சர் ஹம்பரி டேவி பிறந்த தினம்
17 • 12 • 2021
சுரங்கத் தொழிலாளர்களை பாதுகாக்க எண்ணிய கருணை!
தனிமங்களைப் பிரித்தெடுப்பதில் தணியாத தன்மை !
நோயாளிகளின் வேதனையைப் போக்கிய மயக்க உண்மை !
உப்பு நீரில் செம்பு துருபிடிப்பதை கண்டறிந்த துப்பறிவாளர் !
எரிமலைச் செயலை உற்று நோக்கிய உறங்கா மலை !
செயற்கை சிரிப்பூட்டியைக் கண்டெடுத்த வள்ளல் !
மீத்தேனுக்கு வேலி போட்ட மீத்திறன் !
மின்சார வேதியியலின் தந்தை !
ஒரு மரச் சிற்பி தந்த யுகச் சிற்பி !
இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகரில் 1778 -- ஆம் ஆண்டு சர் ஹம்பரி டேவி பிறந்தார்.இவரது தந்தை ஒருமரச் சிற்பி , எனவே வறுமையும் , பசியும் வாட்டவே படிப்பை விட்டு வேலை தேடும் வேளை வந்தது ஹம்பரி டேவிக்கு. வறுமையின் நிலையைத் தன் கலையால் தடுத்து , விடுத்து, முயற்சித்து முன்னேறி ஒரு மருத்துவரிடம் உதவியாளரானார். தமது சிந்தனையைச் செயலாக்க ,அம் மருத்துவரிடமே தனியறை ஒன்றை அமைத்துத்தரச் செய்து, தமது ரசாயனச் சோதனைக்கு வலுவூட்டினார். அதீத அறிவியல் ஆர்வத்தால் , ராயல் இன்ஸ்டிடியூட்டில் அறிவியல் கழகப் பணியை கேட்டு , தமது 22 - ம்வயதில் கடிதம் எழுதினார். இவற்றை அறிந்த ' லார்டு ராம் போர்டு ' என்பவர் வரவழைத்துப் பின் டேவியின் இளம்வயது மற்றும் நம்பிக்கையில்லாத தன்மையால், ராம்போர்டு வேலையை விட்டுவிடும் படிக்கேட்டுக் கொண்டார்.அதனை ஏற்காத டேவி, தன் சொற்பொழிவைக் கேட்ட பின் வேலை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறே நடக்க தமது சிந்தனையில் உதித்த அறிவியல் விதைகளை (கருத்துக்களை ) , தமக்கு கிடைத்த தளம் எங்கும் விதைத்தார் டேவி.அதன் விளைவாக உலகம் எண்ணில்லா பயனைப் பெற்று இன்றும் பெருமையும் , இனிமையும் காண்கிறது உலகம் என்பதை வரலாறு வாழ்த்துகிறது.
டேவி காப்பு விளக்கு :
சர் ஹம்பரி டேவி கண்டுப்பிடித்த அனைத்தும் சிறந்த பயனுள்ளவையாகத் திகழ்ந்தாலும் , காப்பு விளக்கு என்பது மனித உயிரைக் காப்பாற்ற முயன்ற உன்னதப் படைப்பாகும். மேலும் இவை இன்றும் பயன்படுத்தப் படுகின்றன. எளிதில் தீப்பிடிக்கும் மீத்தேன் ( methane ) வாயு தீப்பிடித்து சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் விபத்துக்குள்ளாவது மிகச்சாதாரணமாக நடக்கும் நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. தொழிலாளர் உயிருக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லாத நிலை , பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்த தொடர் கதையிது. சுரங்கத் தொழிலின் போது வெளிச்சம் வேண்டி தீ விளக்குகளைப் பயன் படுத்துவதன் காரணமாக இந்த விபத்துகள் நடந்தேறின. இவர்களின் நிலையை எண்ணி வருந்திய டேவி அவர்கள் , தொழிலாளர்கள் நலன் காக்கும் பொருட்டு 1815 - ஆம் ஆண்டு சர் ஹம்பரி டேவி பாதுகாப்புவிளக்கை கண்டுப்பிடித்தார். அதன் பின்னரே சுரங்க தீ விபத்துக்கள் பெருமளவு குறைந்ததை உலகம் உணர்ந்த உண்மை நிலையைக் கொண்டது.
உலகின் மிகச்சிறந் வேதியியல் வித்தகரான ஹம்பரி டேவி, பாதுகாப்பு விளக்கை உருவாக்கிய விதம்.
* விளக்கு எரியத் தேவையான ஆக்சிஜன் (Oxygen),விளக்குச் சுடரிலிருந்து வெப்பப் பரவலாக உள்ளது.
