ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் 4 , வல்லினம் மிகாஇடங்கள்
கற்பவை கற்றபின்
1 ) வல்லினம் வருமா?
வல்லினமெய் மிகுந்து வராது.
அ) தோழி - கூற்று - தோழி கூற்று
ஆ) பெரிய - தம்பி - பெரிய தம்பி
இ) சிறிய - பறவை - சிறிய பறவை
ஈ ) பழகு - தமிழ் - பழகு தமிழ்
உ) இது - கேள் - இது கேள்
ஊ) எலி - கடிக்கும் - எலி கடிக்கும்
எ )ஓடிய - குதிரை - ஓடிய குதிரை
ஏ) தரும்படி- சொன்னார் - தரும்படி சொன்னார்
ஐ) வாழ்க - தலைவர் - வாழ்க தலைவர்
ஒ) கார் - காலம் - கார்காலம்
வல்லினம் இடலாமா?
வல்லினமெய் இடுதல் கூடாது.
அ) வாழ்த்து - கள் - வாழ்த்துகள்
ஆ) எழுத்து - கள் - எழுத்துகள்
இ) திருநிறை - செல்வன் - திருநிறை செல்வன்
ஈ) திருவளர் - செல்வி - திருவளர் செல்வி
4. எது சரி? எது தவறு? காரணம் கூறுக.
அ) 'அண்ணாமலை பல்கலைக்கழகம்' - சரி.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - தவறு.
நிலைமொழி உயர்திணையில் அமையும் பெயர்த்தொகையில் வல்லினம் மிகாது.
ஆ) அத்தனைச் சிறிய - தவறு ('அத்தனை' என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகாது.)
இ) ஆத்திச்சூடி - தவறு (இரண்டாம் வேற்றுமைத்தொகையில் மிகாது.)
ஈ) எடுத்துக்காட்டுகள் - சரி (வன்தொடர் குற்றியலுகரத்தில் மிகும்.)
உ) கீழ்பக்கம் - தவறு (திசைப்பெயர்களில் வல்லினம் மிகும்.)
ஊ) சான்றோர் பேரவை-சரி
(நிலைமொழி உயர்திணையாய் அமையும் பெயர்த்தொகையில் மிகாது.
எ) சென்னைப் பல்கலைக்கழகம் - சரி
(இடப்பெயர்முன் வல்லினம் மிகும்)
ஏ) தயிர்ச்சோறு - சரி (இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் மிகும்.)
கீழ்க்காணும் தொடர்களில் வல்லினம் மிகும், மிகா இடங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கான இலக்கணங்களை அறிக.
அ) வங்கி கடன்
ஆறாம் வேற்றுமைத்தொகையில் மிகாது.
ஆ) பழங்களை பறிக்காதீர்கள் இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்
(பழங்களைப் பறிக்காதீர்கள்)
இ) திட்ட குழு
மகர ஈற்றுப் பெயருடன் வல்லினம் மிகும் (திட்டக்குழு)
ஈ) அரசு ஆணை பிறப்பித்தது
இரண்டாம் வேற்றுமைத்தொகையில் மிகாது.
உ) மருந்து கடை -
இரண்டாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டால் மிகாது.
ஊ . வேலையில்லா பட்டதாரி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும். (வேலையில்லாப்
பட்ட தாரி)
எ) சிறப்பு பரிசு -,இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் மிகும் (சிறப்புப் பரிசு).
2 Comments
Yogalakshmi
ReplyDeleteVijayakumr
ReplyDelete