப்பறிதல்
இ) வான் சிறப்பு
விடை : ஆ) குறிப்பறிதல்
17 ) திருக்குறளை முதன் முதலில் அச்சிட்டவர் -----
அ) உ.வே.சா.
ஆ) தஞ்சை ஞானப்பிரகாசர்
இ) மு.வரதராசனார்
விடை : ஆ) தஞ்சை ஞானப்பிரகாசர்
18 ) திருக்குறள் சங்க இலக்கிய
வகைப்பாட்டில் ------ ல் இடம்பெற்றுள்ளது.
அ) பதினெண் கீழ்க்கணக்கு
ஆ) பதனெண் மேற்கணக்கு
இ) புறநானூறு
விடை : அ) பதினெண் கீழ்க்கணக்கு
19 ) திருவள்ளுவர் ஆண்டு ------ முதல்
ஏற்கப்பட்டது.
அ) 1981
ஆ) 1961
இ) 1971
விடை : இ) 1971
20) திருவள்ளுவர் நாள் என்பது -------
அ) தை 2
ஆ) தை 1
இ) சித்திரை 1
விடை : அ) தை 2
21) திருவள்ளுவ மாலையில் உள்ள
பாடல்களின் எண்ணிக்கை ------
அ) 50
ஆ) 40
இ ) 55
விடை : இ ) 55
22) கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள் என்றவர் -----
அ) நச்சுமனார்
ஆ) ஆலங்குடி.வங்கனார்
இ) இடைக்காடனார்
விடை : இ) இடைக்காடனார்
23) அணுவைத் துளைத்தேழ் கடலைப்
புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்றவர் யார்?
அ) இடைக்காடர்
ஆ) ஔவையார்
இ) நத்தத்தனார்
விடை : ஆ) ஔவையார்
24 ) அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள்
அ) 70
ஆ) 25
இ) 38
விடை : இ) 38
25 ) பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள்
அ) 50
ஆ) 25
இ) 70
விடை : இ) 70
*************** ************ **************
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வை எழுதி , சான்றிதழ் பெற விருப்பமா ? உங்கள் பெயர் , படிப்பு , மாவட்டம் இவற்றை 96861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள். எந்தக் கட்டணமும் இல்லை. வாழ்த்துகள்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,மதுரை.
************ ************** **************
0 Comments