ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 5
கடிதம் எழுதுக.
உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப்
பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.
இளமனூர் ,
07 - 12 - 2021.
விடுநர் ,
அ.தமிழமுதன் ,
மாணவச்செயலர்,
12ஆம் வகுப்பு, 'அ' பிரிவு,
அரசினர் மேல்நிலைப்பள்ளி,
இளமனூர் , மதுரை - 625 201
பெறுநர்
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை 600 001.
பெருந்தகையீர்,
வணக்கம். உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல் மொழியாகவும், முதன்மை
மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது தமிழ்மொழியே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ் என்று சான்றோர் போற்றிப் புகழ்வர். “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று மகிழ்வார் பாரதியார். ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாக வளர்ந்துவரும் தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய, உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ் - தமிழ் ஆங்கிலம் அகராதியின் பத்துப்படிகளை எங்கள் பள்ளி
நூலகத்திற்குப் பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
அ.தமிழமுதன்,
மாணவச் செயலர்.
உறைமேல் முகவரி :
மேலாளர்,
நெய்தல் பதிப்பகம்,
சென்னை 600 001.
*************** *********** ************
1 Comments
Super helpful
ReplyDelete