ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 5
மொழியோடு விளையாடு
சொற்களைப் பயன்டுத்தித் தொடர்களை உருவாக்குக.
மாணவர்கள் ஆசிரியர் பாடவேளை கரும்பலகை புத்தகம் எழுதுகோல் அழிப்பான்
வழிபாட்டுக் கூட்டம்
அறை கல்லூரி உயர்நிலை சீருடை மடிக்கணினி
எ-கா : வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.
1. மாணவர்கள், பாடவேளையின்போது மடிக்கணினியைப் பயன்படுத்தினர்.
2.ஆசிரியர், கரும்பலகையில் எழுதிக்காட்டினார்.
3. கல்லூரியில் உயர்நிலைப் பாடங்கள், மடிக்கணினிவழி கற்பிக்கப்படுகிறது.
4. ஆசிரியர், கரும்பலகையில் எழுதுகோலால் எழுதியதை அழிப்பான் கொண்டு அழித்தார்.
5. கல்லூரியில் அறைகள் பெரிதாக இருந்தன.
அகராதியில் காண்க. (அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)
அரங்கு நாட்டியம் ஆடும் இடம், நாடகசாலை, மன்றம்.
ஒட்பம் அறிவு, அழகு, ஒளி.
கான் - காடு, மணம், பூ, வாய்க்கால்.
நசை - ஆசை, குற்றம், அன்பு, விருப்பம்
பொருநர் - படைத்தலைவர், வீரர், கூத்தர், பகைவர்.
2 Comments
உம்பு
ReplyDeleteஉம்பு
ReplyDelete