தண்ணீர் தேக்கிய தகைமையாளர் கர்னல் ஜான் பென்னிகுய்க் / WATER - JOHN PENNY CUICK - BIRTDAY KAVITHAI - TAMIL PRAKALATHAN

 

கர்னல் ஜான் பென்னிகுய்க்



நீரறம் நன்றென்று உணர்ந்தாயோ! 

உத்தமரே! 

உயர்ந்த சிந்தனைக்கு உகந்தவரே!

 எங்கோ பிறந்தாய்! எங்கோ வளர்ந்தாய்!

 அளப்பரிய செயல் செய்ய 

உம்மனம் துணிந்தது எவ்வாறு?

 கானலாய் இருந்த பூமியை 

கன்னல் விளையும் பொன்னாக்கினாய்! 

அளப்பரிய காரியம் செய்தீர்! 

உம் ஒப்பற்ற தியாகத்திற்கு 

ஒப்பாரும் இல்லை இவ்வுலகில்! 

உலகமே வியக்கும் 

உன்னத செயல் செய்தீர்! 

வறுமையில் 

வாழ்ந்தோரை 

வளமாக  வாழ்ந்திட 

வந்திட்ட நீர்! 

நீர்தேக்கி விளைநிலம் 

ஆக்கியதால் 

நீர் ....

வழியறியா

மக்களுக்கு

விரல் பிடித்து 

நடக்க  வைத்தாய்!  

உம் நாட்டில் உள்ளோரை 

சிந்திக்கா திருந்துவிட்டு....

எம் நாட்டு மக்கள் மீது

பாசம் கொண்டாய்....

மதுரை மாண்புறும் ....

தேனி செழிப்படைய....

இராமநாதபுரம் நன்றாய்

விளங்கிடவே....

கட்டினாய் அணை! 

தேக்கினாய்  நீரை....

மாக்களாய் வாழ்ந்திட்ட

மக்களெல்லாம் வாழ்ந்திடவே....

வந்திட்டாய் 

எம் மண்ணிற்கு.... 

வாழ்க எம்மான் 

என்றுமே வாழ்வில் நன்றாய்.....

புனிதராய்  வாழ்ந்த நீரே...

உன்னத  வாழ்க்கை தன்னில்....

எம் இதயக்

குடிசையிலே.... 

என்றுமே குடியிருப்பீர்! 

எம் இதய அறைக்குள்

நீக்கமற நிறைந்திருப்பீர் 

எம்முள் என்றென்றும்! 

விண்ணில் கார் 

உள்ளவரை 

மண்ணில் நீர்

உள்ளவரை 

எம்முள் நீர் இருப்பீர்!

கவிஞர்.முனைவர்  தமிழ் பிரகலாதன்.

தமிழாசிரியர் , தேனி.


************   ************    ************


Post a Comment

0 Comments