மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
தொடர் - 4
உரை விளக்கம்:
பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி ,
தலைமையாசிரியர் , ( ப.நி )
கோகிலாபுரம் , இராயப்பன் பட்டி , தேனி
***************** *********** ************
2. கீர்த்தித் திருஅகவல்
(தில்லையில் அருளியது)
சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை
(சிவபெருமானின் அருட்செயல்கள் )
நிலைமண்டில ஆசிரியப்பா
திருச்சிற்றம்பலம்
**************** ************** **********
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி,
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி,
மண்ணும், விண்ணும், வானோர் உலகும்,
5 துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்,
என்னுடை இருளை ஏறத் துரந்தும்,
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்,
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
10 சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்;
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்;
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும்;
15 கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நல்தடம் படிந்தும்;
கேவேடர் ஆகிக் கெளிறு அது படுத்தும்;
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்;
மற்று, அவை தம்மை மகேந்திரத்து இருந்து
20 உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்;
நத்தம் பாடியில் நான்மறை யோனாய்,
அந்தம் இல் ஆரியனாய், அமர்ந்தருளியும்;
வேறு வேறு உருவம், வேறுவேறு இயற்கையும்
நூறுநூறு ஆயிரம் இயல்பினது ஆகி,
25 ஏறுஉடை ஈசன், இப்புவனியை உய்யக்
கூறுஉடை மங்கையும் தானும் வந்தருளிக்,
குதிரையைக் கொண்டு, குடநாடு அதன்மிசைக்,
உரை
சிதம்பரம் என்று அழைக்கப்பெறும் அழைக்கப்பெறும் தில்லை ஆகிய பழைய நகரில் திருநடம்புரியும் சிவபெரமானே! நீ உயிர்கள் அனைத்துள்ளும் இனிதாக இடம்பெற்றிருக்கிறாய். மண்ணுலகம், விண்ணுலகம், தேவலோகம் ஆகிய எங்குமே கணக்கிட முடியாதவாறு பலவகைக் குணங்களுடனும் அழகுபெற நிறைந்திருக்கிறாய். மேலும் அவ்வப்போது கலைஞானமாகிய கல்வியைத் தோற்றுவித்தும் மறையச்செய்தும் திருவிளையாடல் புரிகிறாய். என்னுடைய அஞ்ஞான இருளை முழுவதும் நீக்கி அருளினாய்.
பக்தியானது பெருக்கெடுத்து ஓடும் பக்தர்களது உள்ளமே கோவிலாக இருப்பதால் அதனையே நீ குடியாகக் கொண்டு அருள்கின்ற தலைமையாளனாகத் திகழ்கிறாய். இவ்வாறு திகழும் நீ மேல் உலகில் கூறிய ஆகமத்தை இம்மண்ணுலகில் உள்ள மகேந்திரமலையில் வெளிப்படுத்தி அருள்புரிந்தாய். கல்லாடம் என்னும் திருத்தலத்தில் உமாதேவியாரோடு யாவரும் விரும்புமாற எழுந்தருளியிருக்கிறாய். பஞ்சப்பள்ளி என்னும் திருத்தலத்தில் சிவசக்தியாகிய நீ இனிய அருளை ஏராளமாகத் தோற்றுவித்துள்ளாய். வேடனது கோலம் தாங்கி முருக்கம்பூப்போன்ற உதட்டினை உமாதேவியின் நெருங்கின கொங்கையாகிய குளத்தில் மூழ்கி இருப்பவன் நீ. மீனவனாக வடிவம் தாங்கி கெளிற்றுமீனை வலைவீசிப் பிடித்து அதனூடு இருந்த ஆகம நூல்களை நீ மீட்டெடுத்துள்ளாய். அந்த ஆகமங்களை ஆத்மாக்கள் யாண்டும் விரும்புகின்றனர். அந்த ஆகமங்களைப் பொதிகைக்குத் தெற்கே உள்ள மகேந்திர மலையில் எழுந்தருளிருந்து ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து முகங்களால் உபதேசம் செய்து அருளினாய். நந்தம்பாடி என்னும் திருத்தலத்தில் நான்கு வேதங்களையும் ஓதி உணர்ந்த அறவோனாய் வந்து அளப்பரிய அறிவு படைத்த ஆசிரியனாய் எழுந்தருளினாய்.
எண்ணிக்கையில் அடங்காத உருவங்களையும், எண்ணிக்கையில் அடங்காத இயல்புகளையும் உடைய இயற்கைப் பொருள்களாக விளங்குகின்ற ஈசனே காளை வாகனத்தை உடைய இறைவன் இவ்வுலகினை உய்வித்தற் பொருட்டு தனது இடப்பாகத்தில் உமாதேவியோடும் தானுமாகி எழுந்தருளினாய்.
திருப்பெருந்துறையில் இருந்து மேற்கே உள்ள நாடாகிய பாண்டிய நாட்டுக்குக் குதிரைகளைக் கொண்டு வந்து அழகு பொருந்திய வாணிகக் கூட்டமாகவும் தானும் குதிரையின் மேல் எழுந்தருளி அருள் செய்தாய். வேலம்புத்தூர் என்னும் திருத்தலத்தில் உக்கிரகுமார பாண்டியனுக்கு வேல் படையைக் கொடுத்தருளி தன் அழகிய திருமேனியைக் காட்டிய கொள்கையன் ஆனாய். சாந்தம்புத்தூர் என்னும் திருத்தலத்தில் வில்லைக் கொண்டு போர்புரிகின்ற வேடனுக்குக் கண்ணாடியிலே நின் திருக்காட்சியைக் காட்டி அருள்புரிந்தாய். மொக்கணீச்சுரத்தில் அழகு பொருந்திய முழுத்தீவண்ணனாக உன்னை நீ காட்டியருளியது பழைய நிகழ்ச்சியாகும். திருமாலுக்கும் பிரமனுக்கும் அளவு அறியப்பெற இயலாதவனாகிய நீ நரியைப் பரியாக்கியது நன்மை தரும் நின்அருளிச் செயலே ஆகும். பாண்டிய மன்னனை ஆட்கொள்வதற்காக அடியேன்பொருட்டுக் கொணர்ந்து வந்த குதிரைகளை விற்று, அதற்கு ஈடாக அப்பாண்டிய மன்னன் கொடுத்த பொன்னை ஏற்றுக் கொள்ளாது ஆண்டவனாகிய எம் கடவுள் தமது அழகு பொருந்திய திருவடியை மிக்க ஒளியுடன் காட்டியருளிய பழைமை உடையவன் ஆனாய்.
திருப்பெருந்துறையில் ஆசிரியத் திருமேனி கொண்டு அடியவனாகிய என்னை ஆட்கொண்டு அருள் செய்து மாயம் செய்து மறைந்தருளினாய். மதுரையாகிய நல்ல பெருநகரில் குதிரைச் சேவகன் ஆகி எழுந்தருளினாய். அதே மதுரையில் அடியவளாகிய வந்தி என்பவள் பொருட்டு நீ கூலியாளாக வந்து வையையாற்றுக் கரையை அடைக்கக் கூடையிலே மண் சுமந்துஅருள்புரிந்தாய்.
0 Comments