வகுப்பு - 10 , தமிழ்
இயல் 1
சிறுவினா - வினாக்களும் விடைகளும்
சிறுவினா
1) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள் :
அன்னை மொழியான தமிழ்மொழி பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும், கடல்கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாகவும், பாண்டிய மன்னனின் மகளாகவும் திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களாகவும் நிலைத்து நிற்கும் சிலப்பதிகாரமாகவும் அழகான மணிமேகலையாகவும் விளங்குவதால்
தமிழன்னையை வாழ்த்துகின்றார்.
2 ) ‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.'
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
(i) கண்ணன் வயலில் நெல் நாற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சினான்.
(ii) தாத்தா நிறைய தென்னம் பிள்ளைகளை வாங்கி வந்தார்.
(iii) கத்தரி நாற்றில் வெட்டுக்கிளிகள் இருந்தன.
(iv) மாங்கன்று மழைக்குப் பிறகு தளிர் விட்டுள்ளது.
(v) வாழைமரத்தினடியில் வாழைக்கன்றுகள் உள்ளன.
3 ) ‘அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை
அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத்
தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
வினைமுற்று தொழிற்பெயர்
அறிந்தது அறிதல்
அறியாதது அறியாமை
புரிந்தது புரிதல்
புரியாதது புரியாமை
தெரிந்தது தெரிதல்
தெரியாதது தெரியாமை
|பிறந்தது பிறத்தல்
பிறவாதது பிறவாமை
இயல் 2
சிறுவினா - வினாக்களும் விடைகளும்
3 ) தோட்டத்தில் மல்லிகைப்பூ பறிக்க பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.
இப்பத்தியில் உள்ள தொகைச் சொற்களின் வகைகளைக் குறிப்பிட்டு விரித்து எழுதுக.
(i) மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப்பண்புத்தொகை.
(ii) பூங்கொடி - உவமைத்தொகை
(iii) ஆடுமாடுகளுக்கு - உம்மைத்தொகை
(iv) தண்ணீர்த்தொட்டி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை .
(v) குடிநீர் - வினைத்தொகை
(vi) சுவர்க்கடிகாரம் - வேற்றுமைத்தொகை
(vii) மணி பார்த்தாள் - வேற்றுமைத்தொகை
***************** ************** **********
இயல் 3 - பண்பாடு
சிறுவினா - வினாக்களும் விடைகளும்
************** ************* ************
சிறுவினா
1. ) ' கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' - இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
(i) கண்ணே கண்ணுறங்கு! - விளித்தொடர்
(ii) காலையில் நீயெழும்பு - வேற்றுமைத்தொடர்
(ii) மாமழை பெய்கையிலே - உரிச்சொல்
(iv) மாம்பூவே கண்ணுறங்கு - விளித்தொடர்
(v) பாடினேன் தாலாட்டு - வினைமுற்றுத்தொடர்
(vi) ஆடி ஆடி ஓய்ந்துறங்கு - அடுக்குத் தொடர்
0 Comments