9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் - மதிப்பீடு - பலவுள் தெரிக / 9th TAMIL - EYAL 4 , MATHIPPEEDU - PALAVUL THERIKA

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

இயல் - 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

* மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள் - 

அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.

ஆ) வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.

இ) திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.

i) அ. ஆ ஆகியன சரி; இ தவறு

ii )  அ, இ ஆகியன சரி; ஆ தவறு

iii) அ தவறு; ஆ, இ ஆகியன சரி

iv) மூன்றும் சரி

விடை : ii )  அ, இ ஆகியன சரி; ஆ தவறு

2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?

அ) தேசியத் திறனறித் தேர்வு 

ஆ) ஊரகத் திறனறித் தேர்வு

இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத் தேர்வு 

ஈ )  மூன்றும் சரி

விடை : ஈ ) மூன்றும் சரி

3. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல் 

ஆ ) தொடு உணர்வு 

இ) கேட்டல் 

ஈ) காணல்

விடை : ஆ ) தொடு உணர்வு

4. பின்வரும் தொடர்களைப் படித்து 'நான்' யார் என்று கண்டுபிடிக்க.

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்

எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன்

இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்

அ) இணையம்

ஆ) தமிழ்

இ) கணினி

ஈ ) ஏவுகணை

விடை : ஈ ) ஏவுகணை

5 ) விடை வரிசையைத் தேர்க.

அ) இது செயற்கைக்கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.

ஆ) இது கடல்பயணத்துக்காக உருவாக்கப்பட்ட செயலி.

அ ) நேவிக், சித்தாரா

ஆ ) நேவிக், வானூர்தி

இ ) வானூர்தி, சித்தாரா 

ஈ ) சித்தாரா, நேவிக்


விடை ) ஈ ) சித்தாரா , நேவிக்

Post a Comment

0 Comments