10 ஆம் வகுப்பு -
சமூக அறிவியல் - வரலாறு -
அலகு - 5 , 19 ஆம் நூற்றாண்டில் சமூக ,
சமய சீர்த்திருத்த இயக்கங்கள்
வினா உருவாக்கம் -
திருமதி.ச.இராணி , ப.ஆ,,இளமனூர், மதுரை.
'பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர், மதுரை.
************ *************** ************
தினமும் இரவு 8 மணிக்கு நடக்கும்
ஆன்லைன் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர் , வகுப்பு , பணி, மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.
*************** ************ *************
1) பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?
அ) தேவேந்திர நாத்தாகூர்
ஆ) கேசவ் சந்திரசென்
இ) இராஜா ராம் மோகன்ராய்
ஈ) அய்யங்காளி
விடை : இ ) இராஜாராம் மோகன்ராய்
2) இராஜாராம் மோகன்ராய் , எங்கு சிலைகள் வைக்கப்படாத கோயிலை நிறுவினார் ?
அ) நாக்பூர்
ஆ) சென்னை
இ) பூனே
ஈ) கல்கத்தா
விடை : ஈ ) கல்கத்தா
3) எந்த ஆண்டு சதி ஒழிக்கப்பட்டது?
அ) 1927
ஆ) 1829
இ ) 1929
ஈ) 1827
விடை : ஆ ) 1829
4) தேவேந்திரநாத் தாகூர் யாருடைய தந்தை ?
அ ) இவீந்திரநாத்தாகூர்
ஆ) இராம் மோகன்ராய்
இ) அயோத்திதாசர்
ஈ) விவேகானந்தர்
விடை : அ ) இரவீந்தரநாத் தாகூர்
5) சதி என்னும் உடன்கட்டை ஏறும்
பழக்கத்தை ஒழிக்கச் சட்டம் இயற்றிய
தலைமை ஆளுநர் யார் ?
அ) டல்ஹௌசி பிரபு
ஆ) கர்சன் பிரபு
இ) வெல்லெஸ்லி பிரபு
ஈ) வில்லியம் பென்டிங்
விடை : ஈ ) வில்லியம் பென்டிங்
6) ' இந்திய பிரம்மசமாஜத்தை
உருவாக்கியவர் யார்?
அ) கேசவ்சந்திரசென்
ஆ) விவேகானந்தர்
இ) M.G. ரானடே
ஈ) தேவேந்திர நாத்தாகூர்
விடை : அ ) கேசவ் சந்திரசென்
7) வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் யார் ?
அ ) M G ரானடே
ஆ) விவேகானந்தர்
இ ) இராஜாராம் மோகன்ராய்
ஈ) பாபா ராம்சிங்
விடை : இ ) இராஜாராம் மோகன்ராய்
8) இராஜா ராம் மோகன்ராயின் தாய்மொழி எது ?
அ) மலையாளம்
ஆ) தமிழ்
இ) கன்னடம்
ஈ) வங்காளம்
விடை : ஈ ) வங்காளம்
9 ) விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
இயற்றப்பட்ட ஆண்டு எது?
அ) 1856
ஆ) 1956
இ) 1855
ஈ) 1850
விடை : அ ) 1856
10 ) யாருடைய இயக்கம் 1856 ஆம் ஆண்டு
விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
இயற்றப்படுவதற்கு வழிகோலியது ?
அ) அன்னி பெசன்ட்
ஆ) ஜோதிபா பூலே
இ) ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்
ஈ) இராஜா ராம் மோகன்ராய்
விடை : இ ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
11) பிரார்த்தனை சமாஜத்தை நிறுவியவர்
யார்?
அ) ஆத்மராம் பாண்டுரங்
ஆ) M G ரானடே
இ) K C சென்
ஈ) விவேகானந்தர்
விடை : அ ) ஆத்மராம் பாண்டுரங்
12) முதன் முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டது எப்போழுது?
அ) 1960
ஆ) 1860
இ ) 1850
ஈ) 1855
விடை : ஆ ) 1860
13 ) விதவை மறுமணச் சங்கத்தை
ஏற்படுத்தியவர் யார் ?
அ) MG ரானடே
ஆ) ஜோதி பாபூலே
இ) நாராயணகுரு
ஈ ) K C சென்
விடை : அ ) M G ரானடே
14 ) ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர் யார் ?
அ) ஜோதிபாபூலே
ஆ) விவேகானந்தர்
இ) சுவாமி தயானந்த சரஸ்வதி
ஈ) விவேகானந்தர்
விடை : இ ) சுவாமி தயானந்த சரஸ்வதி
15) சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின்
ஆசிரியர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) MG ரானடே
இ ) அய்யங்காளி
ஈ) தயானந்த சரஸ்வதி
விடை : ஈ ) தயானந்த சரஸ்வதி
16) வேதங்களுக்கத் திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம்?
அ) விவேகானந்தர்
ஆ) அன்னிபெசன்ட்
இ ) தயானந்த சரஸ்வதி
ஈ) வள்ளலார்
விடை : இ ) தயானந்த சரஸ்வதி
17) நவீன வங்காள உரைநடையின்
முன்னோடி யார்?
அ) ஈஸ்வர சந்திர வித்யாசகர்
ஆ) ஆத்மராம் பாண்டுரங்
இ ) MG ரானடே
ஈ ) அன்னிபெசன்ட்
விடை : அ ) ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
18) ஆங்கில வேதப்பள்ளிகளை உருவாக்கிய சமாஜம் எது?
அ) பிரார்த்தனா சமாஜம்
ஆ) ஆரிய சமாஜம்
இ) இராமகிருஷ்ண மடம்
ஈ) பிரம்ம சமாஜம்
விடை : ஆ ) ஆரிய சமாஜம்
19 ) நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ) பாபா இராம்சிங்
ஆ) குருநானக்
இ) ஜோதிபாபூலே
ஈ) பாபா தயாள்தாஸ்
விடை : அ ) பாபா ராம்சிங்
20) பிரம்மஞான சபையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
அ) மதுரை
ஆ) அடையாறு
இ) பேலூர்
ஈ) கடலூர்
விடை : ஆ ) அடையாறு
**************** ************ *************
0 Comments