பத்தாம் வகுப்பு -
சமூக அறிவியல் - வரலாறு - அலகு 1 -
முதல் உலகப்போரின் வெடிப்பும்
அதன் பின்விளைவுகளும்!
இயங்கலைத் தேர்வு.
வினா உருவாக்கம் -
திருமதி.ச.இராணி அவர்கள் ,
பட்டதாரி ஆசிரியர் , இளமனூர் , மதுரை.
பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் இளமனூர், மதுரை.
**************** ************ ***********
பாராட்டுச்சான்றிதழ் பெறுவதற்கான 80%
மதிப்பெண் பெற்றும் சான்றிதழ்
வரவில்லையெனில் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சரியான
மின்னஞ்சல் முகவரி கொடுத்து தேர்வு எழுதவும்.
***************** ************ **********1) உழைப்போர்க்கு ரொட்டி என்ற கோரிக்கை ------- புரட்சியின்போது முழங்கப் பட்டது.
அ ) பிரெஞ்சு
ஆ ) ரஷ்யப்
இ ) அமெரிக்கப்
விடை : ஆ ) ரஷ்யப்
2) பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு
அ ) 1917
ஆ ) 1919
இ ) 1918
விடை : இ ) 1918
3) பன்னாட்டுச் சங்கம் தொடங்கப்பட்ட
ஆண்டு ------
அ ) 1919
ஆ ) 1918
இ ) 1920
விடை : இ ) 1920
4) பன்னாட்டுச் சங்கத்தின் செயலகம் ------
இருந்தது.
அ ) மொராக்கோ
ஆ ) ஜெனிவா
இ ) பாரிஸ்
விடை : ஆ ) ஜெனிவா
5) துருக்கி மீண்டும் ஒரு நாடாக
மறுபிறவி எடுப்பதற்கு ------ முக்கிய பங்கு வகிக்கார்.
அ ) முஸ்தபா கமால் பாட்சா
ஆ ) லெனின்
இ ) நிக்கோலஸ்
விடை : அ ) முஸ்தபா கமால் பாட்சா
6) ' லூசிடானியா ' என்னும் அமெரிக்கக்
கப்பலைத் தாக்கிய நாடு ------
அ ) இத்தாலி
ஆ ) ஜெர்மனி
இ ) இங்கிலாந்து
விடை : ஆ ) ஜெர்மனி
7) முதல் உலகப் போரின்போது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் -------
அ ) லாயிட் ஜார்ஜ்
ஆ ) கிளமென் சோ
இ ) லெனின்
விடை : அ ) லாயிட் ஜார்ஸ்.
8)பதினான்கு அம்சத் திட்டத்தை
வெளியிட்டவர் ------
அ ) உட்ரோ வில்சன்
ஆ ) மா சே துங்
இ ) லாயிட் ஜார்ஜ்
விடை : அ ) உட்ரோ வில்சன்
9) முதல் உலகப் போரின்போது ஆசியாவில் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்ற நாடு -------
அ ) சீனா
ஆ ) இந்தியா
இ ) ஜப்பான்
விடை : இ ) ஜப்பான்
10 ) ஆஸ்திரிய பட்டத்து இளவரசர் பிரான்ஸ் பெர்டினான்டு -------- என்ற பாஸ்னிய செர்பியனால் கொல்லப்பட்டார்.
அ ) பிரின்ஸப்
ஆ ) சாரினா
இ ) ரஸ்புடின்
விடை : அ ) பிரின்ஸப்
11 ) பன்னாட்டுச் சங்கத்தின் முதல்
பொதுச்செயலாளர் ------
அ ) ரூஸ்வெல்ட்
ஆ )சர்எரிக்டிரம்மாண்ட்
இ ) கிளமென்சோ
விடை : ஆ ) சர்எரிக்டிரம்மாண்ட்
12) லொக்கர்னோ உடன்படிக்கை
கையெழுத்தான ஆண்டு ------
அ ) 1920
ஆ ) 1925
இ ) 1919
விடை : ஆ ) 1925
13 ) பன்னாட்டுச் சங்கம் ------ ஆம் ஆண்டு
கலைக்கப் பட்டது.
அ ) 1946
ஆ ) 1944
இ ) 1945
விடை : அ ) 1946
14 ) இரண்டாம் கெய்சர் வில்லியம் -----
நாட்டைச் சேர்ந்தவர்
அ ) இத்தாலி
ஆ ) இங்கிலாந்து
இ ) ஜெர்மனி
விடை : இ ) ஜெர்மனி
15) பாரிஸ் அமைதி மாநாடு நடந்த ஆண்டு -------
அ ) 1918
ஆ ) 1919
இ ) 1920
விடை : ஆ ) 1919
16) துருக்கியோடு மேற்கொள்ளப்பட்ட
உடன்படிக்கை -------
அ ) வெர்செய்ல்ஸ்
ஆ ) புகாரெஸ்ட்
இ ) செவ்ரஸ்
விடை : இ ) செவ்ரஸ்
17) டூமா என்பது ------ வின் நாடாளுமன்றம்.
அ ) ரஷ்யா
ஆ ) அமெரிக்கா
இ ) இங்கிலாந்து
விடை : ரஷ்யா
18) பதுங்கு குழிப்போரின் தொடக்கம் ------
போர்
அ ) பால்கன் போர்
ஆ ) அடோவா
இ ) மார்ன்
விடை : இ ) மார்ன்
19 ) ----- உடன்படிக்கையின்படி அல்பேனியா என்னும் புதிய நாடு உருவாக்கப் பட்டது.
அ ) புகாரெஸ்ட்
ஆ ) இலண்டன்
இ ) வெர்செயில்ஸ்
விடை : ஆ) இலண்டன்
20) ------- கப்பல் சென்னை மீது குண்டு
வீசியது.
அ ) எம்டன்
ஆ ) லூசிடானியா
இ ) இராயல்
விடை : அ ) எம்டன்
**************** ************* ***********
0 Comments