9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , குறுவினா - வினா & விடை / 9th TAMIL - EYAL 5 - KURUVINA - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 5 . மதிப்பீடு

பாடப்பகுதி - குறுவினா

வினாக்களும் விடைகளும்.

1 ) தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது ?

    * பெண் கல்வி கற்றல் 

    * அறிவுள்ள மக்களைப் பெறுதல்

     * பெண் விடுதலை

      * அன்போடு விருந்து ஓம்புதல்


2  ) மூவாது மூத்தவர் , நூல் வல்லார் - இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.

* மூவாது மூத்தவர் - வயதால் முதுமையடையாத இளையவர் , அனுபவ அறிவால் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவர்.

* நூல் வல்லார் - பல நூல்களைக் கற்ற பெரியோர்.

3 ) நீங்கள் விரும்பிப் படித்த நூல்கள் யாவை ?

   * திருவள்ளுவரின் திருக்குறள்

   * பாரதியாரின் ' பாரதியார் கவிதைகள் '

   * காந்தியடிகளின் ' சத்திய சோதனை '

   * பாரதிதாசனின் ' குடும்ப விளக்கு '

   *உவமைக் கவிஞர் சுரதாவின் ' தேன் மழை '

4 ) சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது ?

          சாரதா சட்டம் குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காக இயற்றப் பட்டது.

************   ****************   ************

Post a Comment

0 Comments