10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்
வரலாறு - அலகு - 5
19 ஆம் நூற்றாண்டில் சமூக , சமய
சீர்திருத்த இயக்கங்கள் - பகுதி - 2
வினா உருவாக்கம் -
திருமதி.ச.இராணி ப.ஆ,
இளமனூர் , மதுரை.
************** *************** **********
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு எழுத விருப்பமுள்ளோர் தங்கள் பெயர் படிப்பு , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி லிங்க் பெற்றுக்கொள்ளலாம்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.
***************** ************** -**********
1) பிரார்த்தனை சமாஜம் எங்கு எந்த
ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது?
அ) பம்பாய் , 1867
ஆ) சென்னை , 1857
இ) கல்கத்தா , 1867
ஈ) டில்லி 1860
விடை : அ ) பம்பாய் , 1867
2) தக்காண கல்விக்கழகம் , விதவை
மறுமணச் சங்கம் போன்ற அமைப்புகளை நிறுவியவர் யார்?
அ ) இராமகிருஷ்ணர்
ஆ) மகாதேவ் கோவிந்த் ரானடே
இ) ஜோதிபா பூலே
ஈ) தேவேந்திரநாத் தாகூர்
விடை : ஆ ) மகாதேவ் கோவிந்த் ரானடே
3) ஆரிய சமாஜம் தொடங்கப்பட்ட ஆண்டு
எது?
அ) 1975
ஆ) 1875
இ)1865
ஈ) 1855
விடை : ஆ ) 1875
4) ஆரிய சமாஜத்தின் முக்கியக் குறிக்கோள் எது?
அ) விதவை திருமணம்
ஆ) உடன்கட்டை ஒழித்தல்
இ)ஆங்கில வழிக்கல்வி ஆதரித்தல்
ஈ) எதிர்மதமாற்றம்
விடை : ஈ ) எதிர்மதமாற்றம்
5) வாழ்கின்ற அனைத்து உயிரினங்களும் இறைவனே எனக்கூறியவர் யார்?
அ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ) விவேகானந்தர்
இ) M G இரானடே
ஈ) ஆத்மநாம்
அ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
6) மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவை எனக்கூறியவர் யார்?
அ) அய்யங்காளி
ஆ) நாராயணகுரு
இ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஈ) M G இரானடே
விடை : இ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
7) பஞ்சாபில் சீர்திருத்த இயக்கங்களுக்குத்
தலைமையேற்ற சமாஜம் எது ?
அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரார்த்தனை சமாஜம்
இ) பிரம்ம சமாஜம்
ஈ) பிரம்மஞான சபை
விடை : அ ) ஆரிய சமாஜம்
8) இராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த
ஊரைச்சேர்ந்தவர்?
அ) அடையாறு
ஆ) பஞ்சாப்
இ) தட்சினேசுவரம்
ஈ) பேலூர்
விடை : இ ) தட்சினேசுவரம்
9 ) இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார் ?
அ ) இராமகிருஷ்ண பரமஹம்சர்
ஆ) சுவாமி விவேகானந்தர்
இ) இராஜாராம் மோகன்ராய்
ஈ) ஜோதிபாபூலே
விடை : ஆ ) சுவாமி விவேகானந்தர்
10 ) நரேந்திரநாத் தத்தா என்பது யாருடைய பெயர்?
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) சுவாமி கமலாத்மானந்தர்
இ) கேசவ்சந்திரசென்
ஈ) வித்யாசாகர்
விடை : அ ) சுவாமி விவேகானந்தர்
11) 1893 ஆம் ஆண்டு உலகச்சமய மாநாடு
எங்கு நடைபெற்றது?
அ) வாரணாசி
ஆ) பெர்லின்
இ) இலண்டன்
ஈ) சிக்காகோ
விடை : ஈ ) சிக்காகோ
12) 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றிச்
சொற்பொழிவாற்றியவர் யார் ?
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) அன்னிபெசன்ட்
இ) தயானந்த சரஸ்வதி
ஈ) ஆத்மராம் பாண்டுரங்
விடை : அ ) சுவாமி விவேகானந்தர்
13) பிரம்மஞான சபையைத் தோற்றுவித்தவர் யார்?
அ) சுவாமி விவேகானந்தர்
ஆ) அன்னிபெசன்ட்
இ) ஜோதிபாபூலே மற்றும் அய்யங்காளி
ஈ) மேடம் H.P பிளா வட்ஸ்கி மற்றும் H.S ஆல்காட்
விடை : ஈ) மேடம் H.P பிளா வட்ஸ்கி மற்றும் H.S ஆல்காட்
14) இந்தியாவில் பிரம்மஞான சபை எங்கு
ஆரம்பிக்கப்பட்டது?
அ) கல்கத்தா
ஆ) மும்பை
இ) அடையாறு
ஈ) மதுரை
விடை : இ ) அடையாறு
15 ) இந்தியாவிற்கு அயர்லாந்தைப் போல
தன்னாட்சி வழங்க வேண்டும் என்று
கூறியவர் யார்?
அ) விவேகானந்தர்
ஆ) அன்னிபெசன்ட்
இ) சாவித்ரிபாய்
ஈ ) அய்யங்காளி
விடை :ஆ ) அன்னிபெசன்ட்
16) நியூ இந்தியா, காமன்வீல் ஆகிய
செய்தித்தாட்கள் யாரால் வெளியிடப்பட்டன?
அ ) சாவித்ரி
ஆ) அன்னிபெசன்ட்
இ ) H.P.பிளாவட்ஸ்கி
ஈ) அயோத்திதாசர்
விடை : ஆ ) அன்னிபெசன்ட்
17) ஜோதிபா கோவிந்தராவு பூலே எந்த
மாநிலத்தில் பிறந்தார்?
அ) மகாராஷ்டிரா
ஆ) பஞ்சாப்
இ) கேரளா
ஈ ) தமிழ் நாடு
விடை : அ ) மகாராஷ்டிரா
18) ஒடுக்கப்பட்டோருக்கான முதல்
பள்ளி எந்த ஆண்டு , எங்கு
தொடங்கப்பட்டது?
அ) 1927 , சென்னை
ஆ) 1852 , புனே
இ) 1952 , மும்பை
ஈ ) 1854 , தட்சிணேசுவரம்
விடை : ஆ ) 1852 , புனே
19 ) சத்ய சோதக் சமாஜ் ( உண்மையை நாடுவோர் சங்கம்) என்னும் அமைப்பை
ஏற்படுத்தியவர் யார்?
அ) அன்னிபெசன்ட்
ஆ) சையத் அகமத்கான்
இ ) ஜோதிபா கோவிந்தராவ் பூலே
ஈ ) அய்யங்காளி
விடை : இ ) ஜோதிபா கோவிந்தராவ் பூலே
20 ) குலாம்கிரி' என்றால் என்ன?
அ) ஒற்றுமை
ஆ ) அடிமைத்தனம்
இ )வீடுபேறு
ஈ) ஆர்வம்
விடை : ஆ ) அடிமைத்தனம்
*************** ************** ***********
0 Comments