9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர் - பாடப்பகுதி குறுவினா - விடை / 9th TAMIL - EYAL 4 - KURUVINA & VIDAI

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 4 , எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

பாடப்பகுதி குறுவினாக்கள்

வினாக்களும் விடைகளும்

1.கூட்டுப் புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக.

* கூட்டினுள் இருக்கும் புழுவானது தனது பொறுமை என்னும் முயற்சியாலேயே பட்டுப்பூச்சியாய் அழகிய வடிவுடன் வெளிவருகிறது.

* அதுபோலப் பொறுமை, அடக்கம் என்கிற கட்டுப்பாடுகளைக் கடக்காமல் செயல்படுவோமானால்ஙநிறைவான வாழ்வை எளிதில் பெறலாம்.

2 ) இணையவழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.

* தானியக்கப் பண இயந்திரம்

அட்டை பயன்படுத்தும் இயந்திரம்

* திறனட்டைக் கருவி

* ஆளறி சோதனைக் கருவி

* இணைய வழிப் பதிவு முதலானவை, இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்.


3 ) மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே - 

        இவ்வடிகளில் தொல்காப்பியர் குறிப்பிடும் மூவறிவு, நான்கறிவு, ஐந்தறிவு உயிர்கள் யாவை?

மூவறிவு - கரையான், எறும்பு. 

நான்கறிவு - நண்டு, தும்பி. 

ஐந்தறிவு -  பறவை, விலங்கு.


4 ) செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும் செயலியைப் பற்றித் திரு. சிவன் கூறுவது யாது?

* செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தப்படும் செயலியின் பெயர் ‘சித்தாரா'.

* ஒரு கல்லைத் தூக்கி வீசும் போது, அந்தக் கல் எந்தத் திசையில், எவ்வளவு கோணத்தில், எவ்வளவு நேரத்தில், எந்த இடத்தில், எவ்வளவு அழுத்தத்தில் விழும் என்று கணக்கிட்டுச் சொல்வதுபோலச் செயற்கைக் கோள் ஏவு ஊர்தி பற்றிய விவரங்களை மின்னிலக்க முறையில்
சேகரித்துச் சேமித்துக் கணிக்க உதவுவது, ‘சித்தாரா'வின் பணியாகும்.

* அனைத்துச் செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளுக்கும், 'சித்தாரா' செயலி பொருத்தப்படுகிறது.

**************   ****************   **********


Post a Comment

0 Comments