10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு -அலகு 3 & 4 - ஆன்லைன் தேர்வு வினா & விடை / 10th SOCIAL SCIENCE - HISTORY - UNIT 3 & 4 - ONLINE TEST - QUESTION & ANSWER

 

10 ஆம் வகுப்பு 

 சமூக அறிவியல் - வரலாறு 

 அலகு 3 & 4 இரண்டாம் உலகப்போர்

& இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய

உலகம்

வினா உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆ.

இளமனூர் , மதுரை.

'பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு தமிழாசிரியர், மதுரை.

**************   ************  *************

தினம் ஒரு தேர்வில் பங்கேற்க   விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், படிக்கும் வகுப்பு அல்லது பணி , மாவட்டம் இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பி தேர்வு   இணைப்பினைப் பெறலாம்.

*************   ************   *************

1) இரண்டாம் உலகப்போர் தொடங்கிய
ஆண்டு எது?

அ) 1938

ஆ) 1939

இ ) 1937

ஈ) 1914

விடை : ஆ ) 1939

2) இரண்டாம் உலகப்போர் முடிவு பெற்ற
ஆண்டு எது?

அ) 1940

ஆ) 1942

இ )  1918

ஈ) 1945

விடை : ஈ ) 1945

3) உலக வங்கி நிறுவப்பட்ட ஆண்டு எது?

அ) 1940

ஆ) 1945

இ) 1918

ஈ) 1939

விடை : ஆ ) 1945

4) தொலைவிலிருந்து எதிரிகளின் போர்
விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான
கருவி ------

அ ) ரேடார்

ஆ) பீரங்கி

இ) நீர்மூழ்கிக்கப்பல்

ஈ) டாங்குகள்

விடை : அ ) ரேடார்

5) இராணுவ நீக்கம் செய்யப்பட்ட எந்தப்
பகுதியை ஹிட்லர் தாக்கினார் ?

அ) சாலமோன் தீவு

ஆ) பிரிட்டன்

இ) பிரான்ஸ்

ஈ) ரைன்லாந்து

விடை : ஈ ) ரைன்லாந்து

6) அமெரிக்காவின் முத்துத் துறைமுகம்
தாக்கப்பட்ட ஆண்டு எது?

அ) 1939

ஆ) 1940

இ )  1941

ஈ) 1942

விடை : இ ) 1941


7) ஜெர்மனியப் படைகள் ரஷ்யாவைத்
தாக்கிய ஆண்டு எது?

அ) 1941

ஆ) 1940

இ ) 1939

ஈ) 1942

விடை : அ ) 1941

8) 1939 ல் இத்தாலி படையெடுத்த நாடு எது ?

அ) எத்தியோப்பியா

ஆ) அல்பேனியா

இ) இங்கிலாந்து

ஈ) பிரான்ஸ்

விடை : ஆ ) அல்பேனியா

9) மியூனிச் உடன்படிக்கையில்
கையெழுத்திட்ட இருநாடுகள் எவை?

அ) ஜெர்மனி , பிரிட்டன்

ஆ) இத்தாலி , பிரிட்டன்

இ) பிரான்ஸ், பிரிட்டன்

ஈ) பிரான்ஸ், ஜெர்மனி

விடை : அ ) ஜெர்மனி , பிரிட்டன்

10 ) இத்தாலியும், ஜெர்மனியும் இணைந்து செய்த உடன்படிக்கை ------

அ) வெர்செயில்ஸ்

ஆ) மியூனிச்

இ) ரோம் , பெர்லின்

ஈ) பாரீஸ்

விடை : இ ) ரோம் , பெர்லின்

11 ) ஹிட்லர் எப்பொழுது ஜெர்மனியின்
ஆட்சிப் பொறுப்பேற்றார் ?

அ) 1933

ஆ) 1935

இ) 1932

ஈ ) 1939

விடை : அ ) 1933

12) பாண்டுங் மாநாடு நடைபெற்ற ஆண்டு எது?

அ) 1952

ஆ) 1961

இ )  1955

ஈ ) 1957

விடை : இ ) 1955

13 ) அணிசேரா இயக்கத்தின் முதல் உச்சி
மாநாடு நடைபெற்ற இடம் எது?


அ) பெல்கிரேடு

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) யுகோஸ்லோவியா

விடை : அ ) பெல்கிரேடு

14 ) 1961ல் நடைபெற்ற அணிசேரா மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியத் தலைவர் யார்?


அ) காந்தி

ஆ) நேரு

இ ) காமராசர்

ஈ) திலகர்

விடை : ஆ ) நேரு 

15 ) டிட்டோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

அ ) இந்தியா

ஆ) எகிப்து

இ) யுகோஸ்லோவியா

ஈ) கானா

விடை : இ ) யுகோஸ்லோவியா 




Post a Comment

0 Comments