சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் - சிறப்பு இயங்கலைத் தேர்வு - வினா & விடை / DR.AMBEDKAR - CERTIFICATE ONLINE TEST

 

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர்

சிறப்பு இயங்கலைத் தேர்வு

வினா உருவாக்கம் 

 மு.மகேந்திர பாபு ,

தமிழாசிரியர் , மதுரை.

**************   *************   ************

1 ) அம்பேத்கர் பிறந்த மாநிலம் -----

அ) மகாராஷ்டிரா

ஆ) உத்திரப்பிரதேசம்

இ) கேரளா

ஈ) குஜராத்

விடை : அ ) மகாராஷ்டிரா

2) அம்பேத்கரின் கல்விக்கு உதவி செய்த மன்னர் -----

அ) திருவிதாங்கூர் மன்னர்

ஆ) சவுதி மன்னர்

இ) பரோடா மன்னர்

ஈ) இங்கிலாந்து இளவரசர்

விடை : இ ) பரோடா மன்னர்


3) உயர்கல்வி பெறுவதற்காக ------- 
நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர்
டாக்டர்.அம்பேத்கர் ஆவார்.

அ ) இங்கிலாந்து

ஆ) அமெரிக்கா

இ) இரஷ்யா

ஈ) கனடா

விடை : ஆ ) அமெரிக்கா

4) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் ----- அமைச்சராகப் பொறுப்பேற்றார் அம்பேத்கர்.

அ) நிதி

ஆ) வெளியுறவு

இ) உள்துறை

ஈ) சட்டத்துறை

விடை : ஈ ) சட்டத்துறை

5) ----- வங்கி உருவாக்கியதில்
அம்பேத்கரின் பங்கு மகத்தானது.

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத மாநில வங்கி

இ )  ரிசர்வ் வங்கி

ஈ) இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

விடை : இ ) ரிசர்வ் வங்கி 

6) அம்பேத்கரின் ஒரு நாளின் 20 மணி
நேரத்தை -----ல் செலவிட்டார்.

அ) நூலகத்தில்

ஆ) பொழுதுபோக்கில்

இ) அரசியலில்

ஈ) பயணத்தில்

விடை : அ ) நூலகத்தில்

7) தெற்காசியாவில் மிகப்பெரிய தனிநபர் ----- வைத்திருந்தார் அம்பேத்கர்.

அ) கோவில்

ஆ) பள்ளி

இ) மருத்துவமனை

ஈ) நூலகம்

விடை : ஈ ) நூலகம்

8) அம்பேத்கர் பாரிஸ்டர் பட்டம் ------ ல்
பெற்றார்.

அ) லண்டன்

ஆ) வாஷிங்டன்

இ) சிட்னி

ஈ) நியுயார்க்

விடை : அ ) லண்டன்

9) லண்டனில் ----- ஆம் ஆண்டு நடந்த முதல் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கொண்டார்.

அ) 1920

ஆ) 1930

a ) 1940

ஈ) 1945

விடை : ஆ ) 1930

10 ) கற்பி , ஒன்று சேர், ------- செய்
என்பது அம்பேத்கரின் முழக்கம் ஆகும்.

அ ) கல்வி

ஆ) விதி

இ) வேளாண்மை

ஈ) புரட்சி

விடை : ஈ ) புரட்சி 

****************   *************   **********

Post a Comment

0 Comments