9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , மொழியோடு விளையாடு - வினா & விடை / 9th TAMIL - EYAL - 4 , MOZHIYODU VILAIYAADU - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 4 ,  மொழியோடு விளையாடு

அகராதியில் காண்க.

இமிழ்தல் - இனிதாதல், ஒலித்தல், தழைத்தல்.

இசைவு - உடன்பாடு, இணக்கம், பொருத்தம்.

துவனம் - ஒலி, அக்கினி.

சபலை - ஆசை, மெலிவு, மின்னல், இலக்குமி.

துகலம் - நுட்பமான ஒலி.

ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக. (விலங்கு, எழுதி, அகல், கால், அலை)

அ) எண்ணெய் ஊற்றி ------  விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு  ------

விடை : எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்.

ஆ) எனக்கு ------  பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் -----  ஐவை,

விடை: எனக்குக் கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் கால் வை.

இ) கைப்பொருளைக் கடல் -----   யில் தொலைத்துவிட்டுக் கரையில் தேடி------ந்தால் கிடைக்குமா?

(அலை)

விடை: கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டுக் கரையில் தேடி அலைந்தால், கிடைக்குமா?

ஈ) வீட்டு ------ ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து ----- உடன் மட்டுமே பிடித்துச்செல்ல வேண்டும்.

விடை: வீட்டு விலங்கான நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்குடன் மட்டுமே பிடித்துச்செல்ல வேண்டும்.

உ) எழுத்தாணி கொண்டு ----- ய தமிழை, ஏவுகணையில் -------  எல்லாக் கோள்களிலும் ஏற்றுங்கள்.

விடை: எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி, எல்லாக் கோள்களிலும் ஏற்றுங்கள்.

ஒரு தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக.

குவிந்து - குவித்து; சேர்ந்து - சேர்த்து; பணிந்து - பணித்து; பொருந்து - பொருத்து; மாறு - மாற்று.

எ - கா: விரிந்தது - விரித்தது.

அ) மழைக்காற்று வீசியதால், பூவின் இதழ் விரிந்தது; மயில், தோகையை விரித்தது.

ஆ) தலைவரிடம் அதிகாரங்கள் குவிந்து கிடந்தன; அதனால் செல்வங்களைக் குவித்து வைத்தார்.

இ) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர்; பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்த்து வைத்தனர்.

ஈ) பெரியோரைப் பணிந்து வணங்கியபின், உரிய பணிவிடை செய்யப் பணித்தார்.

உ) மனங்கள் பொருந்துவன மக்களின் எண்ணங்களைப் பொறுத்தே அமையும்.

ஊ) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதவும் பேசவும் மாறுமாறு வழிகாட்டி மாற்றினார்.Post a Comment

0 Comments