9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் - பாடப்பகுதி குறுவினா & விடை / 9th TAMIL - EYAL 4 - SIRUVINA & VIDAI

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் 

பாடப்பகுதி - சிறுவினாக்கள்

வினாக்களும் விடைகளும்

*******************    *************   *********

1 ' ஓ என் சமகாலத் தோழர்களே' கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள்கள் யாவை?

* ஓடும் நதிகளைக் கொண்டு, பள்ளம் நிரப்பி, காடு கழனிகள் எங்கும் நெற்கதிர்களைத் தாருங்கள்.

* துன்பம்வராமலிருக்க, முன்னோர் சொன்ன முதுமொழிகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துங்கள்.

* அன்பு, அடக்கம், பொறுமை மாறாமல் புதுமையான கோலம் கொள்ளுங்கள்.

*அன்பெனும் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் அறிவார்ந்த செயலால் முன்னேறுங்கள்.

* அறிவியல் எனும் புதுமையால் இனம், மொழி கடந்து ஆளும் தமிழை நிலைநிறுத்துங்கள்.

* ஏவுகணையின் வேகம்போல் எல்லாக் கோள்களிலும் தமிழை ஏற்றுங்கள் என்பன, 'ஓ, என் சமகாலத் தோழர்களே' என்னும் கவிதையில், கவிஞர் விடுக்கும் வேண்டுகோள்களாகும்.

****************    ***********   *************

2 ) அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

* ஒன்றுமுதல் ஆறறிவுள்ள உயிர் இனங்களைக் கீழ்க்காணுமாறு தொல்காப்பியர் தொடர்புபடுத்துகிறார்.

* உடலால் மட்டும் அறிவன - ஓர் அறிவு உயிர் இனங்கள்
உற்றறிதல் (தொடு உணர்வு) - புல், மரம், ஒருசெல் உயிரினம் அமீபா.

* உடல், நாவால் அறிவன - ஈரறிவு உயிரினங்கள்.
உற்றறிதல் + சுவைத்தல் - நத்தை, சிப்பி.

* உடல், நாக்கு, மூக்கால் அறிவன - மூவறிவு உயிரினங்கள்.
உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் - கரையான், எறும்பு.

* உடல், நாக்கு, மூக்கு, கண்களால் அறிவன - நான்கறிவு உயிரினங்கள்.
உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணுதல் - நண்டு, தும்பி.

* உடல், நாக்கு, மூக்கு, கண், காதுகளால் அறிவன - ஐந்தறிவு உயிரினங்கள்.
உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணுதல், கேட்டல்
பறவை, விலங்குகள்.

* உடல், நாக்கு, மூக்கு, கண், காது, மனத்தால் அறிவன - ஆறறிவு உயிரினம்.
உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணுதல், கேட்டல், பகுத்தறிதல் - மனிதன்.

***************   *************   *************

3 ) பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக.

* கல்வி உதவித்தொகை பெற இணையவழி விண்ணப்பித்தல்

* பள்ளிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் செலுத்துதல்

* தேர்வு அறை அடையாளச்சீட்டுத் தரவிறக்கம் செய்தல்

* தொழிற்கல்வி நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்தல்

* தேசியத் திறனாய்வுத் தேர்வு, கல்வி உதவித்தொகைத் தேர்வு, ஊரகத் திறனாய்வுத் தேர்வு
ஆகிய அனைத்தும், பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளாகும்.

****************    **************   *******

4 ) மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதில் செயற்கைக்கோள்களின் பங்கு யாது?

*  செயற்கைக்கோள்கள், மக்களின் வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.

*   மனித வாழ்வை எளிதாக்கி, நேரத்தையும் உழைப்பையும் வீணாக்காமல் பயன்பெற உதவுகின்றன.

*   நிலத்தடி நீர்நிலை, எண்ணெய்வளம் காண உதவுகின்றன.

*  நாம் பயன்படுத்தும் திறன்பேசிகள் தானியக்கப் பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் போன்ற அனைத்தின் செயல்பாடுகளுக்கும் செயற்கைக்கோள்கள் அவசியம் தேவை.

*  வங்கிச் செயல்பாடுகள், தொலைக்காட்சி, வானொலி, அறிவியல் தொழில்நுட்பங்கள், உளவு
வேலைகள், தகவல்பரிமாற்றம் எனப் பல்வேறு துறைகளின் நடைமுறைப் பயன்பாட்டுக்குச் செயற்கைக்கோள்கள் உதவுகின்றன.

****************   *************   ************

5 ) வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

      மொழியின் ஆக்கத்திற்குப் புணர்ச்சி இன்றியமையாதது. புணர்ச்சிவிதியில் வல்லெழுத்து மிகவேண்டிய இடத்தில் மிகாமல் இருந்தாலோ, மிகவேண்டாத இடத்தில் மிகுந்தாலோ, தொடரின்
பொருளில் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசைநயமும், தெளிவும் இருக்காது. அதனால், பொருள் உணர்வதில் இடர்ப்பாடும், பொருள் வேறுபாடும் ஏற்பட்டுவிடும்.

எடுத்துக்காட்டு 

மருந்துக்கடை -  மருந்துகள் விற்கப்படும் கடை.

மருந்துகடை - மருந்தைப் பொடியாகக் கடை.

பசிப்பிணி - நாட்டைக் கெடுக்கின்றது -  ஒருமை

பசிபிணி நாட்டைக் கெடுக்கின்றன - பன்மை

பசிப்பிணி - பசியாகிய பிணி - பண்புத்தொகையில் ஒற்றுமிகுந்து ஒருமைவினை கொண்டது.

பசிபிணி பசியும் பிணியும் என்று உம்மைத்தொகைப் பொருளைத் தந்து, பன்மை விகுதி கொண்டன.

திருவளர் செல்வன் - திருமண அழைப்பிதழில் காண்கிறோம்.

பாமரர்கள் கூட 'ஊறுகாய்' என்று கூறுவதைக் காண்கிறோம்; கேட்கிறோம். ‘திருவளர் செல்வன்' என்பதே சரியானதாகும்.

ஊறுகாய் ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய். இது வினைத்தொகை; வல்லினம் மிகாமல் ஊறுகாய் என்று கூறுவதைக் காணலாம்.


*****************    ************   ***********

Post a Comment

1 Comments