கிறிஸ்துமஸ் சிறப்பு வினாடி வினா - XMAS - ONLINE CERTIFICATE TEST

 

கிறிஸ்துமஸ் தின சிறப்பு

வினாடி - வினா - Green Tamil

வினா உருவாக்கம் - 

கவிஞர். திரு.மோசஸ்மங்களராஜ், 

ஆசிரியர் , மதுரை.

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு .

தமிழாசிரியர் , மதுரை. 9786141410

***************    **************  **********

1) இயேசுநாதர் பிறந்த ஊர் ------

அ) பெத்தலகேம்

ஆ) நாசரேத்

இ) இஸ்ரேல்

விடை : அ) பெத்தலகேம்

2) இயேசுநாதருக்கு திருமுழுக்கு   வழங்கியவர்

அ) மத்தேயு

ஆ) பேதுரு

இ) யோவான்

விடை : இ) யோவான்

3) இயேசுநாதர் எதனைக்கொண்டு பாலை நிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு
உணவளித்தார்?

அ) 3 அப்பங்களும் 5 மீன்துண்டுகளும்

ஆ) 5 அப்பங்களும் 2 மீன் துண்டுகளும்

இ) 7 அப்பங்களும் 10 மீன் துண்டுகளும்

விடை : ஆ) 5 அப்பங்களும் 2 மீன் துண்டுகளும்

4 ) அப்போஸ்தலர்கள் மொத்தம் ------
பேர்கள்.

அ) 12

ஆ) 08

இ) 15

விடை : அ) 12

5) இயேசுவை மூன்றுமுறை மறுதலித்தவர் -----

அ ) யோவான்

ஆ) பேதுரு

இ) லூக்கா

விடை : ஆ) பேதுரு

6) முப்பது வெள்ளிக்காசுகளுக்கு
ஆசைப்பட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடர் ---

அ) யூதாஸ்

ஆ) மத்தேயு

இ) பவுல்

விடை : அ) யூதாஸ்

7) இயேசு ----- தோட்டத்தில்
ஜெபித்துக்கொண்டிருக்கும் போது யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டார்.

அ) ஏதேன்

ஆ) கெத்சமனே

இ ) பாபிலோன்

விடை : ஆ) கெத்சமனே

8) மேரிமாதாவின் கனவில் தோன்றிய
இறைத்தூதரின் பெயர் ------

அ )உசேன்

ஆ) ரபேல்

இ) கபிரியேல்

விடை : இ) கபிரியேல்

9) இயேசுநாதர் செய்த முதல் புதுமை ------

அ) கண்பார்வையற்றவருக்கு பார்வை அளித்தது

ஆ) தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுதல்

இ) முடவரைக் குணமாக்குதல்

விடை : ஆ) தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுதல்

10) இயேசுநாதர் முதல் புதுமையை
நிகழ்த்திய ஊர் ------

அ) கானா ஊர்

ஆ) தேனூர்

இ) மானூர்

விடை : அ) கானா ஊர்

11 ) இயேசு பிறந்தபோது அவரைக் கொல்ல நினைத்த மன்னன் -----

அ) ஏரோது

ஆ) பிலாத்து

இ) சாலமன்

விடை : அ) ஏரோது

12) இயேசு பிறந்தபோது காணவிரும்பிய
மூன்று இராஜாக்களை வழிநடத்தியது எது?

அ) மழை

ஆ) நிலா

இ) வால் நட்சத்திரம்

விடை : இ) வால் நட்சத்திரம்

13 ) விவிலியத்தில் உள்ள இருபிரிவுகள்
பழைய ஏற்பாடு மற்றும் ------

அ) நடுநிலை ஏற்பாடு

ஆ)புதிய ஏற்பாடு

இ) கடைசி ஏற்பாடு

விடை : ஆ)புதிய ஏற்பாடு

14) விவிலியத்திலுள்ள நற்செய்தி பிரிவுகள் ------  மத்தேயு , மாற்கு, லூக்கா

அ) யோவான்

ஆ) நீதிமொழிகள்

இ) சங்கீதம்

விடை : அ) யோவான்

15 ) கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயர் -----

அ) நந்தா கிளாஸ்

ஆ) சாண்டாகிளாஸ்

இ) பாண்டா கிளாஸ்

விடை : ஆ) சாண்டாகிளாஸ்

16) இயேசுநாதருக்கு ----- நதியில்
திருமுழுக்கு வழங்கப்பட்டது.

அ) அமேசான்

ஆ) நைல்

இ) யோர்தான்

விடை : இ) யோர்தான்

17) இம்மானுவேல் ' என்ற வார்த்தையின்
பொருள் ------

அ ) இயேசு நம்மோடு

ஆ) இயோசு என்னோடு

இ) இயேசு உன்னோடு

விடை : அ ) இயேசு நம்மோடு

18) கர்த்தருக்குப் பயப்படுதல் ------
போதிக்கும்.

அ) அன்பை

ஆ) ஞானத்தை

இ ) உண்மையை

விடை : ஆ) ஞானத்தை

19 ) நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை . உன்னைக் ----- விடுவதும் இல்லை .

அ) பிரிவதும்

ஆ) நேசிப்பதும்

இ) கைவிடுவதும்

விடை : இ) கைவிடுவதும்

20) உன் ------  வீண்போகாது.

அ) நம்பிக்கை

ஆ) அறிவு

இ ) செல்வம்

விடை : அ) நம்பிக்கை



Post a Comment

0 Comments