* ஆக்சிஜன் எரிவதற்கு துணைப் புரியும் முக்கிய காரணியாகும். ஆனால் சுடரிலிருந்து வெளியாகும் வெப்பம் அதனைச் சுற்றியுள்ள தீப்பிடிக்கக் கூடிய வாயுக்களை விரைவாக எரியச் செய்கிறது. இதன்காரணமாகவே தீ விபத்துகள் நிகழ்ந்தன. இவற்றிலிருந்து பாதுகாக்க தம் நுண்ணறிவைப் பயன்படுத்தி , எண்ணெய் விளக்கின் தீச்சுடரைச் சுற்றியுள்ள பகுதிகளை மெல்லிய கம்பி வலையால், தடுப்புச் சுவர் ஒன்றை உருவாக்கினார். இதனால் விளக்கு எரியத் தேவையான காற்று எளிதாகக் கிடைக்கும். எனவே சுடரின் வெப்பம் வெளி வாயுக்களுடன் கலப்பதற்குள், அதன் வீரியம் குறைந்து, சிதைந்து விடுகின்றன. இதன் காரணமாகவே வெளியே உள்ள வாயுக்கள் எரிவது தடுக்க ப்படுகிறது.இப்போதும் மின் விளக்குகள்பயன் பாட்டின் காரணமாக ,டேவி காப்பு விளக்கின் பயனும் , குறையாமல் பயன்பாடு நிலையிலேயே உள்ளது .இன்றும் சுரங்கத்தினுள் உள்ள இருக்கும் அபாயகரமான வளைவுகளைக் கண்டறிய இந்தப் பாதுகாப்பு விளக்குப் பயன்படுகின்றன.
மருத்துவ துறையில் அரிய சாதனை :
வேதியியலில் மற்றும் அல்லாது அனைத்துத் துறை வல்லுநராக விளங்கினார் டேவி.மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய உதவியாக ,மயக்கவியல் பற்றிய ஆய்வு மனித குல வரலாற்றில் மாபெரும் கொடையாக அமைந்தது. அதாவது அறுவைச் சிகிச்சையின் போது வலியினால் நோயாளிகள் அவதியுறுவதைத் தடுக்க, தம்மால் உதவிட முடியுமா ? என்ற வினாவின் விடையாக விளைந்தவையே நைட்ரஸ் ஆக்சைடின் மயக்க விளைவைப் பற்றிய ஆய்வு .மேற்கொண்ட ஆய்வை மெய்ப்பிக்க மயக்க விளைவை ஏற்படுத்தும் என அறிந்தும் , தானே பரிசோதனையின் தரம் அறிய நுகர்ந்து மயக்க நிலையடைந்து மெய்ப்பித்தார்.பின் தொடர் பரிசோதனையின் காரணமாக இதன் தன்மைகளை விளக்கிக் காட்டினார்.மேலும் ஒரு மணி மகுடமாக, லாஃபிங் கேஸ் ( Laughing gas) என்பதனைக் கண்டுப்பிடித்து உலகப் புகழ்பெற்றார்.
மைக்கேல் ஃபாரடேவுடன் இணைந்து செய்த இமாலயச் சாதனை :
மைக்கேல் ஃபாரடேவுடன் இணைந்து அறிவியல் ஆனந்தம் அடைய ஆர்வம் கொண்டு , அதனை ஆராயும் நோக்கோடு னஐரோப்பியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டானர்.மேலும் அயோடின் பற்றிய ஆய்வு செய்தனர்.வைரம் என்பது ஒரு கரிமப் படிவம் என்பதை ஆராய்ந்து நிரூபித்தனர்.ஃபாரடேயின் துணையுடன் வேதியியல் தத்துவத் தனிமங்கள் ( Elements Of Chemical Philosophy) என்ற தலைப்பில் டேவி ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்.மேலும் உப்பு நீரில் செம்பு துருப்பிடிப்பதைப் பற்றியும் , எரிமலைச் செயல்பாடுகள் பற்றியும் பயனுள்ள ஆய்வுகளை மேற்க்கொண்டார்.ரசாயண ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயனாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியதால் , மின்சார ரசாயணத்தின் தந்தை என போற்றப் படுகிறார்.சிதைந்த வேதியல் கூட்டுப் பொருட்களின் மீது எலக்ட்ராலிசிஸ் முறையில் செயல்பட்டு அதிலிருந்து பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய மூலப்பொருட்களைப் பிரித்தெடுத்தார். இவ்வாறாக மனித குல மேன்மைக்கு தம் வாழ்நாள் முழுவதும் , மனிதனின் தேவையை , எதிர்காலத்தை என எண்ணியெண்ணி அவற்றை நிறைவு செய்ய விழைந்து, வெற்றி கண்ட சர் ஹம்பரி டேவியின் உழைப்பை அவரது பிறந்த நாளில் போற்றி வணங்குவோம்.!
0 Comments