9 ஆம் வகுப்பு - இயல் 6 , மதிப்பீடு - பலவுள் தெரிக - வினா & விடை / 9th TAMIL - EYAL 6 - MATHIPPEEDU - PALAVUL THERIKA

 


வகுப்பு - 9 , தமிழ் 

இயல் - 6 , கலை பல வளர்த்தல்

மதிப்பீடு -  பலவுள் தெரிக.

1 ) பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று

அ) மாமல்லபுரம் 

ஆ) பிள்ளையார்பட்டி 

இ) திரிபுவனவீரேசுவரம் 

ஈ) தாடிக்கொம்பு

விடை : அ ) மாமல்லபுரம்


2 ) ' பொதுவர்கள் பொலி உறப் போர் அடித்திடும்' நிலப் பகுதி

அ) குறிஞ்சி         ஆ) நெய்தல் 

(இ) முல்லை          ஈ) பாலை

விடை : இ ) முல்லை

3 ) மரவேர் என்பது ------ புணர்ச்சி

அ) இயல்பு                 ஆ) திரிதல் 

இ) தோன்றல்            ஈ) கெடுதல்

விடை : ஈ ) கெடுதல்

4 ) 'அதிரப் புகுதக் கனாக் கண்டேன்' -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ)தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்

ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

விடை : ஈ ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

5) திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை

அ) விலங்கு உருவங்கள் 

ஆ) தீர்த்தங்கரர் உருவங்கள்

இ) தெய்வ உருவங்கள் 

ஈ)நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்


விடை : ஆ ) தீர்த்தங்கரர் உருவங்கள்

***************   ***************   ***********


Post a Comment

0 Comments